சேத்தபொல பிரதேசத்தில் உணவகம் ஒன்றில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 20 கிலோ கிராம் காட்டு பன்றி இறைச்சியுடன் குறித்த உணவகத்தின் உரிமையாளர் கைது செய்யப்பட்டுள்ளார்.
மதுரங்குளி - செம்பட்ட பகுதியைச் சேர்ந்த 34 வயதுடைய உணவகம் ஒன்றின் உரிமையாளரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக வனவிலங்கு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
குறித்த உணவகத்தில் நீண்ட காலமாக அங்கு பல மது அருந்த வருபவர்களுக்கு, காட்டுப்பன்றி உள்ளிட்ட வன விலங்குகளின் இறைச்சியை கறியாக தயாரித்து வருகின்றனர் என வனவிலங்கு அதிகாரிகளின் விசாரணையின் போது தெரியவந்துள்ளது.
விமானப்படை புலனாய்வு அதிகாரிகளுக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் , பொலிஸ் விசேட அதிரடிப்படை அதிகாரிகளின் ஒத்துழைப்புடன் வனவிலங்கு அதிகாரிகள் குறித்த உணவகத்தை சோதனையிட்ட போதே சந்தேக நபர் கைது செய்யப்பட்டதுடன், அங்கு குளிர்சாதனப் பெட்டியில் இருந்து காட்டுப் பன்றி இறைச்சியும் கைப்பற்றப்பட்டுள்ளது எனத் தெரிவிக்கப்படுகிறது.
காட்டுப் பன்றியை வைத்திருந்த உணவகத்தின் உரிமையாளர் கைது. சேத்தபொல பிரதேசத்தில் உணவகம் ஒன்றில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 20 கிலோ கிராம் காட்டு பன்றி இறைச்சியுடன் குறித்த உணவகத்தின் உரிமையாளர் கைது செய்யப்பட்டுள்ளார்.மதுரங்குளி - செம்பட்ட பகுதியைச் சேர்ந்த 34 வயதுடைய உணவகம் ஒன்றின் உரிமையாளரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக வனவிலங்கு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.குறித்த உணவகத்தில் நீண்ட காலமாக அங்கு பல மது அருந்த வருபவர்களுக்கு, காட்டுப்பன்றி உள்ளிட்ட வன விலங்குகளின் இறைச்சியை கறியாக தயாரித்து வருகின்றனர் என வனவிலங்கு அதிகாரிகளின் விசாரணையின் போது தெரியவந்துள்ளது.விமானப்படை புலனாய்வு அதிகாரிகளுக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் , பொலிஸ் விசேட அதிரடிப்படை அதிகாரிகளின் ஒத்துழைப்புடன் வனவிலங்கு அதிகாரிகள் குறித்த உணவகத்தை சோதனையிட்ட போதே சந்தேக நபர் கைது செய்யப்பட்டதுடன், அங்கு குளிர்சாதனப் பெட்டியில் இருந்து காட்டுப் பன்றி இறைச்சியும் கைப்பற்றப்பட்டுள்ளது எனத் தெரிவிக்கப்படுகிறது.