• Dec 01 2024

வெள்ள அனர்த்தத்தை தொடர்ந்து தொற்று நோய்கள் பரவும் அபாயம்; சுகாதாரப் பிரிவு அவசர எச்சரிக்கை!

Chithra / Dec 1st 2024, 3:04 pm
image

 

தொற்று நோய்கள் பரவும் அபாயம் குறித்து வெள்ளப்பெருக்கு ஏற்பட்டிருந்த பகுதிகளிலுள்ள மக்கள் அவதானம் செலுத்த வேண்டும் எனச் சுகாதாரப் பிரிவு அறிவித்துள்ளது. 

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளிலுள்ள கிணற்று நீரைப் பயன்படுத்துவது தொடர்பில் விசேட கவனம் செலுத்தப்பட வேண்டும், 

அவற்றைச் சுத்தப்படுத்தும்போது பொதுச் சுகாதார பரிசோதகரின் அறிவுறுத்தல்களைப் பின்பற்றுவது சிறந்தது எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. 

அதேநேரம், சமைத்த உணவை ஈ போன்ற நோய் காவிகளிடமிருந்து பாதுகாக்க வேண்டும் எனவும், நன்கு கொதித்தாறிய நீரைப் பருக வேண்டும் எனவும் சுகாதாரப் பிரிவு தெரிவித்துள்ளது. 

விசேடமாக வயிற்றுப்போக்கு, டெங்கு, எலிக்காய்ச்சல், வைரஸ் நோய்கள் இந்தக் காலத்தில் அதிகளவில் பரவி வருவதாகவும் சுகாதாரப் பிரிவு எச்சரித்துள்ளது.

மேலும்,தொற்று மற்றும் தொற்றாத நோய்களில் இருந்து சிறு குழந்தைகளை பாதுகாப்பதில் அதிக கவனம் செலுத்தப்பட வேண்டும் என கொழும்பு, லேடி ரிஸ்வே சிறுவர் வைத்தியசாலையின் குழந்தை நல வைத்திய நிபுணர் டொக்டர் டிபால் பெரேரா குறிப்பிட்டுள்ளார்.


வெள்ள அனர்த்தத்தை தொடர்ந்து தொற்று நோய்கள் பரவும் அபாயம்; சுகாதாரப் பிரிவு அவசர எச்சரிக்கை  தொற்று நோய்கள் பரவும் அபாயம் குறித்து வெள்ளப்பெருக்கு ஏற்பட்டிருந்த பகுதிகளிலுள்ள மக்கள் அவதானம் செலுத்த வேண்டும் எனச் சுகாதாரப் பிரிவு அறிவித்துள்ளது. வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளிலுள்ள கிணற்று நீரைப் பயன்படுத்துவது தொடர்பில் விசேட கவனம் செலுத்தப்பட வேண்டும், அவற்றைச் சுத்தப்படுத்தும்போது பொதுச் சுகாதார பரிசோதகரின் அறிவுறுத்தல்களைப் பின்பற்றுவது சிறந்தது எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதேநேரம், சமைத்த உணவை ஈ போன்ற நோய் காவிகளிடமிருந்து பாதுகாக்க வேண்டும் எனவும், நன்கு கொதித்தாறிய நீரைப் பருக வேண்டும் எனவும் சுகாதாரப் பிரிவு தெரிவித்துள்ளது. விசேடமாக வயிற்றுப்போக்கு, டெங்கு, எலிக்காய்ச்சல், வைரஸ் நோய்கள் இந்தக் காலத்தில் அதிகளவில் பரவி வருவதாகவும் சுகாதாரப் பிரிவு எச்சரித்துள்ளது.மேலும்,தொற்று மற்றும் தொற்றாத நோய்களில் இருந்து சிறு குழந்தைகளை பாதுகாப்பதில் அதிக கவனம் செலுத்தப்பட வேண்டும் என கொழும்பு, லேடி ரிஸ்வே சிறுவர் வைத்தியசாலையின் குழந்தை நல வைத்திய நிபுணர் டொக்டர் டிபால் பெரேரா குறிப்பிட்டுள்ளார்.

Advertisement

Advertisement

Advertisement