நாடளாவிய ரீதியில் நடத்தப்பட்ட 2024ஆம் ஆண்டுக்கான தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையின் அடிப்படையில், அடுத்த வருடம் 6ஆம் தரத்துக்கு மாணவர்களை பாடசாலைகளில் இணைத்துக்கொள்வதற்கான வெட்டுப்புள்ளிகள் வௌியிடப்பட்டுள்ளன.
அதன்படி மாணவர்கள் தங்களுக்கு கிடைக்கப்பெற்ற பாடசாலைகளை https://g6application.moe.gov.lk/#/ என்ற இணையதளத்திற்கு பிரவேசித்துப் பார்வையிடலாம் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது
2024 ஆம் ஆண்டு 5 ஆம் தர புலமைப்பரிசில் பெறுபேறுகளின் அடிப்படையில் மாணவர்கள் தகுதி பெற்றிருப்பினும், இந்த வெட்டுப்புள்ளிகளின் அடிப்படையில் பாடசாலைகள் கிடைக்காத மற்றும் பிற நியாயமான காரணங்களுக்காக தங்களுக்கான பாடசாலையை மாற்ற விரும்பும் மாணவர்கள் எதிர்காலத்தில் இணையவழி (Online) ஊடாக மாத்திரம் மேன்முறையீடு செய்ய முடியும் என்றும் மேலும் மேன்முறையீடுகளைச் சமர்ப்பிப்பதற்கான காலக்கெடு பின்னர் அறிவிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது
மேலும் அனைத்து மேன்முறையீடுகளும் இணையவழி ஊடாக மட்டுமே கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சுக்கு அனுப்பப்பட வேண்டுமெனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
புலமைப்பரிசில் பரீட்சையின் வெட்டுப்புள்ளிகள் வெளியீடு நாடளாவிய ரீதியில் நடத்தப்பட்ட 2024ஆம் ஆண்டுக்கான தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையின் அடிப்படையில், அடுத்த வருடம் 6ஆம் தரத்துக்கு மாணவர்களை பாடசாலைகளில் இணைத்துக்கொள்வதற்கான வெட்டுப்புள்ளிகள் வௌியிடப்பட்டுள்ளன.அதன்படி மாணவர்கள் தங்களுக்கு கிடைக்கப்பெற்ற பாடசாலைகளை https://g6application.moe.gov.lk/#/ என்ற இணையதளத்திற்கு பிரவேசித்துப் பார்வையிடலாம் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது2024 ஆம் ஆண்டு 5 ஆம் தர புலமைப்பரிசில் பெறுபேறுகளின் அடிப்படையில் மாணவர்கள் தகுதி பெற்றிருப்பினும், இந்த வெட்டுப்புள்ளிகளின் அடிப்படையில் பாடசாலைகள் கிடைக்காத மற்றும் பிற நியாயமான காரணங்களுக்காக தங்களுக்கான பாடசாலையை மாற்ற விரும்பும் மாணவர்கள் எதிர்காலத்தில் இணையவழி (Online) ஊடாக மாத்திரம் மேன்முறையீடு செய்ய முடியும் என்றும் மேலும் மேன்முறையீடுகளைச் சமர்ப்பிப்பதற்கான காலக்கெடு பின்னர் அறிவிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளதுமேலும் அனைத்து மேன்முறையீடுகளும் இணையவழி ஊடாக மட்டுமே கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சுக்கு அனுப்பப்பட வேண்டுமெனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.