வடமராட்சி கிழக்கு மருதங்கேணி பகுதியில் தாளையடி நன்னீர் திட்ட நிறுவன அதிகாரிகளுக்கும் பிரதேச மக்களுக்கும் இடையில் முறுகல் நிலை ஏற்பட்டுள்ளது.
வடமராட்சி கிழக்கு தாளையடி பகுதியில் தாளையடி நன்னீர் திட்ட நிறுவனம் வீதிகளை அகழ்ந்து நன்னீர் குழாய்களை அமைக்கும் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
மக்கள் குடியிருப்பு பகுதிகள் காணப்படும் வீதிகளுக்கு அருகில் வீதிகளைக் அகழ்ந்து குழாய்களை அமைத்து வருகின்றனர்.
குழாய்களை அமைத்த பின் குறித்த வீதிகளை புனர்நிர்மானம் செய்யாமல் அலட்சியமாக விட்டு செல்கின்றனர். இதனால் மருதங்கேணி உள்ளக வீதிகள் பெரும் சேதத்துக்குள்ளாகி பயணிக்க முடியாத நிலையில் உள்ளது
கனரக வாகனங்கள் உள்வீதியால் பயணிக்க தடை காணப்படுகின்ற வேளையிலும் கனரக வாகனங்களை உள்வீதி ஊடாக கொண்டு வந்து வீதிகளை சேதப்படுத்தியுள்ளனர்.
உரிய முறையில் மருதங்கேணி பிரதேச மக்களால் நன்னீர் திட்ட அதிகாரிகளுக்கு தெரியப்படுத்தியும் கடந்த ஆறு மாதங்களாக பொய் வாக்குறுதிகளை கொடுத்து மக்களை ஏமாற்றி வருவதாக அப்பகுதி மக்கள் குற்றம்சாட்டுகின்றனர்.
மக்களின் கோரிக்கையை அலட்சியப்படுத்தி விட்டு நன்னீர் திட்ட அதிகாரிகள் ஏனைய பகுதியில் தமது வேலையை முன்னெடுத்துக் கொண்டிருந்த வேளையே இளைஞர்கள் குவிந்து வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
சம்பவத்தையடுத்து அப்பகுதிக்கு விரைந்த தேசிய மக்கள் சக்தியின் பருத்தித்துறை பிரதேச சபை உறுப்பினரும், தாளையடி நன்னீர் திட்ட மக்கள் தொடர்பாடல் அதிகாரியுமான பரிதா, தான் தோன்றித்தனமாக பதில் அளித்ததால் இளைஞர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டு மேல் அதிகாரியை அழைத்தனர்.
குறித்த இடத்திற்கு சென்ற மேலதிக அதிகாரி ஒருவர், இன்று உரிய பதிலை வழங்குவதாக கூறிவிட்டு அனைத்துப் பணிகளையும் நிறுத்திவிட்டுச் சென்றனர்.
அங்கு சென்றிருந்து பருத்தித்துறை பிரதேச சபையின் தமிழரசு கட்சி உறுப்பினர் வேலாயுதம் சசிகாந்த் குறித்த வீதியை பார்வையிட்டதுடன் குறித்த வீதி மிகப் படுமோசமான முறையில் காணப்படுவதாக தெரிவித்தார்.
நன்னீர் குழாய்களை அமைக்க அகழப்பட்ட குடியிருப்பு வீதிகள்; பல காலங்களாக மூடப்படவில்லை- பிரதேசசபை உறுப்பினருடன் முறுகல் வடமராட்சி கிழக்கு மருதங்கேணி பகுதியில் தாளையடி நன்னீர் திட்ட நிறுவன அதிகாரிகளுக்கும் பிரதேச மக்களுக்கும் இடையில் முறுகல் நிலை ஏற்பட்டுள்ளது.வடமராட்சி கிழக்கு தாளையடி பகுதியில் தாளையடி நன்னீர் திட்ட நிறுவனம் வீதிகளை அகழ்ந்து நன்னீர் குழாய்களை அமைக்கும் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். மக்கள் குடியிருப்பு பகுதிகள் காணப்படும் வீதிகளுக்கு அருகில் வீதிகளைக் அகழ்ந்து குழாய்களை அமைத்து வருகின்றனர்.குழாய்களை அமைத்த பின் குறித்த வீதிகளை புனர்நிர்மானம் செய்யாமல் அலட்சியமாக விட்டு செல்கின்றனர். இதனால் மருதங்கேணி உள்ளக வீதிகள் பெரும் சேதத்துக்குள்ளாகி பயணிக்க முடியாத நிலையில் உள்ளதுகனரக வாகனங்கள் உள்வீதியால் பயணிக்க தடை காணப்படுகின்ற வேளையிலும் கனரக வாகனங்களை உள்வீதி ஊடாக கொண்டு வந்து வீதிகளை சேதப்படுத்தியுள்ளனர். உரிய முறையில் மருதங்கேணி பிரதேச மக்களால் நன்னீர் திட்ட அதிகாரிகளுக்கு தெரியப்படுத்தியும் கடந்த ஆறு மாதங்களாக பொய் வாக்குறுதிகளை கொடுத்து மக்களை ஏமாற்றி வருவதாக அப்பகுதி மக்கள் குற்றம்சாட்டுகின்றனர். மக்களின் கோரிக்கையை அலட்சியப்படுத்தி விட்டு நன்னீர் திட்ட அதிகாரிகள் ஏனைய பகுதியில் தமது வேலையை முன்னெடுத்துக் கொண்டிருந்த வேளையே இளைஞர்கள் குவிந்து வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.சம்பவத்தையடுத்து அப்பகுதிக்கு விரைந்த தேசிய மக்கள் சக்தியின் பருத்தித்துறை பிரதேச சபை உறுப்பினரும், தாளையடி நன்னீர் திட்ட மக்கள் தொடர்பாடல் அதிகாரியுமான பரிதா, தான் தோன்றித்தனமாக பதில் அளித்ததால் இளைஞர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டு மேல் அதிகாரியை அழைத்தனர். குறித்த இடத்திற்கு சென்ற மேலதிக அதிகாரி ஒருவர், இன்று உரிய பதிலை வழங்குவதாக கூறிவிட்டு அனைத்துப் பணிகளையும் நிறுத்திவிட்டுச் சென்றனர். அங்கு சென்றிருந்து பருத்தித்துறை பிரதேச சபையின் தமிழரசு கட்சி உறுப்பினர் வேலாயுதம் சசிகாந்த் குறித்த வீதியை பார்வையிட்டதுடன் குறித்த வீதி மிகப் படுமோசமான முறையில் காணப்படுவதாக தெரிவித்தார்.