நுளம்பு கடியியில் இருந்து பாதுகாப்பைப் பெற்றுக் கொள்வதற்காக முன்பள்ளிச் சிறுவர்களுக்கும் கைகால்களை மூடும் வகையில் பொருத்தமான ஆடைகளை அணிவித்து அவர்களை முன்பள்ளிகளுக்கு அனுப்புமாறு பெற்றோர்களிடம் கோருவதாக மகளிர் மற்றும் சிறுவர் விவகார அமைச்சர் சரோஜா போல்ராஜ் தெரிவித்துள்ளார்.
இன்று (13) அரசாங்க தகவல் திணைக்களத்தில் நடைபெற்ற ஆரம்பப் பிள்ளைப் பருவ தேசிய வாரக் கொண்டாட்டம் குறித்த விழிப்புணர்வு ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையிலேயே அமைச்சர் இதனைக் குறிப்பிட்டார்.
பாடசாலை மாணவர்களிடையே டெங்கு பரவுவதைக் குறைக்கும் நோக்கில் கைகால்களை மூடும் வகையில் பொருத்தமான ஆடைகளை அணிந்து பாடசாலைக்கு வருவதற்கான வாய்ப்பு மாணவர்களுக்குக் கிடைக்கிறது. அதற்கமைய, முன்பள்ளி சிறுவர் சிறுமிகளையும் நுளம்பு கடியியில் இருந்து பாதுகாப்பதற்காக கைகால்கள் மூடும் வகையில் பொருத்தமான ஆடைகளை அணிவித்து முன்பள்ளிகளுக்கு அனுப்புமாறு அமைச்சர் பெற்றோரிடம் கேட்டுக்கொண்டார்.
இதேவேளை விசேட தேவையுடைய பிள்ளைகளைச் சமூகத்திலிருந்து தனிமைப்படுத்தி, அவர்களுக்குத் தனித்தனியாகக் கற்பிக்கும் பழைய முறையைக் கைவிடுவதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளதாகக் குறிப்பிட்டார்.
இதற்காக சமூக சேவைத் திணைக்களத்துடன் இணைந்து புதிய கூட்டு வேலைத்திட்டமொன்று ஏற்கனவே ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
விசேட தேவையுடைய பிள்ளைகளுக்கு மருத்துவ ஆலோசனைகளுடன் கூடிய செயற்பாடு சார்ந்த கல்வி முறையும், நடத்தை ரீதியான பழக்கப்படுத்துதல்களும் அத்தியாவசியமானவை, அப்பிள்ளைகளைத் தனிமைப்படுத்தாமல் சாதாரண பிள்ளைகளுக்கு மத்தியிலேயே அவர்கள் வளர்வதற்குக் தகுந்த வாய்ப்பளிப்பது மிகவும் முக்கியமானது எனச் சுட்டிக்காட்டினார்.
இவ்வேலைத்திட்டத்தை வெற்றிகரமாக்குவதற்கான முதற்படியாக, விசேட தேவையுடைய பிள்ளைகளைக் கையாளும் விதம் குறித்து முன்பள்ளி ஆசிரியர்களுக்கு விழிப்புணர்வூட்டும் மற்றும் பயிற்சி அளிக்கும் பணிகள் தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளன. இலங்கையின் தனியார் துறையின் பங்களிப்புடன் இயங்கும் பல முன்னணி விசேட நிறுவனங்களும் இதற்குப் பாரிய ஒத்துழைப்பை வழங்கி வருவதாக அமைச்சர் தெரிவித்தார்.
மேலும் கடந்த 2023ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில், நாட்டில் தற்போது புதிதாகப் பிறக்கும் குழந்தைகளின் எண்ணிக்கை 112,000ஆல் பாரியளவில் குறைவடைந்துள்ளதுடன், மறுபுறம் முதியோர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.
நாட்டில் தற்போது ஆபத்தான மற்றும் பாதுகாப்பற்ற முறையில் குழந்தைகள் பிறக்கும் வீதம் அதிகரித்து வருகின்றது. குறிப்பாக, திருமணமாகாத பாடசாலை மாணவிகள் மற்றும் போதைப்பொருள் பாவனைக்கு அடிமையான பெண்களுக்கு பிறக்கும் குழந்தைகளின் எண்ணிக்கை தற்போதைய சூழலில் கணிசமாக உயர்வடைந்துள்ளது.
இவ்வாறான பின்னணியில், எவ்வித பாதுகாப்பும் இன்றி பிறக்கும் இந்த அப்பாவிப் பிள்ளைகளின் பாதுகாப்பையும் உரிமைகளையும் உறுதிப்படுத்துவது தார்மீகப் பொறுப்பாகும். எனவே, இத்தகைய குழந்தைகளுக்குத் தேவையான விசேட பாதுகாப்பை வழங்குவதற்கென பிரத்தியேகமான புதிய வேலைத்திட்டம் ஒன்றை நடைமுறைப்படுத்துவது குறித்து அமைச்சு மட்டத்தில் தீவிர அவதானம் செலுத்தப்பட்டு வருகிறது எனத் தெரிவித்தார்.
