• May 24 2026

அறுகம் குடாவில் வெளிநாட்டுப் பெண்ணுக்கு பாலியல் தொல்லை; பொதுமக்களிடம் உதவி கோரிய பொலிஸார்

Chithra / Nov 16th 2025, 9:00 am
image

வெளிநாட்டுப் பெண் ஒருவரிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட முயன்றதாகச் சந்தேகிக்கப்படும் நபரைக் கைது செய்வதற்காகப் பொலிஸார் பொதுமக்களின் உதவியை நாடியுள்ளனர். 

கடந்த ஒக்டோபர் 25ஆம் திகதி அறுகம்பே பிரதேசத்தில் வெளிநாட்டுப் பெண் ஒருவருக்குப் பாலியல் தொந்தரவு கொடுத்த சம்பவம் தொடர்பில் இந்தச் சந்தேகநபரைத் தேடி பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். 


இந்நிலையில், பொலிஸாரின் கூற்றுப்படி, சந்தேக நபர் மோசமான பாலியல் நடத்தையில் ஈடுபடுவதைக் காட்டும் காணொளியை அந்தப் பெண் வெளியிட்டுள்ளார். 

இதனை தொடர்ந்து, சம்பவம் குறித்து பொத்துவில் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். 

சந்தேக நபரைப் பற்றிய தகவல் தெரிந்தவர்கள் 063 2248022 என்ற எண்ணில் பொத்துவில் பொலிஸ் நிலையத்தையோ அல்லது 071 8591168 என்ற எண்ணில் பொறுப்பதிகாரியையோ தொடர்பு கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. 


அறுகம் குடாவில் வெளிநாட்டுப் பெண்ணுக்கு பாலியல் தொல்லை; பொதுமக்களிடம் உதவி கோரிய பொலிஸார் வெளிநாட்டுப் பெண் ஒருவரிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட முயன்றதாகச் சந்தேகிக்கப்படும் நபரைக் கைது செய்வதற்காகப் பொலிஸார் பொதுமக்களின் உதவியை நாடியுள்ளனர். கடந்த ஒக்டோபர் 25ஆம் திகதி அறுகம்பே பிரதேசத்தில் வெளிநாட்டுப் பெண் ஒருவருக்குப் பாலியல் தொந்தரவு கொடுத்த சம்பவம் தொடர்பில் இந்தச் சந்தேகநபரைத் தேடி பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். இந்நிலையில், பொலிஸாரின் கூற்றுப்படி, சந்தேக நபர் மோசமான பாலியல் நடத்தையில் ஈடுபடுவதைக் காட்டும் காணொளியை அந்தப் பெண் வெளியிட்டுள்ளார். இதனை தொடர்ந்து, சம்பவம் குறித்து பொத்துவில் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். சந்தேக நபரைப் பற்றிய தகவல் தெரிந்தவர்கள் 063 2248022 என்ற எண்ணில் பொத்துவில் பொலிஸ் நிலையத்தையோ அல்லது 071 8591168 என்ற எண்ணில் பொறுப்பதிகாரியையோ தொடர்பு கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. 

Advertisement

Advertisement

Advertisement