• Nov 22 2024

சாய்ந்தமருது மாளிகைக்காடு வர்த்தகர் சங்கத்தின் முன்மாதிரியான மே தின நிகழ்வு...!

Sharmi / May 1st 2024, 4:09 pm
image

சாய்ந்தமருது மாளிகைக்காடு வர்த்தகர் சங்கத்தின் ஏற்பாட்டில் சாய்ந்தமருதில் மே தின நிகழ்வுகள் இன்று (01) இடம்பெற்றன.

சாய்ந்தமருத மாளிகைக்காடு வர்த்தகர் சங்கத்தின் தலைவர் கலாநிதி எம்.எம்.முபாரக் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வுக்கு, கல்முனை மாநகர சபை ஆணையாளர் ஏ.எல்.அஸ்மி, சாய்ந்தமருது பிரதேச செயலாளர் எம்.எம் ஆஷிக், முபாரக் டெக்ஸ்டைல் நிறுவனத்தின் ஸ்தாபகர் அல்ஹாஜ் எம். மீராசாஹிப் உள்ளிட்ட அரச திணைக்கள அதிகாரிகள், தொழிலதிபர்கள் மற்றும் தொழிலாளர்கள் என பல்வேறு சமூகத்தினர் கலந்து கொண்டனர்.

இதன்போது கல்முனை மாநகர சபை தொழிலாளர்கள் 80 பேருக்கு சாய்ந்தமருது மாளிகைக்காடு வர்த்தகர் சங்கத்தினால் அன்பளிப்பு பொருட்களும் முபாரக் டெக்ஸ்டைல் நிறுவனத்தின் ஸ்தாபகர் அல்ஹாஜ் எம். மீராசாஹிப்பின் நிதி அன்பளிப்புகளும் வழங்கி வைக்கப்பட்டன.

மே தின விஷேட உரையினை சாய்ந்தமருது மாளிகைக்காடு வர்த்தகர் சங்கத்தின் தலைவர், முபாரக் டெக்ஸ்டைல் நிறுவனத்தின் முகாமைத்துவப் பணிப்பாளர் கலாநிதி எம் எம்.முபாரக் நிகழ்த்தினார்.

இதனைத் தொடர்ந்து தொழிலாளர்களும் தொழிலதிபர்களும் ஒன்றிணைந்து பொத்துவில் பாணம பிரதேசத்துக்கு ஒருநாள் சுற்றுப் பயணம் ஒன்றினையும் மேற்கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.


சாய்ந்தமருது மாளிகைக்காடு வர்த்தகர் சங்கத்தின் முன்மாதிரியான மே தின நிகழ்வு. சாய்ந்தமருது மாளிகைக்காடு வர்த்தகர் சங்கத்தின் ஏற்பாட்டில் சாய்ந்தமருதில் மே தின நிகழ்வுகள் இன்று (01) இடம்பெற்றன.சாய்ந்தமருத மாளிகைக்காடு வர்த்தகர் சங்கத்தின் தலைவர் கலாநிதி எம்.எம்.முபாரக் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வுக்கு, கல்முனை மாநகர சபை ஆணையாளர் ஏ.எல்.அஸ்மி, சாய்ந்தமருது பிரதேச செயலாளர் எம்.எம் ஆஷிக், முபாரக் டெக்ஸ்டைல் நிறுவனத்தின் ஸ்தாபகர் அல்ஹாஜ் எம். மீராசாஹிப் உள்ளிட்ட அரச திணைக்கள அதிகாரிகள், தொழிலதிபர்கள் மற்றும் தொழிலாளர்கள் என பல்வேறு சமூகத்தினர் கலந்து கொண்டனர்.இதன்போது கல்முனை மாநகர சபை தொழிலாளர்கள் 80 பேருக்கு சாய்ந்தமருது மாளிகைக்காடு வர்த்தகர் சங்கத்தினால் அன்பளிப்பு பொருட்களும் முபாரக் டெக்ஸ்டைல் நிறுவனத்தின் ஸ்தாபகர் அல்ஹாஜ் எம். மீராசாஹிப்பின் நிதி அன்பளிப்புகளும் வழங்கி வைக்கப்பட்டன.மே தின விஷேட உரையினை சாய்ந்தமருது மாளிகைக்காடு வர்த்தகர் சங்கத்தின் தலைவர், முபாரக் டெக்ஸ்டைல் நிறுவனத்தின் முகாமைத்துவப் பணிப்பாளர் கலாநிதி எம் எம்.முபாரக் நிகழ்த்தினார்.இதனைத் தொடர்ந்து தொழிலாளர்களும் தொழிலதிபர்களும் ஒன்றிணைந்து பொத்துவில் பாணம பிரதேசத்துக்கு ஒருநாள் சுற்றுப் பயணம் ஒன்றினையும் மேற்கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement

Advertisement