பூநகரி- சங்குப்பிட்டி பாலத்திற்கருகில் பெண்ணொருவரின் சடலம் மீட்கப்பட்ட நிலையில் குறித்த பெண் தொடர்பில் திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
சங்குப்பிட்டி கடற்கரையில் நேற்று பெண்ணொருவரின் சடலம் மீட்கப்பட்டது.
இதுவரையில், பெண்ணின் சடலம் அடையாளம் காணப்படாத நிலையில் பிரேத பரிசோதனைக்காக கிளிநொச்சி மாவட்ட பொது வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
இந்த நிலையில் குறித்த பெண்ணின் சடலம் தொடர்பில் தகவல்கள் வெளியாகியுள்ளன.
யாழ்ப்பாணம்- காரைநகர் பகுதியை சேர்ந்த 2 பிள்ளைகளின் தாயாரான 36 வயதான பெண் நேற்று (12) சடலமாக மீட்கப்பட்டவராவார்.
அவரது சடலம் இன்று யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில், சட்ட வைத்திய அதிகாரி செ.பிரணவன் முன்னிலையில் உடற்கூராய்வுக்குட்படுத்தப்பட்டது.
இதன்போது, அந்த பெண் படுகொலை செய்யப்பட்ட விடயம் உடற்கூற்றுப் பரிசோதனையில் தெரியவந்துள்ளது.
பெண்ணின் தலையில் குத்தப்பட்டு, முகம் உள்ளிட்ட பகுதிகளில் எரியக்கூடிய திரவம் ஊற்றப்பட்டு எரிக்கப்பட்டு, கடலுக்குள் வீசப்பட்டுள்ளார்.
அவரது நுரையீரலில் நீர் புகுந்து, மூச்சுத்திணறலால் உயிரிழந்தது உடற்கூற்றுப் பரிசோதனையில் தெரிய வந்துள்ளது.
குறித்த பெண் வீட்டை விட்டு புறப்பட்ட போது, 10 பவுண் நகை அணிந்துள்ளார். அவரது சடலத்தில் நகைகள் காணப்பட்டிருக்கவில்லை.
அவர் வீட்டை விட்டு புறப்பட்ட போது, தனது நண்பியுடன் வவுனியா செல்வதாகக் குறிப்பிட்டுள்ளார்.
எனினும், இதுவரையான விசாரணையில் வெளியான தகவலின்படி, அந்த பெண் தனது கணவரிடம் குறிப்பிட்டவர்களுடன் சென்றிருக்கவில்லையென்பது தெரிய வந்துள்ளது.
குறித்த பெண் பாலியல் பலாத்காரத்திற்கு உள்ளானதாக செய்திகள் வெளியாகியிருந்த போதும், உடற்கூற்றுப் பரிசோதனையில் அது உறுதிப்படுத்தப்படவில்லையென்பது குறிப்பிடத்தக்கது.
வெகுவிரைவில் குற்றவாளிகள் கைது செய்யப்படுவார்கள் என பொலிசார் நம்பிக்கை வெளியிட்டுள்ளனர்.
சங்குப்பிட்டியில் சடலமாக மீட்கப்பட்ட குடும்ப பெண் தொடர்பில் வெளியாகிய திடுக்கிடும் தகவல் படுகொலை செய்யப்பட்டது உறுதி பூநகரி- சங்குப்பிட்டி பாலத்திற்கருகில் பெண்ணொருவரின் சடலம் மீட்கப்பட்ட நிலையில் குறித்த பெண் தொடர்பில் திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளன. சங்குப்பிட்டி கடற்கரையில் நேற்று பெண்ணொருவரின் சடலம் மீட்கப்பட்டது. இதுவரையில், பெண்ணின் சடலம் அடையாளம் காணப்படாத நிலையில் பிரேத பரிசோதனைக்காக கிளிநொச்சி மாவட்ட பொது வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இந்த நிலையில் குறித்த பெண்ணின் சடலம் தொடர்பில் தகவல்கள் வெளியாகியுள்ளன. யாழ்ப்பாணம்- காரைநகர் பகுதியை சேர்ந்த 2 பிள்ளைகளின் தாயாரான 36 வயதான பெண் நேற்று (12) சடலமாக மீட்கப்பட்டவராவார். அவரது சடலம் இன்று யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில், சட்ட வைத்திய அதிகாரி செ.பிரணவன் முன்னிலையில் உடற்கூராய்வுக்குட்படுத்தப்பட்டது.இதன்போது, அந்த பெண் படுகொலை செய்யப்பட்ட விடயம் உடற்கூற்றுப் பரிசோதனையில் தெரியவந்துள்ளது. பெண்ணின் தலையில் குத்தப்பட்டு, முகம் உள்ளிட்ட பகுதிகளில் எரியக்கூடிய திரவம் ஊற்றப்பட்டு எரிக்கப்பட்டு, கடலுக்குள் வீசப்பட்டுள்ளார்.அவரது நுரையீரலில் நீர் புகுந்து, மூச்சுத்திணறலால் உயிரிழந்தது உடற்கூற்றுப் பரிசோதனையில் தெரிய வந்துள்ளது.குறித்த பெண் வீட்டை விட்டு புறப்பட்ட போது, 10 பவுண் நகை அணிந்துள்ளார். அவரது சடலத்தில் நகைகள் காணப்பட்டிருக்கவில்லை.அவர் வீட்டை விட்டு புறப்பட்ட போது, தனது நண்பியுடன் வவுனியா செல்வதாகக் குறிப்பிட்டுள்ளார்.எனினும், இதுவரையான விசாரணையில் வெளியான தகவலின்படி, அந்த பெண் தனது கணவரிடம் குறிப்பிட்டவர்களுடன் சென்றிருக்கவில்லையென்பது தெரிய வந்துள்ளது.குறித்த பெண் பாலியல் பலாத்காரத்திற்கு உள்ளானதாக செய்திகள் வெளியாகியிருந்த போதும், உடற்கூற்றுப் பரிசோதனையில் அது உறுதிப்படுத்தப்படவில்லையென்பது குறிப்பிடத்தக்கது.வெகுவிரைவில் குற்றவாளிகள் கைது செய்யப்படுவார்கள் என பொலிசார் நம்பிக்கை வெளியிட்டுள்ளனர்.