சிகிச்சைக்காகச் சென்ற 25 வயதான இளம் தாய் ஒருவரை பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாக்கிய மருத்துவருக்கு 15 ஆண்டுகள் சிறை விதிக்கப்பட்டுள்ளது.
கடந்த 2020 ஆம் ஆண்டு அனுராதபுரத்தின் திசாவேவா பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு, முன்னர் பொருத்தப்பட்ட கருப்பையக சாதனத்தை (IUD) அகற்றுவதற்காக 25 வயதான தாய் சென்றுள்ளார்.
அதன்போது குறித்த தாயை பாலியல் ரீதியாக துன்புறுத்தியதாக பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டது.
முறைப்பாட்டுக்கமைய அனுராதபுரம், திசாவேவாவைச் சேர்ந்த 70 வயதுடைய மருத்துவர் அனுராதபுரம் பொலிஸாரால் கைது செய்யப்பட்டு, அனுராதபுரம் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டு பிணையில் விடுவிக்கப்பட்டிருந்தார்.
வழக்கு மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது மருத்துவர் குற்றவாளி என அனுராதபுரம் உயர் நீதிமன்றத்தில் நிரூபிக்கப்பட்டது.
அதற்கமைய உயர் நீதிமன்ற நீதிபதி டாக்டர் நளின் டி ஹேவாவாசம் குற்றம் சாட்டப்பட்ட மருத்துவருக்கு 15 ஆண்டுகள் கடுங்காவல் சிறைத்தண்டனை விதித்தார்.
மேலும், 25 வயதான தாய்க்கு இழப்பீடாக 1.5 மில்லியன் ரூபா வழங்குமாறு உயர் நீதிமன்ற நீதிபதி உத்தரவிட்டார். இழப்பீடு வழங்கப்படாவிட்டால், மருத்துவருக்கு கூடுதலாக மூன்று ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்படும் என்றும் நீதிபதி எச்சரித்தார்.
சிறைத்தண்டனைக்கு மேலாக மருத்துவருக்கு 100,000 ரூபா அபராதம் செலுத்த உத்தரவிட்டார், அபராதம் செலுத்தப்படாவிட்டால், அவருக்கு மேலும் ஒரு வருடம் சிறைத்தண்டனை விதிக்கப்படும் என்று எச்சரித்தார்.
சிகிச்சைக்குச் சென்ற பெண்ணிற்கு பாலியல் துன்புறுத்தல்; 70 வயது மருத்துவருக்கு 15 ஆண்டுகள் சிறை சிகிச்சைக்காகச் சென்ற 25 வயதான இளம் தாய் ஒருவரை பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாக்கிய மருத்துவருக்கு 15 ஆண்டுகள் சிறை விதிக்கப்பட்டுள்ளது.கடந்த 2020 ஆம் ஆண்டு அனுராதபுரத்தின் திசாவேவா பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு, முன்னர் பொருத்தப்பட்ட கருப்பையக சாதனத்தை (IUD) அகற்றுவதற்காக 25 வயதான தாய் சென்றுள்ளார். அதன்போது குறித்த தாயை பாலியல் ரீதியாக துன்புறுத்தியதாக பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டது. முறைப்பாட்டுக்கமைய அனுராதபுரம், திசாவேவாவைச் சேர்ந்த 70 வயதுடைய மருத்துவர் அனுராதபுரம் பொலிஸாரால் கைது செய்யப்பட்டு, அனுராதபுரம் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டு பிணையில் விடுவிக்கப்பட்டிருந்தார். வழக்கு மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது மருத்துவர் குற்றவாளி என அனுராதபுரம் உயர் நீதிமன்றத்தில் நிரூபிக்கப்பட்டது.அதற்கமைய உயர் நீதிமன்ற நீதிபதி டாக்டர் நளின் டி ஹேவாவாசம் குற்றம் சாட்டப்பட்ட மருத்துவருக்கு 15 ஆண்டுகள் கடுங்காவல் சிறைத்தண்டனை விதித்தார்.மேலும், 25 வயதான தாய்க்கு இழப்பீடாக 1.5 மில்லியன் ரூபா வழங்குமாறு உயர் நீதிமன்ற நீதிபதி உத்தரவிட்டார். இழப்பீடு வழங்கப்படாவிட்டால், மருத்துவருக்கு கூடுதலாக மூன்று ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்படும் என்றும் நீதிபதி எச்சரித்தார்.சிறைத்தண்டனைக்கு மேலாக மருத்துவருக்கு 100,000 ரூபா அபராதம் செலுத்த உத்தரவிட்டார், அபராதம் செலுத்தப்படாவிட்டால், அவருக்கு மேலும் ஒரு வருடம் சிறைத்தண்டனை விதிக்கப்படும் என்று எச்சரித்தார்.