அமெரிக்கா சுப்பர் பவுல் விளையாட்டின் வெற்றிப் பேரணியின் போது இடம்பெற்ற துப்பாக்கி சூட்டில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
குறித்த விடயம் தொடர்பில் மேலும் தெரிய வருவதாவது,
அமெரிக்காவின் மிசோரி மாகாணத்தில் உள்ள கன்சாஸ் நகரில் உள்ளூர் சூப்பர் லீக் போட்டியில் வெற்றி பெற்ற அணி, நேற்றையதினம்(14) ஆயிரக்கணக்கான ரசிகர்களுக்கு மத்தியில் பேரணியாகச் சென்று கொண்டிருந்தனர்.
இந்த பேரணியின் முடிவில், வீரர்கள் உரையாற்றிய சிறிது நேரத்தில் ரசிகர்கள் மத்தியில் கலவரம் வெடித்தது. இந்த கலவரத்தின் போது அடையாளம் தெரியாத நபர்கள் திடீரென ரசிகர்கள் மீது துப்பாக்கியால் சுட்டனர்.
இந்த சம்பவத்தில் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். 9 குழந்தைகள் உட்பட 20க்கும் மேற்பட்டோர் உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
மேலும் இந்த துப்பாக்கி சூடு சம்பவத்தில் தொடர்புடைய 3 பேரை பொலிசார் கைது செய்து விசாரணை நடத்தி வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
அமெரிக்காவில் இடம்பெற்ற பேரணியில் துப்பாக்கிச் சூடு. ஒருவர் உயிரிழப்பு. அமெரிக்கா சுப்பர் பவுல் விளையாட்டின் வெற்றிப் பேரணியின் போது இடம்பெற்ற துப்பாக்கி சூட்டில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.குறித்த விடயம் தொடர்பில் மேலும் தெரிய வருவதாவது, அமெரிக்காவின் மிசோரி மாகாணத்தில் உள்ள கன்சாஸ் நகரில் உள்ளூர் சூப்பர் லீக் போட்டியில் வெற்றி பெற்ற அணி, நேற்றையதினம்(14) ஆயிரக்கணக்கான ரசிகர்களுக்கு மத்தியில் பேரணியாகச் சென்று கொண்டிருந்தனர்.இந்த பேரணியின் முடிவில், வீரர்கள் உரையாற்றிய சிறிது நேரத்தில் ரசிகர்கள் மத்தியில் கலவரம் வெடித்தது. இந்த கலவரத்தின் போது அடையாளம் தெரியாத நபர்கள் திடீரென ரசிகர்கள் மீது துப்பாக்கியால் சுட்டனர்.இந்த சம்பவத்தில் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். 9 குழந்தைகள் உட்பட 20க்கும் மேற்பட்டோர் உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.மேலும் இந்த துப்பாக்கி சூடு சம்பவத்தில் தொடர்புடைய 3 பேரை பொலிசார் கைது செய்து விசாரணை நடத்தி வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.