• Dec 18 2024

புலமைப்பரிசில் பரீட்சை வினாத்தாள் கசிந்த விவகாரம் - உயர்நீதிமன்றின் விசேட உத்தரவு!

Chithra / Dec 18th 2024, 11:52 am
image


தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையின் முதலாவது வினாத்தாளில் 3 வினாக்கள் கசிந்த சம்பவம் தொடர்பான விரிவான விசாரணை அறிக்கையை நாளை காலை 9 மணிக்கு முன்னர் தாக்கல் செய்யுமாறு குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திற்கு உயர்நீதிமன்றம் இன்று  உத்தரவிட்டுள்ளது. 

ஐந்தாம் தர புலமைப்பரிசில் முதலாம் தாளில் 3 வினாக்கள் கசிந்தமைக்காக உரிய பரீட்சையை மீள நடத்துவதற்கான உத்தரவைப் பிறப்பிக்குமாறு, பரீட்சையில் பங்குபற்றிய மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் குழுவினால் சமர்ப்பிக்கப்பட்ட 4 அடிப்படை உரிமை மனுக்கள் இன்று காலை விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டபோதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. 

நீதிபதிகளான யசந்த கோதாகொட, குமுதுனி விக்கிரமசிங்க மற்றும் அர்ஜுன ஒபேசேகர ஆகியோர் அடங்கிய அமர்வில் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

புலமைப்பரிசில் பரீட்சை வினாத்தாள் கசிந்த விவகாரம் - உயர்நீதிமன்றின் விசேட உத்தரவு தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையின் முதலாவது வினாத்தாளில் 3 வினாக்கள் கசிந்த சம்பவம் தொடர்பான விரிவான விசாரணை அறிக்கையை நாளை காலை 9 மணிக்கு முன்னர் தாக்கல் செய்யுமாறு குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திற்கு உயர்நீதிமன்றம் இன்று  உத்தரவிட்டுள்ளது. ஐந்தாம் தர புலமைப்பரிசில் முதலாம் தாளில் 3 வினாக்கள் கசிந்தமைக்காக உரிய பரீட்சையை மீள நடத்துவதற்கான உத்தரவைப் பிறப்பிக்குமாறு, பரீட்சையில் பங்குபற்றிய மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் குழுவினால் சமர்ப்பிக்கப்பட்ட 4 அடிப்படை உரிமை மனுக்கள் இன்று காலை விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டபோதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. நீதிபதிகளான யசந்த கோதாகொட, குமுதுனி விக்கிரமசிங்க மற்றும் அர்ஜுன ஒபேசேகர ஆகியோர் அடங்கிய அமர்வில் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

Advertisement

Advertisement

Advertisement