• Sep 11 2026

கல்வித்துறையில் அதிரடி புரட்சி: பாடசாலை நேரம் மற்றும் பரீட்சைகளில் விரைவில் மாற்றம்

Chithra / Sep 11th 2026, 10:38 am
image


2027ஆம் ஆண்டில் அறிமுகப்படுத்தப்படவுள்ள புதிய கல்வி மறுசீரமைப்புகளுக்கு அமைய, சாதாரண தரப் பரீட்சையை 7 பாடங்களாக மட்டுப்படுத்துவதற்குப் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.


பிரதமரும் கல்வி அமைச்சருமான ஹரிணி அமரசூரிய தலைமையில் இடம்பெற்ற, புதிய கல்வி மறுசீரமைப்புகளின் முன்னேற்றம் மற்றும் எதிர்காலத் திட்டங்கள் தொடர்பில் ஆராய்வதற்கான நாடாளுமன்ற துணைக்குழுக் கூட்டத்திலேயே இந்த விடயம் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.


கல்வி அமைச்சின் செயலாளர் நாலக களுவெவ, இது தொடர்பான அறிக்கையை குறித்த கூட்டத்தில் சமர்ப்பித்துள்ளார்.


அதற்கமைய, புதிய பாடத்திட்டக் கட்டமைப்பின் கீழ், ஒரு பாடவேளை 40 நிமிடங்களாகவும், பாடசாலை நேரம் காலை 7.30 மணி முதல் பிற்பகல் 1.30 மணி வரை நடத்தவும் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.


சாதாரண தரப் பரீட்சை 7 பாடங்களை உள்ளடக்கியதாக அமையும் எனவும், வரலாறு மற்றும் அழகியல் பாடங்களும் இதில் இடம்பெறும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


தாய்மொழி, ஆங்கிலம், விஞ்ஞானம், கணிதம் மற்றும் சமயம் உள்ளிட்ட கட்டாயப் பாடங்களுக்கு தொடர்ச்சியான மற்றும் தொகுப்பு மதிப்பீட்டு முறைகள் அறிமுகப்படுத்தப்படவுள்ளன.


மேலும், 10 மற்றும் 11ஆம் தரங்களில் தொழிற்கல்விப் பாடங்களை அறிமுகப்படுத்தவும், 12 மற்றும் 13ஆம் தரங்களில் சமூக நல்லிணக்கம், சட்டம் மற்றும் ஒழுக்கநெறி தொடர்பான பாடத் தொகுதிகளை உள்ளடக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது.


இதேவேளை தொழிற்கல்விப் பிரிவுகள், தொழில் வழிகாட்டல் மற்றும் வெளிநாட்டு மொழிகளைக் கற்கும் வாய்ப்புகளும் மாணவர்களுக்கு வழங்க பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

 

தற்போதுள்ள GPA என்ற நிலைப் புள்ளி சராசரி முறைக்கு பதிலாக, ஒவ்வொரு பாடத்தின் தன்மைக்கு ஏற்ப இறுதி பெறுபேற்றை கணக்கிடும் ‘Weighted Average Marks’ எனப்படும் நிறையிடப்பட்ட சராசரி மதிப்பெண் முறையை அறிமுகப்படுத்தவும் திட்டமிடப்பட்டுள்ளது.


அத்துடன்,  தேசிய கொள்கைக்கு அமைவாக முன்பள்ளி அபிவிருத்தி நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட வேண்டும் என தெரிவித்த பிரதமர் ஹரிணி அமரசூரிய, முன்பள்ளி ஆசிரியர்களின் தொழில்முறை தரத்தை மேம்படுத்துவதற்கான நடவடிக்கைகளையும் முன்னெடுக்க வேண்டும் எனவும் அறிவுறுத்தியுள்ளார்.


புதிய கல்வி மறுசீரமைப்புகள், கல்வித்துறையில் உள்ள அனைத்து தொழில்சார் தரப்பினரின் ஆலோசனைகளையும் கருத்தில் கொண்டு தயாரிக்கப்பட்டுள்ளதால், அதன் முழுமையான பயனை மாணவர்களுக்கு பெற்றுக்கொடுப்பதற்காக அனைத்து தரப்பினரும் பரஸ்பர புரிந்துணர்வுடன் செயற்பட வேண்டும் எனவும் பிரதமர் வலியுறுத்தியுள்ளார்.


