சாந்தனின் இறுதிக் கிரியைகள் சற்றுமுன் யாழ் உடுப்பிட்டி பகுதியில் உள்ள அவரது இல்லத்தில் இடம்பெற்று வருகின்றது.
இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது
ராஜீவ் காந்தி கொலை வழக்கில் விடுதலையாகி திருச்சி முகாமில் தடுத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் உடல்நிலை பாதிக்கப்பட்டு, கடந்த 28 ஆம் திகதி காலை உயிரிழந்த தில்லையம்பலம் சுதேந்திரராஜாவின் எனப்படும் சாந்தனின் வித்துடல் பெருந்திரளானோரின் கண்ணீருக்கு மத்தியில் அவரது ஊரான உடுப்பிட்டியை நேற்றையதினம்(03) மாலை வந்தடைந்தது.
இந்நிலையில் சற்றுமுன் இறுதிக்கிரியைகள் ஆரம்பமாகியுள்ளது.
அதேவேளை இன்று காலை முதல் சமயத் தலைவர்கள், அரசியல் பிரதிநிதிகள், பொது அமைப்புக்களின் பிரதிநிதிகள், பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டு இறுதி அஞ்சலியை செலுத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
சற்றுமுன் ஆரம்பமான சாந்தனின் இறுதி நிகழ்வுகள். பெருந்திரளான மக்கள் பங்கேற்பு. சாந்தனின் இறுதிக் கிரியைகள் சற்றுமுன் யாழ் உடுப்பிட்டி பகுதியில் உள்ள அவரது இல்லத்தில் இடம்பெற்று வருகின்றது.இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவதுராஜீவ் காந்தி கொலை வழக்கில் விடுதலையாகி திருச்சி முகாமில் தடுத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் உடல்நிலை பாதிக்கப்பட்டு, கடந்த 28 ஆம் திகதி காலை உயிரிழந்த தில்லையம்பலம் சுதேந்திரராஜாவின் எனப்படும் சாந்தனின் வித்துடல் பெருந்திரளானோரின் கண்ணீருக்கு மத்தியில் அவரது ஊரான உடுப்பிட்டியை நேற்றையதினம்(03) மாலை வந்தடைந்தது. இந்நிலையில் சற்றுமுன் இறுதிக்கிரியைகள் ஆரம்பமாகியுள்ளது.அதேவேளை இன்று காலை முதல் சமயத் தலைவர்கள், அரசியல் பிரதிநிதிகள், பொது அமைப்புக்களின் பிரதிநிதிகள், பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டு இறுதி அஞ்சலியை செலுத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.