• Oct 04 2026

மருந்தகங்கள் மூலம் போதை மாத்திரைகள் விற்பனை? பிரதி அமைச்சர் வெளியிட்ட தகவல்

Chithra / Oct 4th 2026, 10:49 am
image


இலங்கையில் உள்ள சில மருந்தகங்கள் மூலமாகவோ அல்லது மருந்தகங்களின் பெயரையோ பயன்படுத்திப் போதை மாத்திரைகள் மற்றும் தடைசெய்யப்பட்ட பொருட்கள் விற்பனை செய்யப்படுவதாக அதிர்ச்சித் தகவல்கள் கிடைத்துள்ளதாகப் பொதுப் பாதுகாப்பு பிரதி அமைச்சர் சுனில் வட்டகல தெரிவித்துள்ளார்.


அகில இலங்கை தனியார் மருந்தக உரிமையாளர்கள் சங்கத்தின் 11-வது ஆண்டு விழா நிகழ்ச்சியில் கலந்துகொண்டு உரையாற்றியபோதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.


மாணவர்கள் மற்றும் இளைஞர்களிடையே போதை மாத்திரைகளின் பயன்பாடு அதிகரித்து வருவதாகவும், இது தொடர்பாகத் துறை சார்ந்த அதிகாரிகளுக்குப் ஏராளமான புகார்கள் வந்துள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார். 


சில குறிப்பிட்ட மருந்தகங்கள் இத்தகைய சட்டவிரோத மாத்திரைகள் எளிதில் கிடைக்கும் இடங்களாக மாறியுள்ளதாகவும், சிலர் போதைப்பொருள் கடத்தல் மற்றும் விற்பனைக்கான மறைவிடமாக மருந்தகங்களைப் பயன்படுத்தி வருவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.


மேலும், ஆயுர்வேத நிறுவனங்கள் என்ற பெயரில் செயல்படும் சில போலி மையங்களில் சட்டவிரோத ஊக்க மருந்துகள் விற்கப்படுவதாகவும் பிரதி அமைச்சர் குற்றம் சாட்டியுள்ளார்.


இத்தகைய குற்றச் செயல்களை முற்றிலும் தடுக்கும் பொருட்டு, ஒவ்வொரு மாவட்டத்திலும் உள்ள மருந்தக உரிமையாளர்களுடன் நேரடியாகக் கலந்துரையாடித் தீர்வு காணும் சிறப்புத் திட்டத்தைப் பொதுப் பாதுகாப்பு அமைச்சு தொடங்கவுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.


சட்டவிரோத நடவடிக்கைகளில் ஈடுபடுபவர்கள் யாராக இருந்தாலும், அவர்களின் பதவி அல்லது சமூக அந்தஸ்தைப் பொருட்படுத்தாமல் அரசு சட்டத்தைச் சமமாக நடைமுறைப்படுத்தும் என்றும் பிரதி அமைச்சர் சுனில் வட்டகல கடுமையாக எச்சரித்துள்ளார்.

மருந்தகங்கள் மூலம் போதை மாத்திரைகள் விற்பனை பிரதி அமைச்சர் வெளியிட்ட தகவல் இலங்கையில் உள்ள சில மருந்தகங்கள் மூலமாகவோ அல்லது மருந்தகங்களின் பெயரையோ பயன்படுத்திப் போதை மாத்திரைகள் மற்றும் தடைசெய்யப்பட்ட பொருட்கள் விற்பனை செய்யப்படுவதாக அதிர்ச்சித் தகவல்கள் கிடைத்துள்ளதாகப் பொதுப் பாதுகாப்பு பிரதி அமைச்சர் சுனில் வட்டகல தெரிவித்துள்ளார்.அகில இலங்கை தனியார் மருந்தக உரிமையாளர்கள் சங்கத்தின் 11-வது ஆண்டு விழா நிகழ்ச்சியில் கலந்துகொண்டு உரையாற்றியபோதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.மாணவர்கள் மற்றும் இளைஞர்களிடையே போதை மாத்திரைகளின் பயன்பாடு அதிகரித்து வருவதாகவும், இது தொடர்பாகத் துறை சார்ந்த அதிகாரிகளுக்குப் ஏராளமான புகார்கள் வந்துள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார். சில குறிப்பிட்ட மருந்தகங்கள் இத்தகைய சட்டவிரோத மாத்திரைகள் எளிதில் கிடைக்கும் இடங்களாக மாறியுள்ளதாகவும், சிலர் போதைப்பொருள் கடத்தல் மற்றும் விற்பனைக்கான மறைவிடமாக மருந்தகங்களைப் பயன்படுத்தி வருவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.மேலும், ஆயுர்வேத நிறுவனங்கள் என்ற பெயரில் செயல்படும் சில போலி மையங்களில் சட்டவிரோத ஊக்க மருந்துகள் விற்கப்படுவதாகவும் பிரதி அமைச்சர் குற்றம் சாட்டியுள்ளார்.இத்தகைய குற்றச் செயல்களை முற்றிலும் தடுக்கும் பொருட்டு, ஒவ்வொரு மாவட்டத்திலும் உள்ள மருந்தக உரிமையாளர்களுடன் நேரடியாகக் கலந்துரையாடித் தீர்வு காணும் சிறப்புத் திட்டத்தைப் பொதுப் பாதுகாப்பு அமைச்சு தொடங்கவுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.சட்டவிரோத நடவடிக்கைகளில் ஈடுபடுபவர்கள் யாராக இருந்தாலும், அவர்களின் பதவி அல்லது சமூக அந்தஸ்தைப் பொருட்படுத்தாமல் அரசு சட்டத்தைச் சமமாக நடைமுறைப்படுத்தும் என்றும் பிரதி அமைச்சர் சுனில் வட்டகல கடுமையாக எச்சரித்துள்ளார்.

Advertisement

Advertisement

Advertisement