• Dec 25 2024

மியன்மார் அகதிகளுக்கு யுத்த கொடூரத்தால் பாதிக்கப்பட்ட மக்கள் செய்த உதவு - அருட்தந்தை மா.சத்திவேல் வரவேற்பு

Chithra / Dec 24th 2024, 3:27 pm
image


 

உயிர் பாதுகாப்பு கோரி மியன்மார் அகதிகள் முல்லைத்தீவு கடலில் தத்தளித்த போது யுத்த கொடூரத்தால் பாதிக்கப்பட்ட மீனவ சங்கமும் பொதுமக்களும் அவர்களுக்கு வேண்டிய அடிப்படைத் தேவைகளை செய்தமை வரவேற்கத்தக்கது. இதுவே இயேசு வாழ்வாகும்.என சமூக நீதிக்கான செயற்பாட்டாளரும், அரசியல் கைதிகளை விடுதலை  செய்வதற்கான தேசிய அமைப்பின் இணைப்பாளருமான அருட்தந்தை மா.சத்திவேல் தெரிவித்துள்ளார்.

அவரால் இன்று (24.12.2024) வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையிலே இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அவ் அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

முழு உலக வாழ் மக்களோடு இலங்கையர்களும் இயேசு பிறப்பு விழாவிற்கும் புது வருடத்தை வரவேற்கவும் தம்மை ஆயத்தப்படுத்திக் கொண்டுள்ளனர். இயேசு "இறைமகன்" என்பதோடு; "இறைவனே மகனானார், மனிதமானார்" எனவும் கூறப்படுவது அன்பு உருவான நீதியின் பிறப்பு என்பதே உண்மையும் ஆழமான கிறிஸ்தவ நற்செய்தி எனலாம்.

இத்தகைய நற்செய்திமிகு வாழ்வு இன்றும் பல்வேறு சவால்களுக்கு முகம் கொடுக்கும் நம் காலகட்டத்தில் இயேசு வாழ்வின் வழியில் மனிதம் நிறைந்த நீதியின் சமூகம் உருவாக்க போராட்டமிகு வாழ்வை தமதாக்கியவர்களுக்கு வாழ்த்து தெரிவிப்பதோடு மனிதம் மகிழும் அமைதியும் நீதியும் அடக்கி ஒடுக்கப்படும் மக்களுக்கு கிடைக்க உழைப்பதே இயேசு பிறப்பு வாழ்வின் விழாவாக அமையும் என்பதிலே நாம் உறுதி கொள்வோம்.

"இறைமகன்", "மனுமகன்", "சமாதான அரசர்","நீதி உயிர்" என யாருடைய பிறப்புக்கு விழா எடுக்கின்றோமோ அவர் பிறந்த மண் இரத்தத்தில் தோய்ந்துள்ளது. 

நடந்து கொண்டிருக்கின்ற கொடூர யுத்தத்தால் ஆண்களும் பெண்களுமாக அப்பாவிகளும், கர்ப்பிணித் தாய்மாரும், பச்சிளம் குழந்தைகளும் அநியாயமாக தினம் தினம் கொல்லப்பட்டுக் கொண்டிருக்கின்றனர்.

இயேசு பிறந்த பூமியில் மரண ஓலம் வானை தொட்டுக் கொண்டிருக்கின்றது. மரண பயத்தோடு வாழ்வுக்கு ஏங்கும் மக்கள் மத்தியில் இயேசு பிறப்பை கொண்டாடும் வல்லரசுகளும் அவர்கள் சார்ந்த நாடுகளும் பாதிக்கப்பட்ட மக்களின் குரலுக்கு செவி கொடுக்காத மட்டுமல்ல; உலக அமைதிக்காக உருவாக்கப்பட்ட ஐக்கிய நாடுகள் சதையும், ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையும் கையறு நிலையில் உள்ளன. உலகெங்கும் நீதிக்காக எழுப்பும் குரல் சர்வதேசத்தின் எந்த காதுகளையும் எட்டவில்லை.

இந்நிலையில் உலக நாடுகளும் அமைதி மற்றும் நீதியை உருவாக்க உருவான அமைப்புகளும் இயேசு விழாவை கொண்டாடுவதில் என்ன நியாயம் உள்ளது? எனக் கேட்க தன் தோன்றுகிறது.

பாலஸ்தீனத்தில் இருந்து இதுவரை கிடைத்த தகவலின் அடிப்படையில் யுத்தத்தில் சிக்குண்ட பல நூற்றுக்கணக்கான குடும்பங்களில் எவருமே உயிரோடு இல்லை என கூறப்படுகின்றது. 

