• Oct 07 2026

மரணப் பொறியிலிருந்து மக்களை மீட்டெடுங்கள்! அரசுக்கு சஜித் பகிரங்க எச்சரிக்கை

Aathira / Oct 6th 2026, 7:00 am
image

இந்த அரசு மக்கள் மீது வரிக்கு மேல் வரிகளை விதித்து, வற் வரியை அதிகரித்து, அரச வருமானத்தை அதிகரித்துள்ளது. மக்களை அழிவுக்குள்ளாக்கும் இந்த வரி மரணப் பொறியிலிருந்து மக்களை விடுவிக்க வேண்டும்.

இவ்வாறு எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ, அரசிடம் வலியுறுத்தியுள்ளார்.

சர்வதேச நாணய நிதியத்தின் நிபந்தனைகளுக்கு அடிபணிந்து செயற்படாமல், திறைசேரியில் சேமிக்கப்பட்டுள்ள பணத்தைப் பயன்படுத்தி எரிபொருள் மீதான சலுகைகளை மக்களுக்குப் பெற்றுக் கொடுக்குமாறும் அவர் அரசிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

விசேட கூற்றொன்றை முன்வைத்து ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் கூறுகையில்,

தேர்தல் விஞ்ஞாபனத்தில் உறுதியளித்தவாறு சர்வதேச நாணய நிதியத்துடன் கைச்சாத்திடப்பட்ட கடன் நிலைபேறாக்கல் இணக்கப்பாட்டை மாற்றியமைக்க அரசு தவறிவிட்டது. தற்போது பழைய முறைமையிலேயே அந்த இணக்கப்பாடுகள் தொடர்வதால் அதுவே அரசுக்குத் திரும்பித் தாக்கும் ஆயுதமாக மாறியுள்ளது.

துறைமுகத்தில் இறக்குமதி செய்யப்படும் விலைக்கு எரிபொருளை வழங்குவோம் என்ற வாக்குறுதியை மீறி, செலவை ஈடுகட்டும் எரிபொருள் விலை நிர்ணயத்தை நடைமுறைப்படுத்த இந்த அரசுக்கு எந்த உரிமையும் இல்லை.

அரசு குறிப்பிடுவது போல 17 ஆயிரத்து 315 ரூபாவைக் கொண்டு ஒருவரால் மாதத்தில் வாழ முடியாது. தொகை மதிப்பு மற்றும் புள்ளிவிபரவியல் திணைக்களத்தின் போலியான தரவுகளைப் பயன்படுத்தாமல், மின்சார நுகர்வு போன்ற முறைகள் ஊடாக குறைந்த வருமானம் பெறுவோரை விஞ்ஞானபூர்வமாக அடையாளம் கண்டு சலுகைகளை வழங்க வேண்டும்.

செல்வந்தர்களுக்கு அல்லாமல், பொருளாதார நெருக்கடிகளுக்கு முகங்கொடுத்துள்ள சாதாரண மக்களுக்குத் திட்டவட்டமான பொறிமுறை ஊடாகச் சலுகைகளை வழங்குவதற்கு எதிர்க்கட்சி எப்போதும் எதிர்ப்புத் தெரிவிக்காது.

இனிமேலாவது ஐ.எம்.எவ்பின்  கைப்பாவையாக மாறிவிடாமல், மக்கள் அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றி, திறைசேரி நிதியைப் பயன்படுத்தி எரிபொருள் நிவாரணங்களை வழங்குமாறு அரசைக் கேட்டுக்கொள்கின்றேன். - என்றார்.

மரணப் பொறியிலிருந்து மக்களை மீட்டெடுங்கள் அரசுக்கு சஜித் பகிரங்க எச்சரிக்கை இந்த அரசு மக்கள் மீது வரிக்கு மேல் வரிகளை விதித்து, வற் வரியை அதிகரித்து, அரச வருமானத்தை அதிகரித்துள்ளது. மக்களை அழிவுக்குள்ளாக்கும் இந்த வரி மரணப் பொறியிலிருந்து மக்களை விடுவிக்க வேண்டும்.இவ்வாறு எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ, அரசிடம் வலியுறுத்தியுள்ளார்.சர்வதேச நாணய நிதியத்தின் நிபந்தனைகளுக்கு அடிபணிந்து செயற்படாமல், திறைசேரியில் சேமிக்கப்பட்டுள்ள பணத்தைப் பயன்படுத்தி எரிபொருள் மீதான சலுகைகளை மக்களுக்குப் பெற்றுக் கொடுக்குமாறும் அவர் அரசிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.விசேட கூற்றொன்றை முன்வைத்து ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.அவர் மேலும் கூறுகையில்,தேர்தல் விஞ்ஞாபனத்தில் உறுதியளித்தவாறு சர்வதேச நாணய நிதியத்துடன் கைச்சாத்திடப்பட்ட கடன் நிலைபேறாக்கல் இணக்கப்பாட்டை மாற்றியமைக்க அரசு தவறிவிட்டது. தற்போது பழைய முறைமையிலேயே அந்த இணக்கப்பாடுகள் தொடர்வதால் அதுவே அரசுக்குத் திரும்பித் தாக்கும் ஆயுதமாக மாறியுள்ளது.துறைமுகத்தில் இறக்குமதி செய்யப்படும் விலைக்கு எரிபொருளை வழங்குவோம் என்ற வாக்குறுதியை மீறி, செலவை ஈடுகட்டும் எரிபொருள் விலை நிர்ணயத்தை நடைமுறைப்படுத்த இந்த அரசுக்கு எந்த உரிமையும் இல்லை.அரசு குறிப்பிடுவது போல 17 ஆயிரத்து 315 ரூபாவைக் கொண்டு ஒருவரால் மாதத்தில் வாழ முடியாது. தொகை மதிப்பு மற்றும் புள்ளிவிபரவியல் திணைக்களத்தின் போலியான தரவுகளைப் பயன்படுத்தாமல், மின்சார நுகர்வு போன்ற முறைகள் ஊடாக குறைந்த வருமானம் பெறுவோரை விஞ்ஞானபூர்வமாக அடையாளம் கண்டு சலுகைகளை வழங்க வேண்டும்.செல்வந்தர்களுக்கு அல்லாமல், பொருளாதார நெருக்கடிகளுக்கு முகங்கொடுத்துள்ள சாதாரண மக்களுக்குத் திட்டவட்டமான பொறிமுறை ஊடாகச் சலுகைகளை வழங்குவதற்கு எதிர்க்கட்சி எப்போதும் எதிர்ப்புத் தெரிவிக்காது.இனிமேலாவது ஐ.எம்.எவ்பின்  கைப்பாவையாக மாறிவிடாமல், மக்கள் அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றி, திறைசேரி நிதியைப் பயன்படுத்தி எரிபொருள் நிவாரணங்களை வழங்குமாறு அரசைக் கேட்டுக்கொள்கின்றேன். - என்றார்.

Advertisement

Advertisement

Advertisement