• Apr 29 2025

சிவராம் மற்றும் ரஜிவர்மனின் நினைவேந்தல் வடமராட்சி ஊடக இல்லத்தில் அனுஷ்டிப்பு!

Chithra / Apr 28th 2025, 3:45 pm
image


படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர்களான தராகி சிவராம் மற்றும் செல்வராசா ரஜிவர்மன் ஆகியோரின் நினைவேந்தல் நிகழ்வு வடமராட்சி ஊடக இல்லத்தில் இன்று அனுஷ்டிக்கப்பட்டுள்ளது.

யாழ். வடமராட்சி ஊடக இல்ல செயலாளர் இரா.மயூதரன் தலைமையில் இடம்பெற்ற நிகழ்வில் படுகொலை செய்யப்பட்ட தராகி சிவராம் மற்றும் செல்வராசா ரஜிவர்மன் ஆகியோரின் திருவுருவப்படங்களுக்கு வடமராட்சி ஊடக இல்ல் தலைவர் கு.மகாலிங்கம் மாலை அணிவித்தார். 

தொடர்ந்து ஈகைச்சுடர்கள் ஏற்றப்பட்டு மலர் தூவி அஞ்சலி செலுத்தப்பட்டது. 

இந் நிகழ்வில் கலந்து கொண்டிருந்த யாழ் வடமராட்சி ஊடக இல்லத்தை சேர்ந்த ஊடகவியலாளர்கள் மற்றும் தமிழ்த் தேசிய செயற்பாட்டாளர்கள் பங்கேற்றிருந்தனர்.

இதன்போது கிளிநொச்சி அறிவியல் நகர் பகுதியில் தராகி சிவராம் அடிக்கல் நாட்டி  ஆரம்பித்து வைத்த தமிழ் ஊடக கல்லூரி இராணுவக் கட்டுப்பாட்டில் உள்ளது அக் காணியை விடுவிக்க ஜனாதிபதி நடவடிக்கை எடுக்க வேண்டும் அதற்கு பக்க பலமாக தமிழ் அரசியல் வாதிகள் பாராளுமன்றில் குரல் குடுக்க வேண்டும் என வலியுறித்தியுள்ளது.


சிவராம் மற்றும் ரஜிவர்மனின் நினைவேந்தல் வடமராட்சி ஊடக இல்லத்தில் அனுஷ்டிப்பு படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர்களான தராகி சிவராம் மற்றும் செல்வராசா ரஜிவர்மன் ஆகியோரின் நினைவேந்தல் நிகழ்வு வடமராட்சி ஊடக இல்லத்தில் இன்று அனுஷ்டிக்கப்பட்டுள்ளது.யாழ். வடமராட்சி ஊடக இல்ல செயலாளர் இரா.மயூதரன் தலைமையில் இடம்பெற்ற நிகழ்வில் படுகொலை செய்யப்பட்ட தராகி சிவராம் மற்றும் செல்வராசா ரஜிவர்மன் ஆகியோரின் திருவுருவப்படங்களுக்கு வடமராட்சி ஊடக இல்ல் தலைவர் கு.மகாலிங்கம் மாலை அணிவித்தார். தொடர்ந்து ஈகைச்சுடர்கள் ஏற்றப்பட்டு மலர் தூவி அஞ்சலி செலுத்தப்பட்டது. இந் நிகழ்வில் கலந்து கொண்டிருந்த யாழ் வடமராட்சி ஊடக இல்லத்தை சேர்ந்த ஊடகவியலாளர்கள் மற்றும் தமிழ்த் தேசிய செயற்பாட்டாளர்கள் பங்கேற்றிருந்தனர்.இதன்போது கிளிநொச்சி அறிவியல் நகர் பகுதியில் தராகி சிவராம் அடிக்கல் நாட்டி  ஆரம்பித்து வைத்த தமிழ் ஊடக கல்லூரி இராணுவக் கட்டுப்பாட்டில் உள்ளது அக் காணியை விடுவிக்க ஜனாதிபதி நடவடிக்கை எடுக்க வேண்டும் அதற்கு பக்க பலமாக தமிழ் அரசியல் வாதிகள் பாராளுமன்றில் குரல் குடுக்க வேண்டும் என வலியுறித்தியுள்ளது.

Advertisement

Advertisement

Advertisement