மேலும் 1367 குடும்பங்களில் ஒரு குடும்பத்திலும் ஒருவர் மட்டுமே உயிர் தப்பியுள்ளதாகவும், 10 ஆயிரத்துக்கு மேற்பட்ட குழந்தைகள் கொல்லப்பட்டுள்ளதாகவும் 5000 அதிகமான குழந்தைகள் கட்டட இடிப்பாடுகளுக்குள் நசுங்கிக் கொள்ளப்பட்டதாகவும் செய்திகள் வெளி வருவதோடு குழந்தைகள், பிள்ளைகள், கர்ப்பிணி தாய்மார், வயதுமிகுந்தோர் என இன்னும் பல ஆயிரக்கணக்கானோர் பாதுகாப்பு, போசாக்கான உணவு, மருத்துவ வசதி இன்றி வாடுவதோடு மனநிலை பிறழ்ந்து இருப்பதாகவும் கூறப்படுகின்றது. இது நீதி, அமைதி விரும்பும் மக்கள் ஏற்காத கொடுமையாகும். யுத்தம் நடக்கின்ற எல்லா நாடுகளிலும் இதே நிலையே.

நாமும் இத்தகைய எல்லா கொடுமைகளையும் அனுபவித்து இனப்படுகொலை, யுத்த குற்றங்கள், இராணுவத்தால் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர், அரசியல் கைதிகள் விடுதலை என்பவற்றோடு பலவந்தமாக படையினால் கையகப்படுத்திய காணிகளை விடுவிக்க கோரியும் கடந்த 15 ஆண்டுகளாக குரல் எழுப்பிக் கொண்டிருக்கின்றோம். நீதியை பெற்றுக் கொடுப்பதற்கு எந்த சர்வதேச அமைப்புக்களாலும் இதுவரை இயலாமல் உள்ளது. இது இயேசு பிறப்பிற்கு சவால்விடும் கொலை கொடூர ஏரோது மன்னன் மனநிலையாகும்.

இன்று மாற்றம் என நாட்டை வழி நடத்தும் தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் நம்பிக்கை தரும் செயற்பாடுகளில் இதுவரை இறங்கவில்லை. இதுவே சிங்கள பௌத்த பெரும்பான்மை ஆதிக்க மனநிலையுமாகும்.

இத்தகைய மனநிலை கொண்ட ஆட்சியாளர்களிடம் உயிர் பாதுகாப்பு கோரி மியன்மார் அகதிகள் முல்லைத்தீவு கடலில் தத்தளித்த போது யுத்த கொடூரத்தால் பாதிக்கப்பட்ட மீனவ சங்கமும் பொதுமக்களும் அவர்களுக்கு வேண்டிய அடிப்படைத் தேவைகளை செய்து செய்தமை வரவேற்கத்தக்கது. இதுவே இயேசு வாழ்வாகும். இயேசு பிறப்பு விழா வாழ்வுமாகும்.

அன்று சமயமும் அரசியலும் அதனுடன் தொடர்புடைய அனைத்து கட்டமைப்புகளும் அவர்கள் உருவாக்கிய சட்டங்களும் வாழ்வு கலாச்சாரமும் அடிமட்ட ஏழை மக்களின் வாழ்க்கையை பறித்து சீரழித்துக் கொண்டிருக்கையில் அவற்றுக்கு எதிரான கடவுளின் தலையீடாகவே இயேசு பிறப்பு நிகழ்ந்தது. இயைசுவும் தம் வாழ்நாள் முழுவதும் அடக்கி ஒடுக்கப்பட்டு குரலற்றவர்களாக வாழ்ந்தவர்களின் பக்கம் நின்று நீதி குரலை உயர்த்தினார். அத்தகைய நீதிகுரல் வாழ்வு மைய சமூக இயக்கத்தை உருவாக்க செயற்பட்டார்.

இத்தகைய சமூக இயக்கத்தால் மட்டுமே இன,மொழி, சமய பேரினவாதத்திற்கும் அதன் பாதுகாவலர்களுக்கும் சவால் விட முடியும். புதிய சமூகத்தை உருவாக்க முடியும். அத்தகைய உருவாக்கத்திற்கான செயல்பாட்டுக்கு உந்து சக்தியாகவே இயேசு பிறப்பு விழா வருடம் தோறும் நாம் கொண்டாடுகின்றோம்.அந்த இயக்கத்தின் மக்களாக அனைத்து வகையான அநீதிகளுக்கும் எதிராக குரல் கொடுத்து புதிய சமூகத்தை உருவாக்கிட வழி சமைப்பதே இயேசு பிறப்பு விழாவாக அமையட்டும். 

இத்தகைய விழா வாழ்வை தமதாக்கும் அனைவருக்கும் வாழ்த்துக்கள். அவர்களால் உருவாக்கம் பெறும் நீதியும் சமாதானமும் நாட்டிற்கு இறை அமைதியை தருவதாக அமையட்டும். என்றார்.


