• Jul 17 2026

நாட்டில் திடீர் மரணங்கள் அதிகரிப்பு: விசாரணைக்கு முன்பே தற்கொலை என சித்தரிக்க முயற்சி? - சட்டத்தரணி மனோஜ் கமகே

shanu / Jul 17th 2026, 7:36 pm
image

நாட்டில் அண்மைக்காலமாக முக்கிய வழக்குகளின் சாட்சிகள், பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் சந்தேகநபர்கள் திடீரென உயிரிழக்கும் ஒரு பயங்கரமான போக்கு காணப்படுவதாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் (SLPP) சட்டத்தரணி மனோஜ் கமகே தெரிவித்துள்ளார்.


 பத்தரமுல்ல நெலும் மாவத்தையிலுள்ள அமைந்துள்ள ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் கட்சித் தலைமையகத்தில் இன்று (17.07.2026) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.


இன்று காலை முன்னாள் பொலிஸ் மா அதிபர் சி.டி.விக்ரமரத்ன காலமானார் என்ற மிகவும் வருத்தமளிக்கும் செய்தி வெளியாகியுள்ளதாகவும், கட்சி என்ற ரீதியில் எங்களது ஆழ்ந்த இரங்கலை அவருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் தெரிவித்துக் கொள்வதாகவும் அவர் குறிப்பிட்டார்.


 எனினும், இந்த மரணத்துடன் ஒரு பாரிய சர்ச்சை எழுந்துள்ளதாக சுட்டிக்காட்டிய அவர், பொதுவாக ஒரு நபரின் மரணம் இயற்கையானதா, தற்கொலையா அல்லது கொலையா என்பதை மரண பரிசோதனை அல்லது நீதிமன்ற விசாரணையே தீர்மானிக்க வேண்டும் என்றார்.

ஆனால், அண்மைக்காலமாக கபில சந்திரசேன, திறைசேரியின் பணிப்பாளர் நாயகம் மற்றும் இன்று முன்னாள் பொலிஸ் மா அதிபர் ஆகியோரின் மரணங்களின் போது, உடல்கள் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்படுவதற்கு முன்னரேயே அவை தற்கொலை என சமூக ஊடகங்களிலும் ஏனைய ஊடகங்களிலும் செய்திகள் வெளியிடப்படுவதாக அவர் குற்றம் சாட்டினார். இது மிகவும் பாரதூரமான நிலைமையாகும் என்றும், முறையான விசாரணைகளின்றி, மரணத்தின் சூடு தணிவதற்கு முன்பே இவை தற்கொலை என சித்தரிக்கப்படுவது மக்கள் மத்தியிலும் தமக்கும் பலத்த சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.


 எனவே, மக்கள் மத்தியில் சந்தேகத்தை ஏற்படுத்தும் வகையில் செயற்படும் பொலிஸ் ஊடகப்பிரிவினர் மற்றும் சமூக ஊடகங்களின் இவ்வாறான செயற்பாடுகளை உடனடியாக நிறுத்துமாறு அரசாங்கத்தை கேட்டுக்கொள்வதாக அவர் வலியுறுத்தினார்.


நாட்டின் மக்கள் தங்களது வரலாற்றில் செய்த மிக மோசமான பரீட்சார்த்த முயற்சி மற்றும் தவறை தற்போது உணர்ந்து வருவதாக தெரிவித்த மனோஜ் கமகே, தற்போது எதிர்ப்பாளர்களின் வாய்களை மூடும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுவதாகக் கூறினார். 


அரசாங்கத்திற்கு எதிராக சமூக ஊடகங்களில் கருத்து வெளியிட்ட நபரொருவர் பயங்கரவாத தடுப்புச் சட்டத்தின் (PTA) கீழ் தடுப்புக்காவல் உத்தரவில் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளதை சுட்டிக்காட்டிய அவர், முன்னொரு காலத்தில் பயங்கரவாத சந்தேகநபர்களுக்கு எதிராகவே இவ்வாறான உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டதாகவும், ஆனால் இன்று அரசாங்கத்தை விமர்சிக்கும் சமூக ஊடக செயற்பாட்டாளர்களுக்கு எதிராக இவை பயன்படுத்தப்படுவது பாரதூரமான அடக்குமுறை நிலைமையாகும் என்றும் தெரிவித்தார்.


மேலும், நாட்டின் சுயாதீன நீதித்துறை பெலவத்த அதிகார மையத்தின் கீழ் கொண்டுவரப்பட முயற்சிக்கப்படுவதாகவும், இதனால் நீதிபதிகள் கடும் அழுத்தங்களுக்கு உள்ளாகியுள்ளனர் என்றும் அவர் குறிப்பிட்டார். 


