• Oct 02 2026

10 மாதங்களுக்குப் பின்னர் இன்று மீண்டும் ஆரம்பமான சேவை - மக்களுக்கு முக்கிய அறிவிப்பு

Chithra / Oct 2nd 2026, 10:41 am
image


சுமார் 10 மாதங்களுக்குப் பின்னர் இன்று (02) முதல் மலையக ரயில் மார்க்கத்தில் மீண்டும் ரயில் சேவைகள் ஆரம்பிக்கப்படவுள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.


இதற்கமைய, கொழும்பிலிருந்து பேராதனை மற்றும் கம்பளை வரையிலான ரயில் சேவைகள் இன்று முதல் மீண்டும் இடம்பெறவுள்ளதாக ரயில்வே திணைக்களத்தின் போக்குவரத்து அதிகாரி அசங்க சமரசிங்க தெரிவித்துள்ளார்.


டிட்வா சூறாவளியினால் மலையக ரயில் மார்க்கத்தில் ஏற்பட்ட பாதிப்புகளைத் தொடர்ந்து, குறித்த மார்க்கத்தில் ரயில் சேவைகள் இடைநிறுத்தப்பட்டிருந்தன.


இந்நிலையில், சுமார் 10 மாதங்களுக்குப் பின்னர் இன்று முதல் மீண்டும் மலையக மார்க்கத்தில் ரயில் சேவைகள் ஆரம்பிக்கப்படுவதாக அசங்க சமரசிங்க மேலும் தெரிவித்துள்ளார்.


10 மாதங்களுக்குப் பின்னர் இன்று மீண்டும் ஆரம்பமான சேவை - மக்களுக்கு முக்கிய அறிவிப்பு சுமார் 10 மாதங்களுக்குப் பின்னர் இன்று (02) முதல் மலையக ரயில் மார்க்கத்தில் மீண்டும் ரயில் சேவைகள் ஆரம்பிக்கப்படவுள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.இதற்கமைய, கொழும்பிலிருந்து பேராதனை மற்றும் கம்பளை வரையிலான ரயில் சேவைகள் இன்று முதல் மீண்டும் இடம்பெறவுள்ளதாக ரயில்வே திணைக்களத்தின் போக்குவரத்து அதிகாரி அசங்க சமரசிங்க தெரிவித்துள்ளார்.டிட்வா சூறாவளியினால் மலையக ரயில் மார்க்கத்தில் ஏற்பட்ட பாதிப்புகளைத் தொடர்ந்து, குறித்த மார்க்கத்தில் ரயில் சேவைகள் இடைநிறுத்தப்பட்டிருந்தன.இந்நிலையில், சுமார் 10 மாதங்களுக்குப் பின்னர் இன்று முதல் மீண்டும் மலையக மார்க்கத்தில் ரயில் சேவைகள் ஆரம்பிக்கப்படுவதாக அசங்க சமரசிங்க மேலும் தெரிவித்துள்ளார்.

Advertisement

Advertisement

Advertisement