செம்மணி மீள் அகழ்வுப்பணி பாதீட்டுக்கு நீதி அமைச்சு இதுவரை அனுமதி வழங்கவில்லை. இதனால் ஏற்கனவே 20 ஆம் திகதி திட்டமிடப்பட்டிருந்த அகழ்வுப் பணி முன்னெடுக்கப்பட மாட்டாது. இதற்குப் பதிலாக எதிர்வரும் 27ஆம் திகதி தற்காலிகமாக அகழ்வுப் பணிகள் முன்னெடுக்க திட்டமிட்டுள்ளோம் என சட்டத்தரணி ரனித்தா தெரிவித்துள்ளார்.
செம்மணி மனித புதைகுழி அகழ்வு தொடர்பான வழக்கு யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.
விசாரணையின் பின்னரே சட்டத்தரணி இதனைத் தெரிவித்தார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
செம்மணி மனிதபுதைகுழியின் அகழ்வுக்கான பாதீட்டுக்கு நீதி அமைச்சு அனுமதி வழங்கவில்லை. இதனால் எதிர்வரும் 20 ஆம் திகதி முன்னெடுக்கப்படவிருந்த அகழ்வுப் பணி நிறுத்தப்பட்டுள்ளது.
தற்காலிக அகழ்வுப் பணி எதிர்வரும் 27 ஆம் திகதி முன்னெடுக்க திட்டமிடப்பட்டுள்ளது. இதற்கிடையே ஐரோப்பிய ஒன்றிய பிரதிநிதிகள் குறித்த பகுதியைப் பார்வையிட அனுமதி கோரிய நிலையில் அவர்களுக்கும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. மீண்டும் வழக்கு 21 ஆம் திகதி திறந்த நீதிமன்றத்தில் விசாரணைக்காக எடுத்துக்கொள்ளப்படவுள்ளது.
செம்மணி மனித புதைகுழி தற்காலிக அகழ்வு 27 இல்; ஐரோப்பிய ஒன்றிய பிரதிநிதிகள் பார்வையிட அனுமதி செம்மணி மீள் அகழ்வுப்பணி பாதீட்டுக்கு நீதி அமைச்சு இதுவரை அனுமதி வழங்கவில்லை. இதனால் ஏற்கனவே 20 ஆம் திகதி திட்டமிடப்பட்டிருந்த அகழ்வுப் பணி முன்னெடுக்கப்பட மாட்டாது. இதற்குப் பதிலாக எதிர்வரும் 27ஆம் திகதி தற்காலிகமாக அகழ்வுப் பணிகள் முன்னெடுக்க திட்டமிட்டுள்ளோம் என சட்டத்தரணி ரனித்தா தெரிவித்துள்ளார். செம்மணி மனித புதைகுழி அகழ்வு தொடர்பான வழக்கு யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.விசாரணையின் பின்னரே சட்டத்தரணி இதனைத் தெரிவித்தார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், செம்மணி மனிதபுதைகுழியின் அகழ்வுக்கான பாதீட்டுக்கு நீதி அமைச்சு அனுமதி வழங்கவில்லை. இதனால் எதிர்வரும் 20 ஆம் திகதி முன்னெடுக்கப்படவிருந்த அகழ்வுப் பணி நிறுத்தப்பட்டுள்ளது. தற்காலிக அகழ்வுப் பணி எதிர்வரும் 27 ஆம் திகதி முன்னெடுக்க திட்டமிடப்பட்டுள்ளது. இதற்கிடையே ஐரோப்பிய ஒன்றிய பிரதிநிதிகள் குறித்த பகுதியைப் பார்வையிட அனுமதி கோரிய நிலையில் அவர்களுக்கும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. மீண்டும் வழக்கு 21 ஆம் திகதி திறந்த நீதிமன்றத்தில் விசாரணைக்காக எடுத்துக்கொள்ளப்படவுள்ளது.