ரஷ்ய நாட்டின் சுகாதார அமைச்சர் மிகைல் முராஷ்கோ (Mr.Mikhail Murashko) உட்பட 07 பேர் கொண்ட குழு இன்று காலை (03) மூன்று நாள் உத்தியோகப்பூர்வ விஜயமாக இலங்கை வந்துள்ளனர்.
பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தின் (BIA) சிறப்பு விருந்தினர் வரவேற்பு வளாகத்தில், அறிவியல் மற்றும் தொழில்நுட்ப அமைச்சர் பேராசிரியர் கிருதசாந்த அபேசேன, சுகாதார மற்றும் வெகுஜன ஊடக அமைச்சகத்தின் செயலாளர் டாக்டர் அனில் ஜசிங்க மற்றும் இயக்குனர் டாக்டர் அனில் சமரநாயக்க மற்றும் இலங்கைக்கான ரஷ்ய நாட்டின் தூதர் லெவன் ஜகர்யன் ஆகியோரால் குழுவினர் வரவேற்கப்பட்டனர்.
இதன்போது ரஷ்ய நாட்டின் சுகாதார அமைச்சர் மிகைல் முராஷ்கோ உள்ளிட்ட தூதுக்குழுவினருடன் கலந்துரையாடலும் நடைபெற்றது.
இந்தப் பயணத்தின் போது, ரஷ்யாவிற்கும் இலங்கைக்கும் இடையிலான சுகாதாரத் துறையில் உறவுகளையும் ஒத்துழைப்பையும் வலுப்படுத்துவது தொடர்பாக சுகாதார மற்றும் வெகுஜன ஊடக அமைச்சர் நளிந்த ஜெயதிஸ்ஸவுடன் ஒரு விசேட கலந்துரையாடல் திட்டமிடப்பட்டுள்ளது.
மேலும், வெளிநாட்டு விவகாரங்கள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலா அமைச்சர் விஜித ஹெரத்துடன் விசேட கலந்துரையாடலை நடத்தவும் தூதுக்குழுவினர் திட்டமிட்டுள்ளனர்.
ரஷ்ய சுகாதார அமைச்சர் உள்ளிட்ட தூதுக்குழுவினர் நாளை, கொழும்பு தேசிய மருத்துவமனை மற்றும் கொழும்பு பல்கலைக்கழகத்தின் மருத்துவ பீடத்தைப் பார்வையிடவும், இலங்கை மற்றும் ரஷ்யாவின் சுகாதார அமைச்சகங்களுக்கு இடையில் புரிந்துணர்வுகளை எட்டவும் திட்டமிட்டுள்ளனர்.
இந்தப் பயணத்தின் போது, ரஷ்ய சுகாதார அமைச்சரும் அவரது குழுவினரும், மருந்துகள் மற்றும் மருத்துவ உபகரணங்கள், மருத்துவ நிபுணர்களின் பயிற்சி மற்றும் கல்விசார் ஒத்துழைப்பு ஆயுர்வேத மருத்துவம், டிஜிட்டல்மயமாக்கல் மற்றும் சுற்றுலா சுகாதார சேவைகள் உள்ளிட்ட சுகாதாரத் துறையின் முக்கிய பிரிவுகளில் ஒத்துழைப்பை மேம்படுத்துவதற்காக, சுகாதார சேவையின் ஒவ்வொரு துறையுடனும் கலந்துரையாடல்களையும் கருத்துப் பரிமாற்றங்களையும் நடத்த திட்டமிட்டு உள்ளனர்.
இலங்கை வந்தார் ரஷ்ய அமைச்சர் - சுகாதார சேவைகளை வலுப்படுத்த விசேட திட்டங்கள் ரஷ்ய நாட்டின் சுகாதார அமைச்சர் மிகைல் முராஷ்கோ (Mr.Mikhail Murashko) உட்பட 07 பேர் கொண்ட குழு இன்று காலை (03) மூன்று நாள் உத்தியோகப்பூர்வ விஜயமாக இலங்கை வந்துள்ளனர். பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தின் (BIA) சிறப்பு விருந்தினர் வரவேற்பு வளாகத்தில், அறிவியல் மற்றும் தொழில்நுட்ப அமைச்சர் பேராசிரியர் கிருதசாந்த அபேசேன, சுகாதார மற்றும் வெகுஜன ஊடக அமைச்சகத்தின் செயலாளர் டாக்டர் அனில் ஜசிங்க மற்றும் இயக்குனர் டாக்டர் அனில் சமரநாயக்க மற்றும் இலங்கைக்கான ரஷ்ய நாட்டின் தூதர் லெவன் ஜகர்யன் ஆகியோரால் குழுவினர் வரவேற்கப்பட்டனர். இதன்போது ரஷ்ய நாட்டின் சுகாதார அமைச்சர் மிகைல் முராஷ்கோ உள்ளிட்ட தூதுக்குழுவினருடன் கலந்துரையாடலும் நடைபெற்றது. இந்தப் பயணத்தின் போது, ரஷ்யாவிற்கும் இலங்கைக்கும் இடையிலான சுகாதாரத் துறையில் உறவுகளையும் ஒத்துழைப்பையும் வலுப்படுத்துவது தொடர்பாக சுகாதார மற்றும் வெகுஜன ஊடக அமைச்சர் நளிந்த ஜெயதிஸ்ஸவுடன் ஒரு விசேட கலந்துரையாடல் திட்டமிடப்பட்டுள்ளது. மேலும், வெளிநாட்டு விவகாரங்கள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலா அமைச்சர் விஜித ஹெரத்துடன் விசேட கலந்துரையாடலை நடத்தவும் தூதுக்குழுவினர் திட்டமிட்டுள்ளனர். ரஷ்ய சுகாதார அமைச்சர் உள்ளிட்ட தூதுக்குழுவினர் நாளை, கொழும்பு தேசிய மருத்துவமனை மற்றும் கொழும்பு பல்கலைக்கழகத்தின் மருத்துவ பீடத்தைப் பார்வையிடவும், இலங்கை மற்றும் ரஷ்யாவின் சுகாதார அமைச்சகங்களுக்கு இடையில் புரிந்துணர்வுகளை எட்டவும் திட்டமிட்டுள்ளனர். இந்தப் பயணத்தின் போது, ரஷ்ய சுகாதார அமைச்சரும் அவரது குழுவினரும், மருந்துகள் மற்றும் மருத்துவ உபகரணங்கள், மருத்துவ நிபுணர்களின் பயிற்சி மற்றும் கல்விசார் ஒத்துழைப்பு ஆயுர்வேத மருத்துவம், டிஜிட்டல்மயமாக்கல் மற்றும் சுற்றுலா சுகாதார சேவைகள் உள்ளிட்ட சுகாதாரத் துறையின் முக்கிய பிரிவுகளில் ஒத்துழைப்பை மேம்படுத்துவதற்காக, சுகாதார சேவையின் ஒவ்வொரு துறையுடனும் கலந்துரையாடல்களையும் கருத்துப் பரிமாற்றங்களையும் நடத்த திட்டமிட்டு உள்ளனர்.