கம்பஹாவில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் இரண்டு பேர் காயமடைந்துள்ளனர்.
இச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது
கம்பஹா காவல் பிரிவின் கிரிந்திவிட்ட - அகரவிட்ட பகுதியில் உள்ள மோட்டார் சைக்கிள் உதிரி பாகங்கள் விற்பனை நிலையத்தில் இன்று(08) பிற்பகல் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் இரண்டு பேர் காயமடைந்துள்ளனர்.
காயமடைந்த இருவரும் கம்பஹா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
குறித்த கடைக்கு மோட்டார் சைக்கிளில் வந்த இரண்டு நபர்களால் இந்த துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இதன்போது கடையில் இருந்த இரண்டு பேர் காயமடைந்தனர்.
அதேவேளை துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்கான இருவரில் ஒருவரின் நிலைமை மிகவும் கவலைக்கிடமாக இருப்பதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
குறித்த துப்பாக்கிச் சூட்டுக்கான காரணம் இதுவரை வெளியாகவில்லை.
அதேவேளை, சந்தேகநபர்களைக் கைது செய்வதற்காக கம்பஹா பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
கம்பஹாவில் துப்பாக்கிச் சூடு: மர்ம நபர்கள் துணிகரம். கம்பஹாவில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் இரண்டு பேர் காயமடைந்துள்ளனர்.இச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவதுகம்பஹா காவல் பிரிவின் கிரிந்திவிட்ட - அகரவிட்ட பகுதியில் உள்ள மோட்டார் சைக்கிள் உதிரி பாகங்கள் விற்பனை நிலையத்தில் இன்று(08) பிற்பகல் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் இரண்டு பேர் காயமடைந்துள்ளனர்.காயமடைந்த இருவரும் கம்பஹா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.குறித்த கடைக்கு மோட்டார் சைக்கிளில் வந்த இரண்டு நபர்களால் இந்த துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.இதன்போது கடையில் இருந்த இரண்டு பேர் காயமடைந்தனர்.அதேவேளை துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்கான இருவரில் ஒருவரின் நிலைமை மிகவும் கவலைக்கிடமாக இருப்பதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.குறித்த துப்பாக்கிச் சூட்டுக்கான காரணம் இதுவரை வெளியாகவில்லை. அதேவேளை, சந்தேகநபர்களைக் கைது செய்வதற்காக கம்பஹா பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.