இன்று நள்ளிரவு முதல் அமுலாகும் வகையில் எரிபொருட்களின் சினோபெக் நிறுவனமும் அதிகரித்துள்ளது.
இதன்படி ஒக்டேன் 92 ரக பெற்றோல் லீற்றர் ஒன்றின் விலை 5 ரூபாயினால் அதிகரிக்கப்பட்டுள்ளது.
இதன்படி அதன் புதிய விலை 368 ரூபாயாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன், ஒக்டேன் 95 ரக பெற்றோல் லீற்றர் ஒன்றின் விலை 8 ரூபாயினால் குறைக்கப்பட்டுள்ளதுடன் அதன் புதிய விலை 456 ரூபாயாகும்.
இதேவேளை ஒட்டோ டீசல் லீற்றர் ஒன்றின் விலை, 5 ரூபாயினால் அதிகரிக்கப்பட்டுள்ளதுடன் அதன் புதிய விலை 360 ரூபாயாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
அத்துடன், சுப்பர் டீசல் லீற்றர் ஒன்றின் விலை 7 ரூபாயினால் குறைக்கப்பட்டுள்ளது.
இதன்படி சுப்பர் டீசல் லீற்றர் ஒன்றின் புதிய விலை 468 ரூபாயாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை சிபெட்கோவின் புதிய விலைக்கு ஏற்ப எரிபொருட்களின் விலையை அதிகரிக்க லங்கா ஐஓசி நிறுவனமும் தீர்மானித்துள்ளது.
சினோபெக் மற்றும் ஐஓசி நிறுவனத்தின் எரிபொருட்களின் விலையிலும் மாற்றம். இன்று நள்ளிரவு முதல் அமுலாகும் வகையில் எரிபொருட்களின் சினோபெக் நிறுவனமும் அதிகரித்துள்ளது.இதன்படி ஒக்டேன் 92 ரக பெற்றோல் லீற்றர் ஒன்றின் விலை 5 ரூபாயினால் அதிகரிக்கப்பட்டுள்ளது.இதன்படி அதன் புதிய விலை 368 ரூபாயாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.அத்துடன், ஒக்டேன் 95 ரக பெற்றோல் லீற்றர் ஒன்றின் விலை 8 ரூபாயினால் குறைக்கப்பட்டுள்ளதுடன் அதன் புதிய விலை 456 ரூபாயாகும்.இதேவேளை ஒட்டோ டீசல் லீற்றர் ஒன்றின் விலை, 5 ரூபாயினால் அதிகரிக்கப்பட்டுள்ளதுடன் அதன் புதிய விலை 360 ரூபாயாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.அத்துடன், சுப்பர் டீசல் லீற்றர் ஒன்றின் விலை 7 ரூபாயினால் குறைக்கப்பட்டுள்ளது.இதன்படி சுப்பர் டீசல் லீற்றர் ஒன்றின் புதிய விலை 468 ரூபாயாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.இதேவேளை சிபெட்கோவின் புதிய விலைக்கு ஏற்ப எரிபொருட்களின் விலையை அதிகரிக்க லங்கா ஐஓசி நிறுவனமும் தீர்மானித்துள்ளது.