முன்பள்ளி பிள்ளைகளுக்கும் பாதுகாப்பான ஆடைகள்; விசேட தேவையுடைய பிள்ளைகளுக்கு சமமான வாய்ப்பு அமைச்சர் அறிவிப்பு நுளம்பு கடியியில் இருந்து பாதுகாப்பைப் பெற்றுக் கொள்வதற்காக முன்பள்ளிச் சிறுவர்களுக்கும் கைகால்களை மூடும் வகையில் பொருத்தமான ஆடைகளை அணிவித்து அவர்களை முன்பள்ளிகளுக்கு அனுப்புமாறு பெற்றோர்களிடம் கோருவதாக மகளிர் மற்றும் சிறுவர் விவகார அமைச்சர் சரோஜா போல்ராஜ் தெரிவித்துள்ளார். இன்று (13) அரசாங்க தகவல் திணைக்களத்தில் நடைபெற்ற ஆரம்பப் பிள்ளைப் பருவ தேசிய வாரக் கொண்டாட்டம் குறித்த விழிப்புணர்வு ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையிலேயே அமைச்சர் இதனைக் குறிப்பிட்டார். பாடசாலை மாணவர்களிடையே டெங்கு பரவுவதைக் குறைக்கும் நோக்கில் கைகால்களை மூடும் வகையில் பொருத்தமான ஆடைகளை அணிந்து பாடசாலைக்கு வருவதற்கான வாய்ப்பு மாணவர்களுக்குக் கிடைக்கிறது. அதற்கமைய, முன்பள்ளி சிறுவர் சிறுமிகளையும் நுளம்பு கடியியில் இருந்து பாதுகாப்பதற்காக கைகால்கள் மூடும் வகையில் பொருத்தமான ஆடைகளை அணிவித்து முன்பள்ளிகளுக்கு அனுப்புமாறு அமைச்சர் பெற்றோரிடம் கேட்டுக்கொண்டார். இதேவேளை விசேட தேவையுடைய பிள்ளைகளைச் சமூகத்திலிருந்து தனிமைப்படுத்தி, அவர்களுக்குத் தனித்தனியாகக் கற்பிக்கும் பழைய முறையைக் கைவிடுவதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளதாகக் குறிப்பிட்டார். இதற்காக சமூக சேவைத் திணைக்களத்துடன் இணைந்து புதிய கூட்டு வேலைத்திட்டமொன்று ஏற்கனவே ஆரம்பிக்கப்பட்டுள்ளது. விசேட தேவையுடைய பிள்ளைகளுக்கு மருத்துவ ஆலோசனைகளுடன் கூடிய செயற்பாடு சார்ந்த கல்வி முறையும், நடத்தை ரீதியான பழக்கப்படுத்துதல்களும் அத்தியாவசியமானவை, அப்பிள்ளைகளைத் தனிமைப்படுத்தாமல் சாதாரண பிள்ளைகளுக்கு மத்தியிலேயே அவர்கள் வளர்வதற்குக் தகுந்த வாய்ப்பளிப்பது மிகவும் முக்கியமானது எனச் சுட்டிக்காட்டினார். இவ்வேலைத்திட்டத்தை வெற்றிகரமாக்குவதற்கான முதற்படியாக, விசேட தேவையுடைய பிள்ளைகளைக் கையாளும் விதம் குறித்து முன்பள்ளி ஆசிரியர்களுக்கு விழிப்புணர்வூட்டும் மற்றும் பயிற்சி அளிக்கும் பணிகள் தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளன. இலங்கையின் தனியார் துறையின் பங்களிப்புடன் இயங்கும் பல முன்னணி விசேட நிறுவனங்களும் இதற்குப் பாரிய ஒத்துழைப்பை வழங்கி வருவதாக அமைச்சர் தெரிவித்தார். மேலும் கடந்த 2023ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில், நாட்டில் தற்போது புதிதாகப் பிறக்கும் குழந்தைகளின் எண்ணிக்கை 112,000ஆல் பாரியளவில் குறைவடைந்துள்ளதுடன், மறுபுறம் முதியோர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.நாட்டில் தற்போது ஆபத்தான மற்றும் பாதுகாப்பற்ற முறையில் குழந்தைகள் பிறக்கும் வீதம் அதிகரித்து வருகின்றது. குறிப்பாக, திருமணமாகாத பாடசாலை மாணவிகள் மற்றும் போதைப்பொருள் பாவனைக்கு அடிமையான பெண்களுக்கு பிறக்கும் குழந்தைகளின் எண்ணிக்கை தற்போதைய சூழலில் கணிசமாக உயர்வடைந்துள்ளது. இவ்வாறான பின்னணியில், எவ்வித பாதுகாப்பும் இன்றி பிறக்கும் இந்த அப்பாவிப் பிள்ளைகளின் பாதுகாப்பையும் உரிமைகளையும் உறுதிப்படுத்துவது தார்மீகப் பொறுப்பாகும். எனவே, இத்தகைய குழந்தைகளுக்குத் தேவையான விசேட பாதுகாப்பை வழங்குவதற்கென பிரத்தியேகமான புதிய வேலைத்திட்டம் ஒன்றை நடைமுறைப்படுத்துவது குறித்து அமைச்சு மட்டத்தில் தீவிர அவதானம் செலுத்தப்பட்டு வருகிறது எனத் தெரிவித்தார்.