கல்வித்துறையில் அதிரடி புரட்சி: பாடசாலை நேரம் மற்றும் பரீட்சைகளில் விரைவில் மாற்றம் 2027ஆம் ஆண்டில் அறிமுகப்படுத்தப்படவுள்ள புதிய கல்வி மறுசீரமைப்புகளுக்கு அமைய, சாதாரண தரப் பரீட்சையை 7 பாடங்களாக மட்டுப்படுத்துவதற்குப் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.பிரதமரும் கல்வி அமைச்சருமான ஹரிணி அமரசூரிய தலைமையில் இடம்பெற்ற, புதிய கல்வி மறுசீரமைப்புகளின் முன்னேற்றம் மற்றும் எதிர்காலத் திட்டங்கள் தொடர்பில் ஆராய்வதற்கான நாடாளுமன்ற துணைக்குழுக் கூட்டத்திலேயே இந்த விடயம் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.கல்வி அமைச்சின் செயலாளர் நாலக களுவெவ, இது தொடர்பான அறிக்கையை குறித்த கூட்டத்தில் சமர்ப்பித்துள்ளார்.அதற்கமைய, புதிய பாடத்திட்டக் கட்டமைப்பின் கீழ், ஒரு பாடவேளை 40 நிமிடங்களாகவும், பாடசாலை நேரம் காலை 7.30 மணி முதல் பிற்பகல் 1.30 மணி வரை நடத்தவும் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.சாதாரண தரப் பரீட்சை 7 பாடங்களை உள்ளடக்கியதாக அமையும் எனவும், வரலாறு மற்றும் அழகியல் பாடங்களும் இதில் இடம்பெறும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.தாய்மொழி, ஆங்கிலம், விஞ்ஞானம், கணிதம் மற்றும் சமயம் உள்ளிட்ட கட்டாயப் பாடங்களுக்கு தொடர்ச்சியான மற்றும் தொகுப்பு மதிப்பீட்டு முறைகள் அறிமுகப்படுத்தப்படவுள்ளன.மேலும், 10 மற்றும் 11ஆம் தரங்களில் தொழிற்கல்விப் பாடங்களை அறிமுகப்படுத்தவும், 12 மற்றும் 13ஆம் தரங்களில் சமூக நல்லிணக்கம், சட்டம் மற்றும் ஒழுக்கநெறி தொடர்பான பாடத் தொகுதிகளை உள்ளடக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது.இதேவேளை தொழிற்கல்விப் பிரிவுகள், தொழில் வழிகாட்டல் மற்றும் வெளிநாட்டு மொழிகளைக் கற்கும் வாய்ப்புகளும் மாணவர்களுக்கு வழங்க பரிந்துரைக்கப்பட்டுள்ளது. தற்போதுள்ள GPA என்ற நிலைப் புள்ளி சராசரி முறைக்கு பதிலாக, ஒவ்வொரு பாடத்தின் தன்மைக்கு ஏற்ப இறுதி பெறுபேற்றை கணக்கிடும் ‘Weighted Average Marks’ எனப்படும் நிறையிடப்பட்ட சராசரி மதிப்பெண் முறையை அறிமுகப்படுத்தவும் திட்டமிடப்பட்டுள்ளது.அத்துடன்,  தேசிய கொள்கைக்கு அமைவாக முன்பள்ளி அபிவிருத்தி நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட வேண்டும் என தெரிவித்த பிரதமர் ஹரிணி அமரசூரிய, முன்பள்ளி ஆசிரியர்களின் தொழில்முறை தரத்தை மேம்படுத்துவதற்கான நடவடிக்கைகளையும் முன்னெடுக்க வேண்டும் எனவும் அறிவுறுத்தியுள்ளார்.புதிய கல்வி மறுசீரமைப்புகள், கல்வித்துறையில் உள்ள அனைத்து தொழில்சார் தரப்பினரின் ஆலோசனைகளையும் கருத்தில் கொண்டு தயாரிக்கப்பட்டுள்ளதால், அதன் முழுமையான பயனை மாணவர்களுக்கு பெற்றுக்கொடுப்பதற்காக அனைத்து தரப்பினரும் பரஸ்பர புரிந்துணர்வுடன் செயற்பட வேண்டும் எனவும் பிரதமர் வலியுறுத்தியுள்ளார்.

Advertisement

Advertisement

Advertisement