கிளிநொச்சியில் 16 சிறுவர்களை பாலியல் துஸ்பிரயோகத்திற்குள்ளாக்கிய விளையாட்டு பயிற்றுநர் விரைவில் கைது செய்யப்படுவார் என இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் யாழ் பிராந்திய இணைப்பாளர் ரி.கனகராஜிடம் கிளிநொச்சி பொலிஸார் உறுதியளித்துள்ளனர்.
கிளிநொச்சி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியுடன் தொடர்புகொண்ட இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் யாழ் பிராந்திய இணைப்பாளர் ரி. கனகராஜ், குறித்த விடயம் தொடர்பில் பொலிஸார் மேற்கொள்ளும் சட்ட நடவடிக்கைகள் குறித்து வினவிய போதே, விளையாட்டு பயிற்றுநர் விரைவில் கைது செய்யப்படுவார் என கிளிநொச்சி பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி தெரிவித்துள்ளார்.
அதேவேளை குறித்த சம்பவத்தால் பாதிக்கப்பட்ட சிறார்களின் வாக்குமூலங்கள் கிளிநொச்சி பொலீஸ் நிலையத்தில் பதிவு செய்யப்பட்ட பின்னர் இதுவரை சந்தேகநபர் கைது செய்யப்படாமை தொடர்பில் பெற்றோர்கள் மத்தியில் கடும் அதிருப்தி நிலவி வருகின்றது.
சிறுவர்களை பாலியல் துஷ்பிரயோகம் செய்தமை என்பது மிகப்பெரிய சமூக அனர்த்தம். எனினும் இந்த விடயம் தொடர்பில் சட்டநடவடிக்கைகளை மேற்கொள்வோர் அசமந்த போக்கில் இருப்பது பெற்றோர்கள் மத்தியில் பலத்த சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கிளிநொச்சியில் பாடசாலை மாணவர்கள் துஷ்பிரயோக சம்பவம்: மனித உரிமைகள் ஆணைக்குழு நடவடிக்கை. கிளிநொச்சியில் 16 சிறுவர்களை பாலியல் துஸ்பிரயோகத்திற்குள்ளாக்கிய விளையாட்டு பயிற்றுநர் விரைவில் கைது செய்யப்படுவார் என இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் யாழ் பிராந்திய இணைப்பாளர் ரி.கனகராஜிடம் கிளிநொச்சி பொலிஸார் உறுதியளித்துள்ளனர்.கிளிநொச்சி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியுடன் தொடர்புகொண்ட இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் யாழ் பிராந்திய இணைப்பாளர் ரி. கனகராஜ், குறித்த விடயம் தொடர்பில் பொலிஸார் மேற்கொள்ளும் சட்ட நடவடிக்கைகள் குறித்து வினவிய போதே, விளையாட்டு பயிற்றுநர் விரைவில் கைது செய்யப்படுவார் என கிளிநொச்சி பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி தெரிவித்துள்ளார்.அதேவேளை குறித்த சம்பவத்தால் பாதிக்கப்பட்ட சிறார்களின் வாக்குமூலங்கள் கிளிநொச்சி பொலீஸ் நிலையத்தில் பதிவு செய்யப்பட்ட பின்னர் இதுவரை சந்தேகநபர் கைது செய்யப்படாமை தொடர்பில் பெற்றோர்கள் மத்தியில் கடும் அதிருப்தி நிலவி வருகின்றது.சிறுவர்களை பாலியல் துஷ்பிரயோகம் செய்தமை என்பது மிகப்பெரிய சமூக அனர்த்தம். எனினும் இந்த விடயம் தொடர்பில் சட்டநடவடிக்கைகளை மேற்கொள்வோர் அசமந்த போக்கில் இருப்பது பெற்றோர்கள் மத்தியில் பலத்த சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது.