ராகம – படுவத்தை பகுதியில் இன்று இரவு இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
முச்சக்கரவண்டியில் வந்த இருவர், பிஸ்டல் வகை துப்பாக்கியால் வீடொன்றை நோக்கி துப்பாக்கிச் சூடு நடத்திவிட்டு தப்பிச் சென்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்தச் சம்பவம் படுவத்தை கிராம அபிவிருத்தி மாவத்தையில் அமைந்துள்ள வீடொன்றை இலக்காகக் கொண்டு இடம்பெற்றதாகவும், இதில் ‘ஆர்மி உபுல்’ என அழைக்கப்படும் நபர் உயிரிழந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
அவர், கணேமுல்ல சஞ்சீவ எனப்படும் நபரின் நெருங்கிய கூட்டாளியாக அடையாளம் காணப்பட்டுள்ளார்.
துப்பாக்கிச் சூட்டுக்கான காரணம் மற்றும் துப்பாக்கிதாரிகள் தொடர்பான விசாரணைகளை பொலிஸார் தீவிரமாக முன்னெடுத்து வருகின்றனர்.
ராகமையில் துப்பாக்கிச் சூடு-ஒருவர் பலி ராகம – படுவத்தை பகுதியில் இன்று இரவு இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.முச்சக்கரவண்டியில் வந்த இருவர், பிஸ்டல் வகை துப்பாக்கியால் வீடொன்றை நோக்கி துப்பாக்கிச் சூடு நடத்திவிட்டு தப்பிச் சென்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.இந்தச் சம்பவம் படுவத்தை கிராம அபிவிருத்தி மாவத்தையில் அமைந்துள்ள வீடொன்றை இலக்காகக் கொண்டு இடம்பெற்றதாகவும், இதில் ‘ஆர்மி உபுல்’ என அழைக்கப்படும் நபர் உயிரிழந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது. அவர், கணேமுல்ல சஞ்சீவ எனப்படும் நபரின் நெருங்கிய கூட்டாளியாக அடையாளம் காணப்பட்டுள்ளார். துப்பாக்கிச் சூட்டுக்கான காரணம் மற்றும் துப்பாக்கிதாரிகள் தொடர்பான விசாரணைகளை பொலிஸார் தீவிரமாக முன்னெடுத்து வருகின்றனர்.