கொழும்பில் நேற்று இரவு இரண்டு துப்பாக்கிச் சூடு சம்பவங்கள் பதிவாகியுள்ளன.
கிராண்ட்பாஸ் - மஹவத்த மணிக்கூட்டு கோபுரத்திற்கு அருகில் நேற்று (5) இரவு இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில், களணியைச் சேர்ந்த 26 வயதுடைய நபர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் தாக்கதலை நடத்தி விட்டு தப்பிச் சென்றுள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.
காயமடைந்தவர் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதையடுத்து உயிரிழந்துள்ளார்.
குறித்த தாக்குதலுக்கான நோக்கம் இன்னும் கண்டறியப்படவில்லை.
இத் தாக்குதலுக்கு ரிவால்வர் ரக துப்பாக்கி பயன்படுத்தப்பட்டிருக்கலாம் என்று போலீசார் நம்புகின்றனர்.
இதற்கிடையில், மருதானை பஞ்சிகாவத்தை பகுதியில் மற்றொரு துப்பாக்கிச் சூடு இடம்பெற்றுள்ளது.
அதில் 44 வயதுடைய நபர் ஒருவர் காயமடைந்ததாகவும், அவர் கொழும்பு தேசிய மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
சந்தேக நபர்களைக் கைது செய்ய தேவையான நடவடிக்கைகளை பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.
கொழும்பில் நேற்றிரவு பதிவான துப்பாக்கிச் சூட்டு சம்பவங்கள் கொழும்பில் நேற்று இரவு இரண்டு துப்பாக்கிச் சூடு சம்பவங்கள் பதிவாகியுள்ளன.கிராண்ட்பாஸ் - மஹவத்த மணிக்கூட்டு கோபுரத்திற்கு அருகில் நேற்று (5) இரவு இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில், களணியைச் சேர்ந்த 26 வயதுடைய நபர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் தாக்கதலை நடத்தி விட்டு தப்பிச் சென்றுள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.காயமடைந்தவர் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதையடுத்து உயிரிழந்துள்ளார்.குறித்த தாக்குதலுக்கான நோக்கம் இன்னும் கண்டறியப்படவில்லை. இத் தாக்குதலுக்கு ரிவால்வர் ரக துப்பாக்கி பயன்படுத்தப்பட்டிருக்கலாம் என்று போலீசார் நம்புகின்றனர்.இதற்கிடையில், மருதானை பஞ்சிகாவத்தை பகுதியில் மற்றொரு துப்பாக்கிச் சூடு இடம்பெற்றுள்ளது.அதில் 44 வயதுடைய நபர் ஒருவர் காயமடைந்ததாகவும், அவர் கொழும்பு தேசிய மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. சந்தேக நபர்களைக் கைது செய்ய தேவையான நடவடிக்கைகளை பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.