• Dec 03 2024

பண்டிகைக் காலங்களில் அரிசி விலை உயரும் - அரசுக்கு விடுக்கப்பட்ட எச்சரிக்கை

Chithra / Dec 2nd 2024, 10:46 am
image

 

அரிசியின் விலையை கட்டுப்படுத்த அரசாங்கம் உடனடியாக தலையிடாவிட்டால், கீரி சம்பாவின் விலை 300 ரூபாவாகவும், நாடு 270 ரூபாவாகவும், சம்பா 290 ரூபாவாகவும், விலைபோவதை தடுக்க முடியாது என ஐக்கிய அரிசி உற்பத்தியாளர் சங்கத்தின் தலைவர் முதித் பெரேரா தெரிவித்தார்.

கோட்டாபய ராஜபக்ஷவினால் திணிக்கப்பட்ட வர்த்தமானியை உடனடியாக நீக்கி, சந்தையில் உள்ள தேவை மற்றும் விநியோகத்திற்கு ஏற்ப அரிசியின் விலை நிர்ணயிக்கப்பட வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார்.

பொலன்னறுவை பொங்கம பிரதேசத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே  இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

தற்போது சந்தையில் நாட்டு அரிசிக்கு அதிக தட்டுப்பாடு நிலவி வருவதால், கடைகளில் நாட்டு அரிசி கிடைப்பதில்லை. 

இதை கட்டுப்படுத்த வெளிநாடுகளில் இருந்து அரிசியை இறக்குமதி செய்யாமல், அதிகளவில் இருப்பு வைத்துள்ள அரிசியை மதிப்பிட வேண்டும்.

பண்டிகைக் காலங்களில் நெல்லை அரிசியாக மாற்றி நுகர்வோருக்கு குறைந்த விலையில் வழங்குவதற்கான சூழலை அரசாங்கம் உடனடியாக மேற்கொள்ள வேண்டும் என அவர் மேலும் தெரிவித்திருந்தார்.

விலையைக் கட்டுப்படுத்த வெளிநாடுகளில் இருந்து அரிசியை இறக்குமதி செய்வது தீர்வாகாது, அரிசியின் விலையைக் கட்டுப்படுத்தி அரிசியின் தேவை மற்றும் விநியோகத்திற்கு இடம் கொடுப்பது அரிசி விவசாயிகளையும் அரிசி நுகர்வோரையும் பாதுகாப்பதற்கான அவசர வேலைத்திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கு ஜனாதிபதி மற்றும் விவசாய அமைச்சர் ஆகியோரின் கவனத்தை செலுத்த வேண்டும் என முதித் பெரேரா மேலும் கோரிக்கை விடுத்துள்ளார்.

பண்டிகைக் காலங்களில் அரிசி விலை உயரும் - அரசுக்கு விடுக்கப்பட்ட எச்சரிக்கை  அரிசியின் விலையை கட்டுப்படுத்த அரசாங்கம் உடனடியாக தலையிடாவிட்டால், கீரி சம்பாவின் விலை 300 ரூபாவாகவும், நாடு 270 ரூபாவாகவும், சம்பா 290 ரூபாவாகவும், விலைபோவதை தடுக்க முடியாது என ஐக்கிய அரிசி உற்பத்தியாளர் சங்கத்தின் தலைவர் முதித் பெரேரா தெரிவித்தார்.கோட்டாபய ராஜபக்ஷவினால் திணிக்கப்பட்ட வர்த்தமானியை உடனடியாக நீக்கி, சந்தையில் உள்ள தேவை மற்றும் விநியோகத்திற்கு ஏற்ப அரிசியின் விலை நிர்ணயிக்கப்பட வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார்.பொலன்னறுவை பொங்கம பிரதேசத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே  இதனைக் குறிப்பிட்டுள்ளார்.தற்போது சந்தையில் நாட்டு அரிசிக்கு அதிக தட்டுப்பாடு நிலவி வருவதால், கடைகளில் நாட்டு அரிசி கிடைப்பதில்லை. இதை கட்டுப்படுத்த வெளிநாடுகளில் இருந்து அரிசியை இறக்குமதி செய்யாமல், அதிகளவில் இருப்பு வைத்துள்ள அரிசியை மதிப்பிட வேண்டும்.பண்டிகைக் காலங்களில் நெல்லை அரிசியாக மாற்றி நுகர்வோருக்கு குறைந்த விலையில் வழங்குவதற்கான சூழலை அரசாங்கம் உடனடியாக மேற்கொள்ள வேண்டும் என அவர் மேலும் தெரிவித்திருந்தார்.விலையைக் கட்டுப்படுத்த வெளிநாடுகளில் இருந்து அரிசியை இறக்குமதி செய்வது தீர்வாகாது, அரிசியின் விலையைக் கட்டுப்படுத்தி அரிசியின் தேவை மற்றும் விநியோகத்திற்கு இடம் கொடுப்பது அரிசி விவசாயிகளையும் அரிசி நுகர்வோரையும் பாதுகாப்பதற்கான அவசர வேலைத்திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கு ஜனாதிபதி மற்றும் விவசாய அமைச்சர் ஆகியோரின் கவனத்தை செலுத்த வேண்டும் என முதித் பெரேரா மேலும் கோரிக்கை விடுத்துள்ளார்.

Advertisement

Advertisement

Advertisement