மியன்மார் அகதிகளுக்கு யுத்த கொடூரத்தால் பாதிக்கப்பட்ட மக்கள் செய்த உதவு - அருட்தந்தை மா.சத்திவேல் வரவேற்பு  உயிர் பாதுகாப்பு கோரி மியன்மார் அகதிகள் முல்லைத்தீவு கடலில் தத்தளித்த போது யுத்த கொடூரத்தால் பாதிக்கப்பட்ட மீனவ சங்கமும் பொதுமக்களும் அவர்களுக்கு வேண்டிய அடிப்படைத் தேவைகளை செய்தமை வரவேற்கத்தக்கது. இதுவே இயேசு வாழ்வாகும்.என சமூக நீதிக்கான செயற்பாட்டாளரும், அரசியல் கைதிகளை விடுதலை  செய்வதற்கான தேசிய அமைப்பின் இணைப்பாளருமான அருட்தந்தை மா.சத்திவேல் தெரிவித்துள்ளார்.அவரால் இன்று (24.12.2024) வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையிலே இவ்வாறு தெரிவித்துள்ளார்.அவ் அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,முழு உலக வாழ் மக்களோடு இலங்கையர்களும் இயேசு பிறப்பு விழாவிற்கும் புது வருடத்தை வரவேற்கவும் தம்மை ஆயத்தப்படுத்திக் கொண்டுள்ளனர். இயேசு "இறைமகன்" என்பதோடு; "இறைவனே மகனானார், மனிதமானார்" எனவும் கூறப்படுவது அன்பு உருவான நீதியின் பிறப்பு என்பதே உண்மையும் ஆழமான கிறிஸ்தவ நற்செய்தி எனலாம்.இத்தகைய நற்செய்திமிகு வாழ்வு இன்றும் பல்வேறு சவால்களுக்கு முகம் கொடுக்கும் நம் காலகட்டத்தில் இயேசு வாழ்வின் வழியில் மனிதம் நிறைந்த நீதியின் சமூகம் உருவாக்க போராட்டமிகு வாழ்வை தமதாக்கியவர்களுக்கு வாழ்த்து தெரிவிப்பதோடு மனிதம் மகிழும் அமைதியும் நீதியும் அடக்கி ஒடுக்கப்படும் மக்களுக்கு கிடைக்க உழைப்பதே இயேசு பிறப்பு வாழ்வின் விழாவாக அமையும் என்பதிலே நாம் உறுதி கொள்வோம்."இறைமகன்", "மனுமகன்", "சமாதான அரசர்","நீதி உயிர்" என யாருடைய பிறப்புக்கு விழா எடுக்கின்றோமோ அவர் பிறந்த மண் இரத்தத்தில் தோய்ந்துள்ளது. நடந்து கொண்டிருக்கின்ற கொடூர யுத்தத்தால் ஆண்களும் பெண்களுமாக அப்பாவிகளும், கர்ப்பிணித் தாய்மாரும், பச்சிளம் குழந்தைகளும் அநியாயமாக தினம் தினம் கொல்லப்பட்டுக் கொண்டிருக்கின்றனர்.இயேசு பிறந்த பூமியில் மரண ஓலம் வானை தொட்டுக் கொண்டிருக்கின்றது. மரண பயத்தோடு வாழ்வுக்கு ஏங்கும் மக்கள் மத்தியில் இயேசு பிறப்பை கொண்டாடும் வல்லரசுகளும் அவர்கள் சார்ந்த நாடுகளும் பாதிக்கப்பட்ட மக்களின் குரலுக்கு செவி கொடுக்காத மட்டுமல்ல; உலக அமைதிக்காக உருவாக்கப்பட்ட ஐக்கிய நாடுகள் சதையும், ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையும் கையறு நிலையில் உள்ளன. உலகெங்கும் நீதிக்காக எழுப்பும் குரல் சர்வதேசத்தின் எந்த காதுகளையும் எட்டவில்லை.இந்நிலையில் உலக நாடுகளும் அமைதி மற்றும் நீதியை உருவாக்க உருவான அமைப்புகளும் இயேசு விழாவை கொண்டாடுவதில் என்ன நியாயம் உள்ளது எனக் கேட்க தன் தோன்றுகிறது.