• Mar 04 2026

தீப்பற்றி எரியும் சிங்கர் காட்சியறை; இரத்தினபுரியில் பரபரப்பு

Chithra / Jan 16th 2026, 11:58 am
image


இரத்தினபுரியில் உள்ள சிங்கர் காட்சியறையில் தீ பரவல் ஏற்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.


இந்த தீ பரவல் இன்று வெள்ளிக்கிழமை (16) காலை ஏற்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.


இந்த திடீர் தீ விபத்தினால் காட்சியறையில் இருந்த பெருமளவிலான பொருட்கள் சேதமடைந்துள்ளதாக முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.


தீ பரவலுக்கான காரணம் இதுவரை கண்டறியப்படவில்லை என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.


தீயை கட்டுப்படுத்தும் பணிகளில் தீயணைப்பு படையினர் ஈடுபட்டுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்துள்ளனர்.


கடந்த சில மாதங்களாக நாட்டின் பல்வேறு பகுதிகளில் உள்ள சிங்கர் நிறுவனத்தின் காட்சியறைகளில் இவ்வாறான தீ விபத்துச் சம்பவங்கள் தொடர்ச்சியாக இடம்பெற்று வருவது பொதுமக்களிடையே பெரும் அவதானத்தைப் பெற்றுள்ளது. இந்த தொடர் தீ விபத்துகளுக்கான காரணங்கள் குறித்து அதிகாரிகள் தீவிர விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

தீப்பற்றி எரியும் சிங்கர் காட்சியறை; இரத்தினபுரியில் பரபரப்பு இரத்தினபுரியில் உள்ள சிங்கர் காட்சியறையில் தீ பரவல் ஏற்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.இந்த தீ பரவல் இன்று வெள்ளிக்கிழமை (16) காலை ஏற்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.இந்த திடீர் தீ விபத்தினால் காட்சியறையில் இருந்த பெருமளவிலான பொருட்கள் சேதமடைந்துள்ளதாக முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.தீ பரவலுக்கான காரணம் இதுவரை கண்டறியப்படவில்லை என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.தீயை கட்டுப்படுத்தும் பணிகளில் தீயணைப்பு படையினர் ஈடுபட்டுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்துள்ளனர்.கடந்த சில மாதங்களாக நாட்டின் பல்வேறு பகுதிகளில் உள்ள சிங்கர் நிறுவனத்தின் காட்சியறைகளில் இவ்வாறான தீ விபத்துச் சம்பவங்கள் தொடர்ச்சியாக இடம்பெற்று வருவது பொதுமக்களிடையே பெரும் அவதானத்தைப் பெற்றுள்ளது. இந்த தொடர் தீ விபத்துகளுக்கான காரணங்கள் குறித்து அதிகாரிகள் தீவிர விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

Advertisement

Advertisement

Advertisement