நாட்டில் ஜனநாயகம் மற்றும் சட்டத்தின் ஆட்சியைப் பாதுகாப்பதற்காக எதிர்க்கட்சித் தலைவர் உடனடியாக வீதிக்கு இறங்கி தலைமைத்துவத்தை வழங்க வேண்டும் என வலியுறுத்திய அவர், மேலும் தாமதிப்பது நாட்டிற்கும் ஜனநாயகத்திற்கும் மீள முடியாத இழப்பை ஏற்படுத்தும் என்பதால் எதிர்க்கட்சிகள் அனைத்தும் உடனடியாக ஓரணியில் திரள வேண்டும் என கேட்டுக்கொண்டார்.


அரசியலமைப்பை மாற்றியமைக்கப் போவதில்லை என கூறி ஆட்சிக்கு வந்த அரசாங்கம், இன்று தங்களுக்குத் தேவையானவற்றைச் செய்வதற்காக ஒட்டுமொத்த அரசியலமைப்பையும் தலைகீழாக மாற்றத் தயாராகி வருவதாக அவர் குற்றம் சாட்டினார். உயர் நீதிமன்ற மற்றும் மேன்முறையீட்டு நீதிமன்ற நீதிபதிகள் தங்களது பதவிக்காலத்தை நீடிக்குமாறு கோராத நிலையிலும், அரசாங்கம் தனது தோல்விகளை மறைக்கவும், பொலிஸ் துறையைப் போன்று நீதித்துறையையும் தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரவும் இவ்வாறான முயற்சிகளை மேற்கொள்வதாக அவர் கூறினார். 


லஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணைக்குழு மற்றும் பொலிஸ் திணைக்களத்தின் சுயாதீனத்தன்மை ஏற்கனவே சீர்குலைந்துள்ள சூழலில், நீதித்துறையின் கௌரவத்தையும் சுதந்திரத்தையும் பாதுகாக்குமாறு நாட்டின் சட்டத்தரணிகள் மற்றும் நீதியரசர்களிடம் கேட்டுக்கொண்ட அவர், இறுதியில் அரசியல் எவ்வாறு அமைந்தாலும், இந்நாட்டு மக்கள் நிம்மதியாக வாழ்வதற்கும் சுதந்திரமாக சுவாசிப்பதற்கும் ஒரு ஜனநாயக நாடு எஞ்சியிருக்க வேண்டும் என விபரித்தார்.

