• May 15 2026

வாழ்வாதாரத்தை பாதுகாக்குமாறு நிலாவெளி சிறு மீன்பிடியாளர்கள் கோரிக்கை!

shanu / Jan 3rd 2026, 8:53 pm
image

திருகோணமலை நிலாவெளி அடம்போடை பகுதியில் சிறு மீன்பிடி தொழிலாளர்களின் வாழ்வாரத்தை பாதுகாக்குமாறு கோரி கொழும்பு குற்றவியல் திணைக்களத்தில் இன்று முறைப்பாடு செய்துள்ளனர்.


இது குறித்து மேலும் தெரிவித்த  நிலாவெளி சிறுபிடி மீன்பிடியாளர் சங்கத்தின் தலைவர்,

 

நாங்கள் சுமார் 450 குடும்பங்கள் உள்ளோம் எமது மீன் பிடியை மேற்கொள்ளும்  காணியான சுமார் 150 ஏக்கர் காணியை தனிநபரால் ஆக்கிரமிப்பு செய்துள்ளார். 


இது தொடர்பில் திருகோணமலை மாவட்டத்தில் உள்ள துறை சார் அதிகாரிகளிடத்தில் முறையிட்டோம் எதுவித பலனும் இல்லை இதனால் கொழும்பு குற்றவியல் திணைக்களத்தில் காணி மோசடி தொடர்பில் முறைப்பாடு செய்துள்ளோம். 


மேலும் ஜனாதிபதி செயலகம்,கடற்றொழில் அமைச்சு உள்ளிட்ட முக்கிய அரச திணைக்களங்களிலும் முறையிட்டுள்ளோம். இது தொடர்பில் ஜனாதிபதி இது தொடர்பில் கவனம் செலுத்தி எங்கள் வாழ்வாதாரத்தை பாதுகாத்து தருமாறும் கோரிக்கை விடுக்கின்றோம் என்றனர்.

வாழ்வாதாரத்தை பாதுகாக்குமாறு நிலாவெளி சிறு மீன்பிடியாளர்கள் கோரிக்கை திருகோணமலை நிலாவெளி அடம்போடை பகுதியில் சிறு மீன்பிடி தொழிலாளர்களின் வாழ்வாரத்தை பாதுகாக்குமாறு கோரி கொழும்பு குற்றவியல் திணைக்களத்தில் இன்று முறைப்பாடு செய்துள்ளனர்.இது குறித்து மேலும் தெரிவித்த  நிலாவெளி சிறுபிடி மீன்பிடியாளர் சங்கத்தின் தலைவர், நாங்கள் சுமார் 450 குடும்பங்கள் உள்ளோம் எமது மீன் பிடியை மேற்கொள்ளும்  காணியான சுமார் 150 ஏக்கர் காணியை தனிநபரால் ஆக்கிரமிப்பு செய்துள்ளார். இது தொடர்பில் திருகோணமலை மாவட்டத்தில் உள்ள துறை சார் அதிகாரிகளிடத்தில் முறையிட்டோம் எதுவித பலனும் இல்லை இதனால் கொழும்பு குற்றவியல் திணைக்களத்தில் காணி மோசடி தொடர்பில் முறைப்பாடு செய்துள்ளோம். மேலும் ஜனாதிபதி செயலகம்,கடற்றொழில் அமைச்சு உள்ளிட்ட முக்கிய அரச திணைக்களங்களிலும் முறையிட்டுள்ளோம். இது தொடர்பில் ஜனாதிபதி இது தொடர்பில் கவனம் செலுத்தி எங்கள் வாழ்வாதாரத்தை பாதுகாத்து தருமாறும் கோரிக்கை விடுக்கின்றோம் என்றனர்.

Advertisement

Advertisement

Advertisement