• Nov 15 2024

சஜித்திற்கு தொலைநோக்கு பார்வை இல்லை...! ரணிலுடன் இணைந்த சஜித் தரப்பு உறுப்பினர்...!

Sharmi / May 22nd 2024, 8:37 am
image

ஐக்கிய மக்கள் சக்தியின் ஹம்பாந்தோட்டை மாவட்டத்தின் முல்கிரிகல தேர்தல் தொகுதியின் அமைப்பாளர் நிமல் பிரேன்சிஸ்கோ,  ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு ஆதரவளிப்பதாகத் தெரிவித்து நேற்றையதினம்(21) மீண்டும் ஐக்கிய தேசிய கட்சியில் இணைந்து கொண்டார்.

ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமையகமான சிறிகொத்தவிற்கு நேற்று(21) சென்ற அவர், ஐக்கிய தேசியக் கட்சியின் தவிசாளர் பாராளுமன்ற உறுப்பினர் வஜிர அபேவர்தனவை சந்தித்து கட்சி உறுப்புரிமையைப் பெற்றுக் கொண்டார்.

கட்சி அங்கத்துவத்தை பெற்றுக்கொண்ட பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த நிமல் பிரேன்சிஸ்கோ,

ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவருக்கு தொலைநோக்கு பார்வை இல்லை எனவும், நாங்கள் இருந்த ஐக்கிய தேசியக் கட்சியில் மீண்டும் இணைவதற்கு நான் தீர்மானித்துள்ளேன்.

இது நாங்கள் இருந்த கட்சி, நாங்கள் இரண்டாகப் பிரிந்ததால் பிரிந்தோம்.

ஆனால், ரணில் விக்கிரமசிங்கவின் நிகழ்ச்சியைப் பார்த்தேன். இந்த இரண்டு வருடங்களில் பொருளாதாரம் எவ்வாறு கட்டியெழுப்பப்பட்டது என்பதனைக் கண்டு நான் மீண்டும் ஐக்கிய தேசியக் கட்சியில் இணைந்து ஜனாதிபதிக்கு பலமாக இருக்க தீர்மானித்துள்ளதாகவும் தெரிவித்தார்.

சஜித்திற்கு தொலைநோக்கு பார்வை இல்லை. ரணிலுடன் இணைந்த சஜித் தரப்பு உறுப்பினர். ஐக்கிய மக்கள் சக்தியின் ஹம்பாந்தோட்டை மாவட்டத்தின் முல்கிரிகல தேர்தல் தொகுதியின் அமைப்பாளர் நிமல் பிரேன்சிஸ்கோ,  ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு ஆதரவளிப்பதாகத் தெரிவித்து நேற்றையதினம்(21) மீண்டும் ஐக்கிய தேசிய கட்சியில் இணைந்து கொண்டார்.ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமையகமான சிறிகொத்தவிற்கு நேற்று(21) சென்ற அவர், ஐக்கிய தேசியக் கட்சியின் தவிசாளர் பாராளுமன்ற உறுப்பினர் வஜிர அபேவர்தனவை சந்தித்து கட்சி உறுப்புரிமையைப் பெற்றுக் கொண்டார்.கட்சி அங்கத்துவத்தை பெற்றுக்கொண்ட பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த நிமல் பிரேன்சிஸ்கோ,ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவருக்கு தொலைநோக்கு பார்வை இல்லை எனவும், நாங்கள் இருந்த ஐக்கிய தேசியக் கட்சியில் மீண்டும் இணைவதற்கு நான் தீர்மானித்துள்ளேன்.இது நாங்கள் இருந்த கட்சி, நாங்கள் இரண்டாகப் பிரிந்ததால் பிரிந்தோம்.ஆனால், ரணில் விக்கிரமசிங்கவின் நிகழ்ச்சியைப் பார்த்தேன். இந்த இரண்டு வருடங்களில் பொருளாதாரம் எவ்வாறு கட்டியெழுப்பப்பட்டது என்பதனைக் கண்டு நான் மீண்டும் ஐக்கிய தேசியக் கட்சியில் இணைந்து ஜனாதிபதிக்கு பலமாக இருக்க தீர்மானித்துள்ளதாகவும் தெரிவித்தார்.

Advertisement

Advertisement

Advertisement