சம்பூர் பிரதேசத்தில் உள்ள சம்பூர் காளி கோயில் வீதியின் வேலைகளை ஆரம்பித்து வைக்கும் நிகழ்வு இன்று சனிக்கிழமை மாலை இடம் பெற்றது.
திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் கபில நுவான் அத்துகோரல முதன்மை அதிதியாக கலந்து கொண்டு சம்பூர் -காளி கோயிலில் பூஜை வழிபாடுகளில் ஈடுபட்ட பின்னர் வீதி வேலைகளை ஆரம்பித்து வைத்தார்.
மேலும் அரசாங்கத்தின் ஒரு லட்சம் கிலோ மீற்றர் வீதி அபிவிருத்தித் திட்டத்தின் கீழ் 1200 மீற்றர் தூரம் கொண்ட இவ் வீதி 35 மில்லியன் ரூபாய் செலவில் நிர்மாணிக்கப்பட உள்ளமை குறிப்பிடத்தக்கது.
குறிப்பாக இந்நிகழ்வில் திருகோணமலை வீதி அபிவிருத்தி அதிகார சபையின் பொறியியலாளர்கள், சம்பூர் பகுதியின் முக்கியஸ்தர்கள் என பலரும் கலந்து சிறப்பித்தமை குறிப்பிடத்தக்கதாகும் .
சம்பூர் பிரதேசத்தில் வீதி வேலைகள் ஆரம்பம். சம்பூர் பிரதேசத்தில் உள்ள சம்பூர் காளி கோயில் வீதியின் வேலைகளை ஆரம்பித்து வைக்கும் நிகழ்வு இன்று சனிக்கிழமை மாலை இடம் பெற்றது.திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் கபில நுவான் அத்துகோரல முதன்மை அதிதியாக கலந்து கொண்டு சம்பூர் -காளி கோயிலில் பூஜை வழிபாடுகளில் ஈடுபட்ட பின்னர் வீதி வேலைகளை ஆரம்பித்து வைத்தார்.மேலும் அரசாங்கத்தின் ஒரு லட்சம் கிலோ மீற்றர் வீதி அபிவிருத்தித் திட்டத்தின் கீழ் 1200 மீற்றர் தூரம் கொண்ட இவ் வீதி 35 மில்லியன் ரூபாய் செலவில் நிர்மாணிக்கப்பட உள்ளமை குறிப்பிடத்தக்கது.குறிப்பாக இந்நிகழ்வில் திருகோணமலை வீதி அபிவிருத்தி அதிகார சபையின் பொறியியலாளர்கள், சம்பூர் பகுதியின் முக்கியஸ்தர்கள் என பலரும் கலந்து சிறப்பித்தமை குறிப்பிடத்தக்கதாகும் .