தொழில்நுட்ப சாதனக் கடையொன்றிற்குள் தீடிரென முச்சக்கரவண்டி ஒன்று பாய்ந்து விபத்திற்குள்ளாகியுள்ளது.
இந்தச் சம்பவம் மட்டக்களப்பு - ஏறாவூர் பகுதியில் தொழில்நுட்ப சாதனக் கடையொன்றில் இடம்பெற்றுள்ளது.
குறித்த தொழில்நுட்ப சாதனக் கடையொன்றில் பெண்ணொருவர் பிறின்ட் எடுப்பதற்காக சென்றுள்ளார்.
அங்கு ஊழியர் பிறின்ட் எடுத்துக்கொண்டிருந்த வேளையில் திடீரென முச்சக்கரவண்டி கடைக்குள் வேகமாகப் புகுந்துள்ளது.
கட்டுப்பாட்டையிழந்ததில் குறித்த முச்சக்கரவண்டி கடைக்குள் பாய்ந்துள்ளதாக அவதானிக்கப்படுகின்றது.
முச்சக்கரவண்டி பாய்ந்த வேளையில் அங்கு பெண் நின்று கொண்டிருந்தார். எனினும் ஒரு நொடிப்பொழுதில் அவர் உயிர்தப்பியுள்ளார்.
அங்கிருந்த ஊழியரும் உரிமையாளரும் தலையில் கைவைத்தவாறு பதறினர். முச்சக்கரவண்டி கடைக்குள் பாய்ந்ததில் கடையில் கண்ணாடிகள் நொருங்கியுள்ளதுடன் பல லட்சம் பெறுமதியான பொருட்களும் சேதமடைந்துள்ளது.
முச்சக்கரவண்டி கடைக்குள் பாய்ந்து விபத்திற்குள்ளாகும் காணொளி ஒரு கணம் பதறவைத்துள்ளது.
கடைக்குள் புகுந்த முச்சக்கரவண்டி; நொடியில் தப்பிய பெண் பதறவைக்கும் காணொளி தொழில்நுட்ப சாதனக் கடையொன்றிற்குள் தீடிரென முச்சக்கரவண்டி ஒன்று பாய்ந்து விபத்திற்குள்ளாகியுள்ளது. இந்தச் சம்பவம் மட்டக்களப்பு - ஏறாவூர் பகுதியில் தொழில்நுட்ப சாதனக் கடையொன்றில் இடம்பெற்றுள்ளது. குறித்த தொழில்நுட்ப சாதனக் கடையொன்றில் பெண்ணொருவர் பிறின்ட் எடுப்பதற்காக சென்றுள்ளார். அங்கு ஊழியர் பிறின்ட் எடுத்துக்கொண்டிருந்த வேளையில் திடீரென முச்சக்கரவண்டி கடைக்குள் வேகமாகப் புகுந்துள்ளது. கட்டுப்பாட்டையிழந்ததில் குறித்த முச்சக்கரவண்டி கடைக்குள் பாய்ந்துள்ளதாக அவதானிக்கப்படுகின்றது. முச்சக்கரவண்டி பாய்ந்த வேளையில் அங்கு பெண் நின்று கொண்டிருந்தார். எனினும் ஒரு நொடிப்பொழுதில் அவர் உயிர்தப்பியுள்ளார். அங்கிருந்த ஊழியரும் உரிமையாளரும் தலையில் கைவைத்தவாறு பதறினர். முச்சக்கரவண்டி கடைக்குள் பாய்ந்ததில் கடையில் கண்ணாடிகள் நொருங்கியுள்ளதுடன் பல லட்சம் பெறுமதியான பொருட்களும் சேதமடைந்துள்ளது. முச்சக்கரவண்டி கடைக்குள் பாய்ந்து விபத்திற்குள்ளாகும் காணொளி ஒரு கணம் பதறவைத்துள்ளது.