கந்தானை பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் இருவர் காயமடைந்துள்ளனர்.
கந்தானை பொதுச் சந்தைக்கு அருகில் இன்று (03) காலை துப்பாக்கிசூடு இடம்பெற்றதாக பொலிஸார் தெரிவித்தனர்.
மோட்டார் சைக்கிளில் வந்த அடையாளம் தெரியாத இருவர், அங்கிருந்த கார் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியதில், காரில் இருந்த இருவர் காயமடைந்தனர்.
காயமடைந்தவர்கள் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
கந்தானையில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் மறைந்த அமைச்சர் மங்கள சமரவீரவின் தனிப்பட்ட செயலாளராகப் பணியாற்றிய சமீர மனஹார காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்” என்றும் தகவல் கசிந்துள்ளது.
தாக்குதல் நடத்தியவர்களை அடையாளம் கண்டு கைது செய்ய விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகப் பொலிஸால் தெரிவித்துள்ளனர்.
கந்தானையில் துப்பாக்கிச்சூடு - இருவர் காயம் கந்தானை பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் இருவர் காயமடைந்துள்ளனர். கந்தானை பொதுச் சந்தைக்கு அருகில் இன்று (03) காலை துப்பாக்கிசூடு இடம்பெற்றதாக பொலிஸார் தெரிவித்தனர்.மோட்டார் சைக்கிளில் வந்த அடையாளம் தெரியாத இருவர், அங்கிருந்த கார் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியதில், காரில் இருந்த இருவர் காயமடைந்தனர். காயமடைந்தவர்கள் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.கந்தானையில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் மறைந்த அமைச்சர் மங்கள சமரவீரவின் தனிப்பட்ட செயலாளராகப் பணியாற்றிய சமீர மனஹார காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்” என்றும் தகவல் கசிந்துள்ளது. தாக்குதல் நடத்தியவர்களை அடையாளம் கண்டு கைது செய்ய விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகப் பொலிஸால் தெரிவித்துள்ளனர்.