• Apr 15 2026

இரு உழவு இயந்திரங்கள் மீது துப்பாக்கிச் சூடு; கிளிநொச்சியில் விசேட அதிரடிப்படையினர் அதிரடி

Chithra / Feb 27th 2026, 9:50 am
image

 

கிளிநொச்சி பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பரந்தன், பூநகரி வீதி பகுதியில் சட்டவிரோதமான முறையில் மணல் ஏற்றி பயணித்த  இரண்டு உழவு இயந்திரங்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளது. 


விசேட அதிரடிப்படையினர் தடுத்து நிறுத்தியபோதும் சமிக்ஞையை மீறி சென்றமையால் துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்ளப்பட்டது என  விசேட அதிரடிப்படையினர் தெரிவித்துள்ளனர். 


நேற்று இரவு இவ்வாறு துப்பாக்கிச் சூடு பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.


விசேட  அதிரடிப்படையினருக்கு கிடைத்த இரகசிய தகவலுக்கு அமைவாக குறித்த சுற்றிவளைப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. 


இதன்போது சட்டவிரோதமான முறையில் மணல் ஏற்றி பயணித்த உழவு இயந்திர சாரதி ஒருவர் தப்பிஓடிய நிலையில் மற்றைய உழவு இயந்திர சாரதி கைது செய்யப்பட்டுள்ளார்.


குறித்த சம்பவத்தில், விசேட அதிரடிப்படையினர் ஒருவர் உழவு இயந்திரத்தில் மோதுண்டு காயமடைந்த நிலையில் கிளிநொச்சி பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.  



இரு உழவு இயந்திரங்கள் மீது துப்பாக்கிச் சூடு; கிளிநொச்சியில் விசேட அதிரடிப்படையினர் அதிரடி  கிளிநொச்சி பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பரந்தன், பூநகரி வீதி பகுதியில் சட்டவிரோதமான முறையில் மணல் ஏற்றி பயணித்த  இரண்டு உழவு இயந்திரங்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளது. விசேட அதிரடிப்படையினர் தடுத்து நிறுத்தியபோதும் சமிக்ஞையை மீறி சென்றமையால் துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்ளப்பட்டது என  விசேட அதிரடிப்படையினர் தெரிவித்துள்ளனர். நேற்று இரவு இவ்வாறு துப்பாக்கிச் சூடு பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.விசேட  அதிரடிப்படையினருக்கு கிடைத்த இரகசிய தகவலுக்கு அமைவாக குறித்த சுற்றிவளைப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதன்போது சட்டவிரோதமான முறையில் மணல் ஏற்றி பயணித்த உழவு இயந்திர சாரதி ஒருவர் தப்பிஓடிய நிலையில் மற்றைய உழவு இயந்திர சாரதி கைது செய்யப்பட்டுள்ளார்.குறித்த சம்பவத்தில், விசேட அதிரடிப்படையினர் ஒருவர் உழவு இயந்திரத்தில் மோதுண்டு காயமடைந்த நிலையில் கிளிநொச்சி பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.  

Advertisement

Advertisement

Advertisement