தெஹிவளை, ஓபன் வீதியில் கடந்த ஆகஸ்ட் 29ஆம் திகதி நபரொருவருக்கு பெட்ரோல் ஊற்றி தீவைத்து படுகொலை செய்த சம்பவத்தின் பிரதான சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கல்கிஸ்ஸ பிராந்திய குற்றப் புலனாய்வுப் பணியகத்தின் பொறுப்பதிகாரி தலைமைப் பொலிஸ் பரிசோதகர் நிலந்த கமகேவுக்கு கிடைத்த இரகசியத் தகவலின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின்போதே சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கொலையைத் தொடர்ந்து கண்டி பகுதியில் தலைமறைவாகியிருந்த நிலையில் சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளதுடன், அவர் தப்பிச் செல்லப் பயன்படுத்தியதாகக் கூறப்படும் காரொன்றும் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளது.
சுமார் இரண்டு வருடங்களுக்கு முன்னர் தனது தந்தை கொலை செய்யப்பட்ட சம்பவத்துக்கு பழிவாங்கும் நோக்கிலேயே குறித்த கொலையை மேற்கொண்டதாக சந்தேகநபர் பொலிஸ் விசாரணைகளின் போது தெரிவித்துள்ளதாக பொலிஸார் கூறுகின்றனர்.
கைது செய்யப்பட்ட சந்தேகநபர் ‘கொஸ்மல்லி’ எனப்படும் பாதாள உலகக் குற்றவாளியின் நெருங்கிய சகா எனவும், கொலை செய்யப்பட்டவர் ‘படோவிட அசங்க’ எனப்படும் குற்றவாளியின் நெருங்கிய சகா எனவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மேலும், கைது செய்யப்பட்ட சந்தேகநபர் மற்றும் கொலை செய்யப்பட்ட நபர் ஆகிய இருவருக்கும் எதிராகவும் போதைப்பொருள் கடத்தல் தொடர்பான குற்றச்சாட்டுகள் நிலுவையில் உள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்துள்ளனர்.
தந்தையின் கொலைக்கு பழிவாங்கல்: தெஹிவளை கொலை வழக்கில் பிரதான சந்தேகநபர் கைது தெஹிவளை, ஓபன் வீதியில் கடந்த ஆகஸ்ட் 29ஆம் திகதி நபரொருவருக்கு பெட்ரோல் ஊற்றி தீவைத்து படுகொலை செய்த சம்பவத்தின் பிரதான சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.கல்கிஸ்ஸ பிராந்திய குற்றப் புலனாய்வுப் பணியகத்தின் பொறுப்பதிகாரி தலைமைப் பொலிஸ் பரிசோதகர் நிலந்த கமகேவுக்கு கிடைத்த இரகசியத் தகவலின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின்போதே சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.கொலையைத் தொடர்ந்து கண்டி பகுதியில் தலைமறைவாகியிருந்த நிலையில் சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளதுடன், அவர் தப்பிச் செல்லப் பயன்படுத்தியதாகக் கூறப்படும் காரொன்றும் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளது.சுமார் இரண்டு வருடங்களுக்கு முன்னர் தனது தந்தை கொலை செய்யப்பட்ட சம்பவத்துக்கு பழிவாங்கும் நோக்கிலேயே குறித்த கொலையை மேற்கொண்டதாக சந்தேகநபர் பொலிஸ் விசாரணைகளின் போது தெரிவித்துள்ளதாக பொலிஸார் கூறுகின்றனர்.கைது செய்யப்பட்ட சந்தேகநபர் ‘கொஸ்மல்லி’ எனப்படும் பாதாள உலகக் குற்றவாளியின் நெருங்கிய சகா எனவும், கொலை செய்யப்பட்டவர் ‘படோவிட அசங்க’ எனப்படும் குற்றவாளியின் நெருங்கிய சகா எனவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.மேலும், கைது செய்யப்பட்ட சந்தேகநபர் மற்றும் கொலை செய்யப்பட்ட நபர் ஆகிய இருவருக்கும் எதிராகவும் போதைப்பொருள் கடத்தல் தொடர்பான குற்றச்சாட்டுகள் நிலுவையில் உள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்துள்ளனர்.