• Nov 26 2024

சங்கானை சிவப்பிரகாச மகா வித்தியாலய அரசறிவியல் மன்றத்தின் 'அதிகாரம்' இதழ் 2 நூல் வெளியீட்டு விழா...!samugammedia

Sharmi / Dec 15th 2023, 3:24 pm
image

யாழ் சங்கானை சிவப்பிரகாச மகா வித்தியாலயத்தின் அரசறிவியல் மன்றத்தின் 'அதிகாரம்' இதழ்2 நூல் வெளியீட்டு விழா இன்றையதினம்(15)  இடம்பெற்றது.

 அரசறிவியல் மன்றத்தின் தலைவி செல்வி. பா.அகல்யா தலைமையில் குறித்த நிகழ்வு  இடம்பெற்றது.

நிகழ்வின் ஆரம்பத்தில் விருந்தினர்களுக்கு மாலை அணிவிக்கப்பட்டு, மேற்கத்தேய இசை வாத்தியங்கள் முழங்க விழா மண்டபத்திற்கு அழைத்து வரப்பட்டனர்.

பின்னர் தேசியக் கொடி, பாடசாலை கொடி என்பன ஏற்றி வைக்கப்பட்டு, மங்கல விளக்கு ஏற்றப்பட்டு, தேவாரத்துடன் நிகழ்வு ஆரம்பமானது. அதனைத் தொடர்ந்து வரவேற்புரை, வரவேற்பு நடனம் என்பன இடம்பெற்றன.

பின்னர் விருந்தினர்களின் உரைகள் இடம்பெற்றது. மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களின் ஆக்கங்களை கொண்டு உருவாக்கப்பட்ட அதிகாரம்' நூலின் அறிமுக உரையை பொறுப்பாசிரியர் செ.பிரதாப் நிகழ்த்தியதுடன், ஏற்புரையை மாணவியும், நூலின் ஆய்வுரையினை ஊடகவியலாளர் கு.டிலீப் அமுதன் ஆற்றினர்.

அதன் பின்னர் நூல் வெளியீட்டு நிகழ்வு  இடம்பெற்றது.

அத்துடன் பாடசாலை அதிபரினால் விருந்தினர்களுக்கு நினைவுப் பரிசில்களும் வழங்கி வைக்கப்பட்டன.

 இந் நிகழ்வில் யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தின் கலைப்பீட பீடாதிபதி பேராசிரியர் ரகுராம், பிரதம விருந்தினராகவும்,  சிறப்பு விருந்தினராக வலிகாமம் கல்வி வலயத்தின் சமூக விஞ்ஞான உதவிக் கல்விப் பணிப்பாளர்  லதிக்கிறேஸ் விக்ரர் ஜெயக்குமார்  கலந்து சிறப்பித்ததுடன், அதிபர், ஆசிரியர்கள், மாணவர்கள், பெற்றோர்கள், பழைய மாணவர்கள் என பலரும் கலந்துகொண்டனர்.

சங்கானை சிவப்பிரகாச மகா வித்தியாலய அரசறிவியல் மன்றத்தின் 'அதிகாரம்' இதழ் 2 நூல் வெளியீட்டு விழா.samugammedia யாழ் சங்கானை சிவப்பிரகாச மகா வித்தியாலயத்தின் அரசறிவியல் மன்றத்தின் 'அதிகாரம்' இதழ்2 நூல் வெளியீட்டு விழா இன்றையதினம்(15)  இடம்பெற்றது. அரசறிவியல் மன்றத்தின் தலைவி செல்வி. பா.அகல்யா தலைமையில் குறித்த நிகழ்வு  இடம்பெற்றது.நிகழ்வின் ஆரம்பத்தில் விருந்தினர்களுக்கு மாலை அணிவிக்கப்பட்டு, மேற்கத்தேய இசை வாத்தியங்கள் முழங்க விழா மண்டபத்திற்கு அழைத்து வரப்பட்டனர்.பின்னர் தேசியக் கொடி, பாடசாலை கொடி என்பன ஏற்றி வைக்கப்பட்டு, மங்கல விளக்கு ஏற்றப்பட்டு, தேவாரத்துடன் நிகழ்வு ஆரம்பமானது. அதனைத் தொடர்ந்து வரவேற்புரை, வரவேற்பு நடனம் என்பன இடம்பெற்றன.பின்னர் விருந்தினர்களின் உரைகள் இடம்பெற்றது. மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களின் ஆக்கங்களை கொண்டு உருவாக்கப்பட்ட அதிகாரம்' நூலின் அறிமுக உரையை பொறுப்பாசிரியர் செ.பிரதாப் நிகழ்த்தியதுடன், ஏற்புரையை மாணவியும், நூலின் ஆய்வுரையினை ஊடகவியலாளர் கு.டிலீப் அமுதன் ஆற்றினர்.அதன் பின்னர் நூல் வெளியீட்டு நிகழ்வு  இடம்பெற்றது.அத்துடன் பாடசாலை அதிபரினால் விருந்தினர்களுக்கு நினைவுப் பரிசில்களும் வழங்கி வைக்கப்பட்டன. இந் நிகழ்வில் யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தின் கலைப்பீட பீடாதிபதி பேராசிரியர் ரகுராம், பிரதம விருந்தினராகவும்,  சிறப்பு விருந்தினராக வலிகாமம் கல்வி வலயத்தின் சமூக விஞ்ஞான உதவிக் கல்விப் பணிப்பாளர்  லதிக்கிறேஸ் விக்ரர் ஜெயக்குமார்  கலந்து சிறப்பித்ததுடன், அதிபர், ஆசிரியர்கள், மாணவர்கள், பெற்றோர்கள், பழைய மாணவர்கள் என பலரும் கலந்துகொண்டனர்.

Advertisement

Advertisement

Advertisement