பாலஸ்தீனத்தில் இருந்து இதுவரை கிடைத்த தகவலின் அடிப்படையில் யுத்தத்தில் சிக்குண்ட பல நூற்றுக்கணக்கான குடும்பங்களில் எவருமே உயிரோடு இல்லை என கூறப்படுகின்றது. மேலும் 1367 குடும்பங்களில் ஒரு குடும்பத்திலும் ஒருவர் மட்டுமே உயிர் தப்பியுள்ளதாகவும், 10 ஆயிரத்துக்கு மேற்பட்ட குழந்தைகள் கொல்லப்பட்டுள்ளதாகவும் 5000 அதிகமான குழந்தைகள் கட்டட இடிப்பாடுகளுக்குள் நசுங்கிக் கொள்ளப்பட்டதாகவும் செய்திகள் வெளி வருவதோடு குழந்தைகள், பிள்ளைகள், கர்ப்பிணி தாய்மார், வயதுமிகுந்தோர் என இன்னும் பல ஆயிரக்கணக்கானோர் பாதுகாப்பு, போசாக்கான உணவு, மருத்துவ வசதி இன்றி வாடுவதோடு மனநிலை பிறழ்ந்து இருப்பதாகவும் கூறப்படுகின்றது. இது நீதி, அமைதி விரும்பும் மக்கள் ஏற்காத கொடுமையாகும். யுத்தம் நடக்கின்ற எல்லா நாடுகளிலும் இதே நிலையே.நாமும் இத்தகைய எல்லா கொடுமைகளையும் அனுபவித்து இனப்படுகொலை, யுத்த குற்றங்கள், இராணுவத்தால் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர், அரசியல் கைதிகள் விடுதலை என்பவற்றோடு பலவந்தமாக படையினால் கையகப்படுத்திய காணிகளை விடுவிக்க கோரியும் கடந்த 15 ஆண்டுகளாக குரல் எழுப்பிக் கொண்டிருக்கின்றோம். நீதியை பெற்றுக் கொடுப்பதற்கு எந்த சர்வதேச அமைப்புக்களாலும் இதுவரை இயலாமல் உள்ளது. இது இயேசு பிறப்பிற்கு சவால்விடும் கொலை கொடூர ஏரோது மன்னன் மனநிலையாகும்.இன்று மாற்றம் என நாட்டை வழி நடத்தும் தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் நம்பிக்கை தரும் செயற்பாடுகளில் இதுவரை இறங்கவில்லை. இதுவே சிங்கள பௌத்த பெரும்பான்மை ஆதிக்க மனநிலையுமாகும்.இத்தகைய மனநிலை கொண்ட ஆட்சியாளர்களிடம் உயிர் பாதுகாப்பு கோரி மியன்மார் அகதிகள் முல்லைத்தீவு கடலில் தத்தளித்த போது யுத்த கொடூரத்தால் பாதிக்கப்பட்ட மீனவ சங்கமும் பொதுமக்களும் அவர்களுக்கு வேண்டிய அடிப்படைத் தேவைகளை செய்து செய்தமை வரவேற்கத்தக்கது. இதுவே இயேசு வாழ்வாகும். இயேசு பிறப்பு விழா வாழ்வுமாகும்.அன்று சமயமும் அரசியலும் அதனுடன் தொடர்புடைய அனைத்து கட்டமைப்புகளும் அவர்கள் உருவாக்கிய சட்டங்களும் வாழ்வு கலாச்சாரமும் அடிமட்ட ஏழை மக்களின் வாழ்க்கையை பறித்து சீரழித்துக் கொண்டிருக்கையில் அவற்றுக்கு எதிரான கடவுளின் தலையீடாகவே இயேசு பிறப்பு நிகழ்ந்தது. இயைசுவும் தம் வாழ்நாள் முழுவதும் அடக்கி ஒடுக்கப்பட்டு குரலற்றவர்களாக வாழ்ந்தவர்களின் பக்கம் நின்று நீதி குரலை உயர்த்தினார். அத்தகைய நீதிகுரல் வாழ்வு மைய சமூக இயக்கத்தை உருவாக்க செயற்பட்டார்.இத்தகைய சமூக இயக்கத்தால் மட்டுமே இன,மொழி, சமய பேரினவாதத்திற்கும் அதன் பாதுகாவலர்களுக்கும் சவால் விட முடியும். புதிய சமூகத்தை உருவாக்க முடியும். அத்தகைய உருவாக்கத்திற்கான செயல்பாட்டுக்கு உந்து சக்தியாகவே இயேசு பிறப்பு விழா வருடம் தோறும் நாம் கொண்டாடுகின்றோம்.அந்த இயக்கத்தின் மக்களாக அனைத்து வகையான அநீதிகளுக்கும் எதிராக குரல் கொடுத்து புதிய சமூகத்தை உருவாக்கிட வழி சமைப்பதே இயேசு பிறப்பு விழாவாக அமையட்டும். இத்தகைய விழா வாழ்வை தமதாக்கும் அனைவருக்கும் வாழ்த்துக்கள். அவர்களால் உருவாக்கம் பெறும் நீதியும் சமாதானமும் நாட்டிற்கு இறை அமைதியை தருவதாக அமையட்டும். என்றார்.

Advertisement

Advertisement

Advertisement