நாட்டில் திடீர் மரணங்கள் அதிகரிப்பு: விசாரணைக்கு முன்பே தற்கொலை என சித்தரிக்க முயற்சி - சட்டத்தரணி மனோஜ் கமகே நாட்டில் அண்மைக்காலமாக முக்கிய வழக்குகளின் சாட்சிகள், பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் சந்தேகநபர்கள் திடீரென உயிரிழக்கும் ஒரு பயங்கரமான போக்கு காணப்படுவதாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் (SLPP) சட்டத்தரணி மனோஜ் கமகே தெரிவித்துள்ளார். பத்தரமுல்ல நெலும் மாவத்தையிலுள்ள அமைந்துள்ள ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் கட்சித் தலைமையகத்தில் இன்று (17.07.2026) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.இன்று காலை முன்னாள் பொலிஸ் மா அதிபர் சி.டி.விக்ரமரத்ன காலமானார் என்ற மிகவும் வருத்தமளிக்கும் செய்தி வெளியாகியுள்ளதாகவும், கட்சி என்ற ரீதியில் எங்களது ஆழ்ந்த இரங்கலை அவருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் தெரிவித்துக் கொள்வதாகவும் அவர் குறிப்பிட்டார். எனினும், இந்த மரணத்துடன் ஒரு பாரிய சர்ச்சை எழுந்துள்ளதாக சுட்டிக்காட்டிய அவர், பொதுவாக ஒரு நபரின் மரணம் இயற்கையானதா, தற்கொலையா அல்லது கொலையா என்பதை மரண பரிசோதனை அல்லது நீதிமன்ற விசாரணையே தீர்மானிக்க வேண்டும் என்றார்.ஆனால், அண்மைக்காலமாக கபில சந்திரசேன, திறைசேரியின் பணிப்பாளர் நாயகம் மற்றும் இன்று முன்னாள் பொலிஸ் மா அதிபர் ஆகியோரின் மரணங்களின் போது, உடல்கள் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்படுவதற்கு முன்னரேயே அவை தற்கொலை என சமூக ஊடகங்களிலும் ஏனைய ஊடகங்களிலும் செய்திகள் வெளியிடப்படுவதாக அவர் குற்றம் சாட்டினார். இது மிகவும் பாரதூரமான நிலைமையாகும் என்றும், முறையான விசாரணைகளின்றி, மரணத்தின் சூடு தணிவதற்கு முன்பே இவை தற்கொலை என சித்தரிக்கப்படுவது மக்கள் மத்தியிலும் தமக்கும் பலத்த சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளதாகவும் அவர் தெரிவித்தார். எனவே, மக்கள் மத்தியில் சந்தேகத்தை ஏற்படுத்தும் வகையில் செயற்படும் பொலிஸ் ஊடகப்பிரிவினர் மற்றும் சமூக ஊடகங்களின் இவ்வாறான செயற்பாடுகளை உடனடியாக நிறுத்துமாறு அரசாங்கத்தை கேட்டுக்கொள்வதாக அவர் வலியுறுத்தினார்.நாட்டின் மக்கள் தங்களது வரலாற்றில் செய்த மிக மோசமான பரீட்சார்த்த முயற்சி மற்றும் தவறை தற்போது உணர்ந்து வருவதாக தெரிவித்த மனோஜ் கமகே, தற்போது எதிர்ப்பாளர்களின் வாய்களை மூடும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுவதாகக் கூறினார். அரசாங்கத்திற்கு எதிராக சமூக ஊடகங்களில் கருத்து வெளியிட்ட நபரொருவர் பயங்கரவாத தடுப்புச் சட்டத்தின் (PTA) கீழ் தடுப்புக்காவல் உத்தரவில் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளதை சுட்டிக்காட்டிய அவர், முன்னொரு காலத்தில் பயங்கரவாத சந்தேகநபர்களுக்கு எதிராகவே இவ்வாறான உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டதாகவும், ஆனால் இன்று அரசாங்கத்தை விமர்சிக்கும் சமூக ஊடக செயற்பாட்டாளர்களுக்கு எதிராக இவை பயன்படுத்தப்படுவது பாரதூரமான அடக்குமுறை நிலைமையாகும் என்றும் தெரிவித்தார்.மேலும், நாட்டின் சுயாதீன நீதித்துறை பெலவத்த அதிகார மையத்தின் கீழ் கொண்டுவரப்பட முயற்சிக்கப்படுவதாகவும், இதனால் நீதிபதிகள் கடும் அழுத்தங்களுக்கு உள்ளாகியுள்ளனர் என்றும் அவர் குறிப்பிட்டார். நாட்டில் ஜனநாயகம் மற்றும் சட்டத்தின் ஆட்சியைப் பாதுகாப்பதற்காக எதிர்க்கட்சித் தலைவர் உடனடியாக வீதிக்கு இறங்கி தலைமைத்துவத்தை வழங்க வேண்டும் என வலியுறுத்திய அவர், மேலும் தாமதிப்பது நாட்டிற்கும் ஜனநாயகத்திற்கும் மீள முடியாத இழப்பை ஏற்படுத்தும் என்பதால் எதிர்க்கட்சிகள் அனைத்தும் உடனடியாக ஓரணியில் திரள வேண்டும் என கேட்டுக்கொண்டார்.அரசியலமைப்பை மாற்றியமைக்கப் போவதில்லை என கூறி ஆட்சிக்கு வந்த அரசாங்கம், இன்று தங்களுக்குத் தேவையானவற்றைச் செய்வதற்காக ஒட்டுமொத்த அரசியலமைப்பையும் தலைகீழாக மாற்றத் தயாராகி வருவதாக அவர் குற்றம் சாட்டினார். உயர் நீதிமன்ற மற்றும் மேன்முறையீட்டு நீதிமன்ற நீதிபதிகள் தங்களது பதவிக்காலத்தை நீடிக்குமாறு கோராத நிலையிலும், அரசாங்கம் தனது தோல்விகளை மறைக்கவும், பொலிஸ் துறையைப் போன்று நீதித்துறையையும் தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரவும் இவ்வாறான முயற்சிகளை மேற்கொள்வதாக அவர் கூறினார். லஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணைக்குழு மற்றும் பொலிஸ் திணைக்களத்தின் சுயாதீனத்தன்மை ஏற்கனவே சீர்குலைந்துள்ள சூழலில், நீதித்துறையின் கௌரவத்தையும் சுதந்திரத்தையும் பாதுகாக்குமாறு நாட்டின் சட்டத்தரணிகள் மற்றும் நீதியரசர்களிடம் கேட்டுக்கொண்ட அவர், இறுதியில் அரசியல் எவ்வாறு அமைந்தாலும், இந்நாட்டு மக்கள் நிம்மதியாக வாழ்வதற்கும் சுதந்திரமாக சுவாசிப்பதற்கும் ஒரு ஜனநாயக நாடு எஞ்சியிருக்க வேண்டும் என விபரித்தார்.

Advertisement

Advertisement

Advertisement