• Nov 21 2024

தேர்தல் விதிமுறைகளை மீறும் செயல் - அதிரடியாக ரத்து செய்யப்பட்ட சஜித்தின் எட்டு கூட்டங்கள்!

Chithra / Jul 29th 2024, 12:48 pm
image


அம்பாறை மாவட்டத்தில் ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான சஜித் பிரேமதாச இன்று நடத்தவிருந்த இருந்த  எட்டு கூட்டங்கள் திடீரென ரத்து செய்யப்பட்டுள்ளன.

பின்தங்கிய பிரதேசத்தைச் சேர்ந்த எட்டு பாடசாலைகளுக்கு சுமார் ஒரு கோடி ரூபாய் பெறுமதியான ஸ்மார்ட் அறைக்கான உபகரணங்கள் வழங்கும் நிகழ்வுகளே இவ்விதம் ரத்து செய்யப்பட்டுள்ளதாக சஜித் பிரேமதாசவின் இணைப்பாளர் வி. வினோ காந்த்  ஊடகங்களுக்கு தெரிவித்துள்ளார்.

இந் நிகழ்வுகள், முன் கூட்டியே ஏற்பாடு செய்யப்பட்டிருந்த போதிலும் ஜனாதிபதி தேர்தல் விதிமுறைகளுக்கமைவாக இந் நிகழ்வுகள் ரத்து செய்யப்பட்டன.

அதாவது தேர்தல் ஆணையகத்தினால் ஜனாதிபதி தேர்தல் திகதி அறிவிக்கப்பட்ட பிற்பாடு இத்தகைய நிகழ்வை நடத்துவது தேர்தல் விதிமுறைகளை மீறும் செயலாகும் என்ற காரணத்தினால் இது ரத்து செய்யப்பட்டுள்ளது. 

அம்பாறையில் இருந்து தேர்தல் ஆணைக்குழுவுக்கு சென்ற முறைப்பாட்டை அடுத்து இந்  நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கிறது. தேர்தல் நடைமுறை விதிகளுக்கு அமைவாக இந்த நிகழ்வுகள் ரத்து செய்யப்பட்டுள்ளன என்றார்.

தேர்தல் விதிமுறைகளை மீறும் செயல் - அதிரடியாக ரத்து செய்யப்பட்ட சஜித்தின் எட்டு கூட்டங்கள் அம்பாறை மாவட்டத்தில் ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான சஜித் பிரேமதாச இன்று நடத்தவிருந்த இருந்த  எட்டு கூட்டங்கள் திடீரென ரத்து செய்யப்பட்டுள்ளன.பின்தங்கிய பிரதேசத்தைச் சேர்ந்த எட்டு பாடசாலைகளுக்கு சுமார் ஒரு கோடி ரூபாய் பெறுமதியான ஸ்மார்ட் அறைக்கான உபகரணங்கள் வழங்கும் நிகழ்வுகளே இவ்விதம் ரத்து செய்யப்பட்டுள்ளதாக சஜித் பிரேமதாசவின் இணைப்பாளர் வி. வினோ காந்த்  ஊடகங்களுக்கு தெரிவித்துள்ளார்.இந் நிகழ்வுகள், முன் கூட்டியே ஏற்பாடு செய்யப்பட்டிருந்த போதிலும் ஜனாதிபதி தேர்தல் விதிமுறைகளுக்கமைவாக இந் நிகழ்வுகள் ரத்து செய்யப்பட்டன.அதாவது தேர்தல் ஆணையகத்தினால் ஜனாதிபதி தேர்தல் திகதி அறிவிக்கப்பட்ட பிற்பாடு இத்தகைய நிகழ்வை நடத்துவது தேர்தல் விதிமுறைகளை மீறும் செயலாகும் என்ற காரணத்தினால் இது ரத்து செய்யப்பட்டுள்ளது. அம்பாறையில் இருந்து தேர்தல் ஆணைக்குழுவுக்கு சென்ற முறைப்பாட்டை அடுத்து இந்  நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கிறது. தேர்தல் நடைமுறை விதிகளுக்கு அமைவாக இந்த நிகழ்வுகள் ரத்து செய்யப்பட்டுள்ளன என்றார்.

Advertisement

Advertisement

Advertisement