கொழும்பு மற்றும் அதனைச் சுற்றியுள்ள நகர அபிவிருத்தி அதிகார சபையின் நிர்வாகத்தின் கீழுள்ள 24 குடியிருப்பு வளாகங்களின் பாதுகாப்பை பலப்படுத்த அதிரடி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
பொலிஸாரும் நகர அபிவிருத்தி அதிகார சபையும் இணைந்து இந்த நடவடிக்கை எடுத்துள்ளன.
இதன்படி, புதிய பொலிஸ் நிலையங்களை அமைத்தல், ஏற்கனவே உள்ள பொலிஸ் வசதிகளை மேம்படுத்துதல் மற்றும் சுற்றிவளைப்பு நடவடிக்கைகளை அதிகரிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.
சில குடியிருப்பு வளாகங்களில் இடம்பெறும் போதைப்பொருள் கடத்தல் மற்றும் பொது சொத்துக்களுக்கு சேதம் விளைவிக்கும் சம்பவங்கள் தொடர்பிலும் இதன்போது கலந்துரையாடப்பட்டுள்ளது.
மேலும், குற்றச் செயல்களுக்கு எதிராக கடுமையான சட்ட நடவடிக்கைகளை மேற்கொண்டு, அதிக மக்கள் தொகை கொண்ட நகர்ப்புற குடியிருப்பு பகுதிகளில் வசிப்பவர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
பலப்படுத்தப்படும் கொழும்பு குடியிருப்பு வளாகங்களின் பாதுகாப்பு - வந்த அவசர செய்தியால் அதிர்ச்சி கொழும்பு மற்றும் அதனைச் சுற்றியுள்ள நகர அபிவிருத்தி அதிகார சபையின் நிர்வாகத்தின் கீழுள்ள 24 குடியிருப்பு வளாகங்களின் பாதுகாப்பை பலப்படுத்த அதிரடி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. பொலிஸாரும் நகர அபிவிருத்தி அதிகார சபையும் இணைந்து இந்த நடவடிக்கை எடுத்துள்ளன.இதன்படி, புதிய பொலிஸ் நிலையங்களை அமைத்தல், ஏற்கனவே உள்ள பொலிஸ் வசதிகளை மேம்படுத்துதல் மற்றும் சுற்றிவளைப்பு நடவடிக்கைகளை அதிகரிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.சில குடியிருப்பு வளாகங்களில் இடம்பெறும் போதைப்பொருள் கடத்தல் மற்றும் பொது சொத்துக்களுக்கு சேதம் விளைவிக்கும் சம்பவங்கள் தொடர்பிலும் இதன்போது கலந்துரையாடப்பட்டுள்ளது.மேலும், குற்றச் செயல்களுக்கு எதிராக கடுமையான சட்ட நடவடிக்கைகளை மேற்கொண்டு, அதிக மக்கள் தொகை கொண்ட நகர்ப்புற குடியிருப்பு பகுதிகளில் வசிப்பவர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.