வவுனியா - ஓமந்தை பகுதியில் இடம்பெற்ற கோர விபத்தில் இருவர் காயமடைந்த நிலையில் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
குறித்த சம்பவம் இன்று அதிகாலை இடம்பெற்றுள்ளது.
கண்டெய்னர் லொறி மற்றும் மாட்டுசாணம் ஏற்றி வந்த லொறியும் மோதியதில் இவ் விபத்து இடம்பெற்றுள்ளது. இதில் ஒரு லொறி கவிழ்ந்து விபத்துக்குளாகியுள்ளது.
விபத்தால் ஏ9 வீதியின் போக்குவரத்து சுமார் 03 மணிநேரம் தடைப்பட்டதுடன், நீண்ட வரிசையில் வாகனங்கள் தரித்து நின்றதை அவதானிக்க முடிந்தது.
குறித்த விபத்தானது அதிக பனிமூட்டம் காரணமாக இடம்பெற்றிருக்கலாம் என பொலிஸாரின் ஆரம்ப கட்ட விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.
மேலதிக விசாரணையினை வவுனியா ஓமந்தை பொலிஸாரினால் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.
ஓமந்தையில் கோர விபத்து; இருவர் காயம் - 03 மணிநேரம் தடைப்பட்ட போக்குவரத்து வவுனியா - ஓமந்தை பகுதியில் இடம்பெற்ற கோர விபத்தில் இருவர் காயமடைந்த நிலையில் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.குறித்த சம்பவம் இன்று அதிகாலை இடம்பெற்றுள்ளது. கண்டெய்னர் லொறி மற்றும் மாட்டுசாணம் ஏற்றி வந்த லொறியும் மோதியதில் இவ் விபத்து இடம்பெற்றுள்ளது. இதில் ஒரு லொறி கவிழ்ந்து விபத்துக்குளாகியுள்ளது. விபத்தால் ஏ9 வீதியின் போக்குவரத்து சுமார் 03 மணிநேரம் தடைப்பட்டதுடன், நீண்ட வரிசையில் வாகனங்கள் தரித்து நின்றதை அவதானிக்க முடிந்தது. குறித்த விபத்தானது அதிக பனிமூட்டம் காரணமாக இடம்பெற்றிருக்கலாம் என பொலிஸாரின் ஆரம்ப கட்ட விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.மேலதிக விசாரணையினை வவுனியா ஓமந்தை பொலிஸாரினால் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.