• Dec 04 2024

இந்தியாவிலுள்ள அனலைதீவு கடற்தொழிலாளர்களை நாட்டிற்கு அழைத்துவருமாறு கோரிக்கை!

Chithra / Dec 4th 2024, 11:15 am
image


தமிழ்நாடு, திருச்சி சிறப்பு முகாமில் தடுத்து வைக்கப்பட்டுள்ள அனலைதீவு கடற்தொழிலாளர்களை இலங்கைக்கு அழைத்துவருவதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுக்கவேண்டும் என உறவினர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

கடந்த ஜூன் மாதம் 10ஆம் திகதி அனலைதீவு பகுதியில் இருந்து கடற்தொழிலுக்கு படகொன்றில் சென்ற இரண்டு கடற்தொழிலாளர்கள், கடற்சீற்றம் காரணமாக தமிழக கடற்பரப்பினுள் தத்தளித்த நிலையில், தமிழக கடற்தொழிலாளர்களால் மீட்கப்பட்டு தமிழக கடலோர காவல் படையினரிடம் ஒப்படைக்கப்பட்டனர்.

அவர்கள் இருவரும் விசாரணைகளின் பின்னர் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் கடந்த 30ஆம் திகதி நீதிமன்றால் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.

எனவே  அவர்கள் இருவரையும், அவர்களின் படகு மற்றும் அதன் வெளியிணைப்பு இயந்திரத்துடன் கடல் வழியாக விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என உறவினர்கள் கோரியுள்ளனர்.


இந்தியாவிலுள்ள அனலைதீவு கடற்தொழிலாளர்களை நாட்டிற்கு அழைத்துவருமாறு கோரிக்கை தமிழ்நாடு, திருச்சி சிறப்பு முகாமில் தடுத்து வைக்கப்பட்டுள்ள அனலைதீவு கடற்தொழிலாளர்களை இலங்கைக்கு அழைத்துவருவதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுக்கவேண்டும் என உறவினர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.கடந்த ஜூன் மாதம் 10ஆம் திகதி அனலைதீவு பகுதியில் இருந்து கடற்தொழிலுக்கு படகொன்றில் சென்ற இரண்டு கடற்தொழிலாளர்கள், கடற்சீற்றம் காரணமாக தமிழக கடற்பரப்பினுள் தத்தளித்த நிலையில், தமிழக கடற்தொழிலாளர்களால் மீட்கப்பட்டு தமிழக கடலோர காவல் படையினரிடம் ஒப்படைக்கப்பட்டனர்.அவர்கள் இருவரும் விசாரணைகளின் பின்னர் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் கடந்த 30ஆம் திகதி நீதிமன்றால் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.எனவே  அவர்கள் இருவரையும், அவர்களின் படகு மற்றும் அதன் வெளியிணைப்பு இயந்திரத்துடன் கடல் வழியாக விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என உறவினர்கள் கோரியுள்ளனர்.

Advertisement

Advertisement

Advertisement