அத்துருகிரியவில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்து கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த பிரபல பாடகி கே.சுஜீவா குணமடைந்து வைத்தியசாலையில் இருந்து வெளியேறியுள்ளார்.
கடந்த ஜூலை மாதம் 8ஆம் திகதி அத்துருகிரியவில் பச்சை குத்தும் நிலைய திறப்பு விழாவில் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிப் பிரயோகத்தில் க்ளப் வசந்த மற்றும் நயன வசுல விஜேசூரிய என்ற 37 வயதான நபர் ஆகியோர் உயிரிழந்தனர்.
இந்த துப்பாக்கி சூட்டு சம்பவத்தில் பாடகி கே.சுஜீவா மற்றும் க்ளப் வசந்தவின் மனைவி உள்ளிட்ட நால்வர் காயமடைந்தனர்.
இந்நிலையில், சுஜீவா ஆரம்பத்தில் தீவிர சிகிச்சைப் பிரிவில் (ICU) சிகிச்சை பெற்று வந்ததாகவும், காலில் ஏற்பட்ட காயங்கள் குணமடைந்ததை அடுத்து மருத்துவ ஆலோசனையின் அடிப்படையில் சுஜீவா வைத்தியசாலையில் இருந்து வெளியேறியதாகவும் வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
இதேவேளை, கிளப் வசந்தாவின் மனைவி கொழும்பு தெற்கு போதனா வைத்தியசாலையின் தீவிர சிகிச்சைப் பிரிவில் தொடர்ந்தும் சிகிச்சை பெற்று வருகின்றார்.
வைத்தியசாலையிலிருந்து வெளியேறினார் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்கான பாடகி சுஜீவா அத்துருகிரியவில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்து கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த பிரபல பாடகி கே.சுஜீவா குணமடைந்து வைத்தியசாலையில் இருந்து வெளியேறியுள்ளார்.கடந்த ஜூலை மாதம் 8ஆம் திகதி அத்துருகிரியவில் பச்சை குத்தும் நிலைய திறப்பு விழாவில் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிப் பிரயோகத்தில் க்ளப் வசந்த மற்றும் நயன வசுல விஜேசூரிய என்ற 37 வயதான நபர் ஆகியோர் உயிரிழந்தனர். இந்த துப்பாக்கி சூட்டு சம்பவத்தில் பாடகி கே.சுஜீவா மற்றும் க்ளப் வசந்தவின் மனைவி உள்ளிட்ட நால்வர் காயமடைந்தனர்.இந்நிலையில், சுஜீவா ஆரம்பத்தில் தீவிர சிகிச்சைப் பிரிவில் (ICU) சிகிச்சை பெற்று வந்ததாகவும், காலில் ஏற்பட்ட காயங்கள் குணமடைந்ததை அடுத்து மருத்துவ ஆலோசனையின் அடிப்படையில் சுஜீவா வைத்தியசாலையில் இருந்து வெளியேறியதாகவும் வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.இதேவேளை, கிளப் வசந்தாவின் மனைவி கொழும்பு தெற்கு போதனா வைத்தியசாலையின் தீவிர சிகிச்சைப் பிரிவில் தொடர்ந்தும் சிகிச்சை பெற்று வருகின்றார்.