திருகோணமலை – ஹொரவ்பொத்தானை பிரதான வீதியின் நொச்சிக்குளம் பகுதியில் அதிகாலை இடம்பெற்ற கார் விபத்து பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
அதிகாலை 3.30 மணியளவில் இந்தப் பயங்கரம் இடம்பெற்றுள்ளது.
ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நால்வர் காரில் பயணித்துள்ளனர்.
ஆனால், பயணத்தின் போது சாரதிக்கு ஏற்பட்ட தூக்கக் கலக்கம் காரணமாக கார் வீதியை விட்டு விலகி விபத்துக்குள்ளானதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்த விபத்தில் இறக்கக்கண்டி, வாளையூற்று பகுதியைச் சேர்ந்த 29 வயதான என். நிஜாம் உயிரிழந்துள்ளார்.
அவரது மனைவி, ஐந்து வயது மகன் மற்றும் 19 வயது சகோதரர் ஆகியோர் படுகாயமடைந்து திருகோணமலை பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
சம்பவம் தொடர்பில் மொரவெவ பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
தூக்கக் கலக்கம் - அடுத்த நொடி சோகம் - திருகோணமலையில் ஒரே குடும்பத்தை உலுக்கிய துயரம் திருகோணமலை – ஹொரவ்பொத்தானை பிரதான வீதியின் நொச்சிக்குளம் பகுதியில் அதிகாலை இடம்பெற்ற கார் விபத்து பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.அதிகாலை 3.30 மணியளவில் இந்தப் பயங்கரம் இடம்பெற்றுள்ளது. ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நால்வர் காரில் பயணித்துள்ளனர்.ஆனால், பயணத்தின் போது சாரதிக்கு ஏற்பட்ட தூக்கக் கலக்கம் காரணமாக கார் வீதியை விட்டு விலகி விபத்துக்குள்ளானதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.இந்த விபத்தில் இறக்கக்கண்டி, வாளையூற்று பகுதியைச் சேர்ந்த 29 வயதான என். நிஜாம் உயிரிழந்துள்ளார்.அவரது மனைவி, ஐந்து வயது மகன் மற்றும் 19 வயது சகோதரர் ஆகியோர் படுகாயமடைந்து திருகோணமலை பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.சம்பவம் தொடர்பில் மொரவெவ பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.