• May 23 2026

செல்வம் எம்.பியின் வாகனத்தில் திடீர் தீப் பரம்பல்!

shanu / Nov 3rd 2025, 9:46 pm
image

வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதனின் வாகனத்தில் திடீர் தீப் பரம்பல் ஏற்பட்டுள்ளது.



இச்சம்பவம் வவுனியா, பட்டானிச்சி புளியங்குளம் பகுதியில் நேற்று (02.11) மாலை இடம்பெற்றுள்ளது.


ஜனநாயக தமிழ் தேசியக் கூட்டணியின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும், ரெலோ அமைப்பின் தலைவருமான செல்வம் அடைக்கலநாதனின்  வாகனம் மன்னார் வீதியில் பயணித்த போது வவுனியா, பட்டானிச்சி புளியங்குளம் பகுதியில் வாகனத்தில் மின்சார சீரின்மை காரணமாக தீப் பரம்பல் ஏற்பட்டது.


இதனையடுத்து வாகன சாரதியும், அப் பகுதியில் நின்றவர்களும் துரிதமாக செயற்பட்டு தீயைக் கட்டுக்குள் கொண்டு வந்தனர். 


இச் சம்பவத்தின் போது வாகனத்தில் பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் பயணிக்கவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

செல்வம் எம்.பியின் வாகனத்தில் திடீர் தீப் பரம்பல் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதனின் வாகனத்தில் திடீர் தீப் பரம்பல் ஏற்பட்டுள்ளது.இச்சம்பவம் வவுனியா, பட்டானிச்சி புளியங்குளம் பகுதியில் நேற்று (02.11) மாலை இடம்பெற்றுள்ளது.ஜனநாயக தமிழ் தேசியக் கூட்டணியின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும், ரெலோ அமைப்பின் தலைவருமான செல்வம் அடைக்கலநாதனின்  வாகனம் மன்னார் வீதியில் பயணித்த போது வவுனியா, பட்டானிச்சி புளியங்குளம் பகுதியில் வாகனத்தில் மின்சார சீரின்மை காரணமாக தீப் பரம்பல் ஏற்பட்டது.இதனையடுத்து வாகன சாரதியும், அப் பகுதியில் நின்றவர்களும் துரிதமாக செயற்பட்டு தீயைக் கட்டுக்குள் கொண்டு வந்தனர். இச் சம்பவத்தின் போது வாகனத்தில் பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் பயணிக்கவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement

Advertisement