• Nov 22 2024

சுகாதார சீர்கேடு - கொக்குவில் பகுதியில் வெதுப்பகம் சீல் வைப்பு

Tharun / Jun 24th 2024, 6:16 pm
image

நல்லூர் சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் சுகாதார வைத்திய அதிகாரி மற்றும் பொது சுகாதார பரிசோதகர்கள் குழுவினரால் தொடர்ச்சியாக உணவு கையாளும் நிலையங்கள் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டு, சுகாதார சீர்கேடான உணவு கையாளும் நிலையங்களிற்கு எதிராக சட்டநடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.

அந்த வகையில் கடந்த 12.06.2024ம் திகதி நல்லூர் சுகாதார வைத்திய அதிகாரி, மேற்பார்வை பொது சுகாதார பரிசோதகர் தலைமையிலான பொது சுகாதார பரிசோதகர்கள் குழாமினால் நல்லூர் சுகாதார வைத்திய அதிகாரி பணிமனைக்கு உட்பட்ட 09 வெதுப்பகங்கள் இரவு திடீர் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டு இருந்தன. இதன்போது கொக்குவில் பகுதியில் சுகாதார சீர்கேடாக இயங்கிய 02 வெதுப்பகங்கள் இனங்காணப்பட்டன.

இரண்டு வெதுப்பகங்களிற்கும் எதிராக கொக்குவில் பொது சுகாதார பரிசோதகர் பா. சஞ்சீவனால் இன்று(24) யாழ் மேலதிக நீதவான் நீதிமன்றில் வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டன. வழக்குகளினை விசாரித்த நீதவான் A. A. ஆனந்தராஜா ஒரு வெதுப்பகத்தினை சீல் வைத்து மூடுமாறும், மற்றைய வெதுப்பகத்தினை திருத்த வேலைகளை உடன் மேற்கொள்ளுமாறும் பணித்து வழக்குகளினை எதிர்வரும் 03.07.2024 ற்கு ஒத்திவைத்தார். அத்துடன் உரிமையாளர்களை தலா ஒரு இலட்சம் ஆட்பிணையிலும் விடுவித்தார். இதனையடுத்து பொது சுகாதார பரிசோதகர் பா. சஞ்சீவனால் வெதுப்பகம் சீல் வைத்து மூடப்பட்டது.

சுகாதார சீர்கேடு - கொக்குவில் பகுதியில் வெதுப்பகம் சீல் வைப்பு நல்லூர் சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் சுகாதார வைத்திய அதிகாரி மற்றும் பொது சுகாதார பரிசோதகர்கள் குழுவினரால் தொடர்ச்சியாக உணவு கையாளும் நிலையங்கள் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டு, சுகாதார சீர்கேடான உணவு கையாளும் நிலையங்களிற்கு எதிராக சட்டநடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.அந்த வகையில் கடந்த 12.06.2024ம் திகதி நல்லூர் சுகாதார வைத்திய அதிகாரி, மேற்பார்வை பொது சுகாதார பரிசோதகர் தலைமையிலான பொது சுகாதார பரிசோதகர்கள் குழாமினால் நல்லூர் சுகாதார வைத்திய அதிகாரி பணிமனைக்கு உட்பட்ட 09 வெதுப்பகங்கள் இரவு திடீர் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டு இருந்தன. இதன்போது கொக்குவில் பகுதியில் சுகாதார சீர்கேடாக இயங்கிய 02 வெதுப்பகங்கள் இனங்காணப்பட்டன.இரண்டு வெதுப்பகங்களிற்கும் எதிராக கொக்குவில் பொது சுகாதார பரிசோதகர் பா. சஞ்சீவனால் இன்று(24) யாழ் மேலதிக நீதவான் நீதிமன்றில் வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டன. வழக்குகளினை விசாரித்த நீதவான் A. A. ஆனந்தராஜா ஒரு வெதுப்பகத்தினை சீல் வைத்து மூடுமாறும், மற்றைய வெதுப்பகத்தினை திருத்த வேலைகளை உடன் மேற்கொள்ளுமாறும் பணித்து வழக்குகளினை எதிர்வரும் 03.07.2024 ற்கு ஒத்திவைத்தார். அத்துடன் உரிமையாளர்களை தலா ஒரு இலட்சம் ஆட்பிணையிலும் விடுவித்தார். இதனையடுத்து பொது சுகாதார பரிசோதகர் பா. சஞ்சீவனால் வெதுப்பகம் சீல் வைத்து மூடப்பட்டது.

Advertisement

Advertisement

Advertisement