• Sep 08 2024

அனர்த்தங்களில் சிக்கி இறந்தவர்களுக்கு இரண்டரை இலட்சம் ரூபா இழப்பீடு..!

Chithra / Jun 7th 2024, 11:47 am
image

Advertisement

சீரற்ற காலநிலையால் ஏற்பட்ட அனர்த்தங்களில் சிக்கி உயிரிழந்த ஒருவருக்கு இரண்டு இலட்சத்து ஐம்பதாயிரம் ரூபா நட்டஈடாக வழங்கப்படும் என அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் கல்வி மற்றும் மக்கள் விழிப்புணர்வு பணிப்பாளர் பிரதீப் கொடிப்பிலி தெரிவித்தார்.

மேலும், வீடுகளை சுத்தம் செய்வதற்கு பத்தாயிரம் ரூபா முன்பணமும் வழங்கப்படும் என பிரதீப் கொடிப்பிலி தெரிவித்தார்.

கிராம உத்தியோகத்தர், பிரதேச செயலாளர் மற்றும் தொழில்நுட்ப உத்தியோகத்தர்களின் மதிப்பீட்டு அறிக்கைகளின் பிரகாரம் வீடு சேதங்களுக்கு நட்டஈடு வழங்கப்படும்.

வீட்டின் அளவு மற்றும் மதிப்பீட்டு அறிக்கைகளைப் பெறுவதற்கு எடுக்கும் நேரத்தைப் பொறுத்து, வீடு சேதத்திற்கான இழப்பீடு வழங்குவதற்கு எடுத்துக் கொள்ளப்படும்  என்றும் அவர் வலியுறுத்தினார்.

இதேவேளை, முகாம்களில் தங்கியுள்ள மக்களுக்கு சமைத்த உணவும், வெள்ளத்தில் சிக்கியுள்ள குடும்பங்களுக்கு உலர் உணவும் வழங்கப்படும்.

அனர்த்த முகாமைத்துவ திணைக்களத்தினால் அறிவுறுத்தப்பட்ட போதிலும் வெள்ளத்தில் குளித்தமையினால் பல உயிரிழப்புக்கள் பதிவாகியுள்ளதாகவும், அபாயகரமான பிரதேசங்களில் இருந்து மக்கள் வெளியேறாததன் பிரச்சினை இன்னும் இருப்பதாகவும் பிரதீப் கொடிப்பிப்பிலி மேலும் குறிப்பிட்டார்.

அனர்த்தங்களில் சிக்கி இறந்தவர்களுக்கு இரண்டரை இலட்சம் ரூபா இழப்பீடு. சீரற்ற காலநிலையால் ஏற்பட்ட அனர்த்தங்களில் சிக்கி உயிரிழந்த ஒருவருக்கு இரண்டு இலட்சத்து ஐம்பதாயிரம் ரூபா நட்டஈடாக வழங்கப்படும் என அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் கல்வி மற்றும் மக்கள் விழிப்புணர்வு பணிப்பாளர் பிரதீப் கொடிப்பிலி தெரிவித்தார்.மேலும், வீடுகளை சுத்தம் செய்வதற்கு பத்தாயிரம் ரூபா முன்பணமும் வழங்கப்படும் என பிரதீப் கொடிப்பிலி தெரிவித்தார்.கிராம உத்தியோகத்தர், பிரதேச செயலாளர் மற்றும் தொழில்நுட்ப உத்தியோகத்தர்களின் மதிப்பீட்டு அறிக்கைகளின் பிரகாரம் வீடு சேதங்களுக்கு நட்டஈடு வழங்கப்படும்.வீட்டின் அளவு மற்றும் மதிப்பீட்டு அறிக்கைகளைப் பெறுவதற்கு எடுக்கும் நேரத்தைப் பொறுத்து, வீடு சேதத்திற்கான இழப்பீடு வழங்குவதற்கு எடுத்துக் கொள்ளப்படும்  என்றும் அவர் வலியுறுத்தினார்.இதேவேளை, முகாம்களில் தங்கியுள்ள மக்களுக்கு சமைத்த உணவும், வெள்ளத்தில் சிக்கியுள்ள குடும்பங்களுக்கு உலர் உணவும் வழங்கப்படும்.அனர்த்த முகாமைத்துவ திணைக்களத்தினால் அறிவுறுத்தப்பட்ட போதிலும் வெள்ளத்தில் குளித்தமையினால் பல உயிரிழப்புக்கள் பதிவாகியுள்ளதாகவும், அபாயகரமான பிரதேசங்களில் இருந்து மக்கள் வெளியேறாததன் பிரச்சினை இன்னும் இருப்பதாகவும் பிரதீப் கொடிப்பிப்பிலி மேலும் குறிப்பிட்டார்.

Advertisement

Advertisement

Advertisement