• Nov 25 2024

பலாலி விமானப்படை முகாமில் சஜித்தின் மனைவிக்கு ஆயுத வணக்கம்? வெடித்த புதிய சர்ச்சை

Chithra / Sep 11th 2024, 9:27 am
image


பலாலியில் உள்ள விமானப்படை முகாமிற்குள், ​​நேற்று எதிர்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவின் மனைவி ஜலனி பிரேமதாச நுழையும் போது விமானப்படை வீரர்களால்   ஆயுத வணக்கம் செலுத்தியதாகக் கூறப்படும் காணொளி சமூக ஊடகங்களில் பரவி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

தற்போதைய இராணுவ மரியாதை செலுத்தும் முறைக்கமைய, துப்பாக்கி செங்குத்தாக உடலுக்கு ஏற்ப உயர்த்தப்பட்டு பொதுவாக தலைவர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு செலுத்தப்படுகின்றது.

இந்நிலையில் ​​ஜலனி பிரேமதாசவுடன் சென்ற குழுவில் இருந்த நாடாளுமன்ற உறுப்பினர் ஜி.எல்.பீரிஸிற்காகவே இந்த மரியாதை செலுத்தப்பட்டது எனவும் வேறு எந்த நபருக்கும் செலுத்தப்படவில்லை எனவும் விமானப்படையின் பேச்சாளர் எரந்த கீகனகே  குறிப்பிட்டுள்ளார்.

எவ்வாறாயினும், குழுவிற்கு ஜலனி பிரேமதாச தலைமை தாங்கினார் என்பதும் அவருக்குப் பின்னால் ஜி.எல்.பீரிஸ் நடந்து செல்வதைக் காணக்கூடியதாக இருந்தது.

அதன் பின்னர் பலாலி முகாமில் பிரதம அதிதியாக ஜலனி கலந்து கொண்டு வரவேற்று அவர் சால்வை போர்த்தப்பட்டு வரவேற்கப்பட்டுள்ளார்.

இந்த காணொளி முதலில் ஐக்கிய மக்கள் சக்தியின் வட மாகாண பிரதான அமைப்பாளர் உமாச்சந்திர பிரகாஷினால் பேஸ்புக்கில் பதிவேற்றம் செய்யப்பட்டது.

எனினும் குறித்த சம்பவத்தினை உமாச்சந்திரா பிரகாஷ்,  எடிட் செய்து பேஸ்புக்கில் பதிவு செய்ததாக தெரியவந்துள்ளது.


பலாலி விமானப்படை முகாமில் சஜித்தின் மனைவிக்கு ஆயுத வணக்கம் வெடித்த புதிய சர்ச்சை பலாலியில் உள்ள விமானப்படை முகாமிற்குள், ​​நேற்று எதிர்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவின் மனைவி ஜலனி பிரேமதாச நுழையும் போது விமானப்படை வீரர்களால்   ஆயுத வணக்கம் செலுத்தியதாகக் கூறப்படும் காணொளி சமூக ஊடகங்களில் பரவி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.தற்போதைய இராணுவ மரியாதை செலுத்தும் முறைக்கமைய, துப்பாக்கி செங்குத்தாக உடலுக்கு ஏற்ப உயர்த்தப்பட்டு பொதுவாக தலைவர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு செலுத்தப்படுகின்றது.இந்நிலையில் ​​ஜலனி பிரேமதாசவுடன் சென்ற குழுவில் இருந்த நாடாளுமன்ற உறுப்பினர் ஜி.எல்.பீரிஸிற்காகவே இந்த மரியாதை செலுத்தப்பட்டது எனவும் வேறு எந்த நபருக்கும் செலுத்தப்படவில்லை எனவும் விமானப்படையின் பேச்சாளர் எரந்த கீகனகே  குறிப்பிட்டுள்ளார்.எவ்வாறாயினும், குழுவிற்கு ஜலனி பிரேமதாச தலைமை தாங்கினார் என்பதும் அவருக்குப் பின்னால் ஜி.எல்.பீரிஸ் நடந்து செல்வதைக் காணக்கூடியதாக இருந்தது.அதன் பின்னர் பலாலி முகாமில் பிரதம அதிதியாக ஜலனி கலந்து கொண்டு வரவேற்று அவர் சால்வை போர்த்தப்பட்டு வரவேற்கப்பட்டுள்ளார்.இந்த காணொளி முதலில் ஐக்கிய மக்கள் சக்தியின் வட மாகாண பிரதான அமைப்பாளர் உமாச்சந்திர பிரகாஷினால் பேஸ்புக்கில் பதிவேற்றம் செய்யப்பட்டது.எனினும் குறித்த சம்பவத்தினை உமாச்சந்திரா பிரகாஷ்,  எடிட் செய்து பேஸ்புக்கில் பதிவு செய்ததாக தெரியவந்துள்ளது.

Advertisement

Advertisement

Advertisement