இந்த ஆண்டின் இதுவரையான காலப்பகுதியில் 33,572 டெங்கு நோயாளர்களும் 19 மரணங்களும் பதிவாகியுள்ளதாக சுகாதாரத் துறையினர் தெரிவித்துள்ளனர்.
மே மாதத்தில் மாத்திரம் 8321 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளதாக சமூக சுகாதார விசேட வைத்திய நிபுணர் துஷானி தாபரேரா குறிப்பிட்டுள்ளார்.
இந்த நோயாளர்களில் பெரும்பாலானோர் கொழும்பு, கம்பஹா மற்றும் குருநாகல் ஆகிய மாவட்டங்களிலேயே அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
டெங்கு நோயாளர்களில் 50 சதவீதமானோர் மேல் மாகாணத்திலிருந்தே பதிவாகியுள்ளதாக சமூக சுகாதார விசேட வைத்திய நிபுணர் துஷானி தாபரேரா மேலும் தெரிவித்துள்ளார்.
இந்த ஆண்டில் இதுவரை 33,572 டெங்கு நோயாளர்கள் பதிவு இந்த ஆண்டின் இதுவரையான காலப்பகுதியில் 33,572 டெங்கு நோயாளர்களும் 19 மரணங்களும் பதிவாகியுள்ளதாக சுகாதாரத் துறையினர் தெரிவித்துள்ளனர். மே மாதத்தில் மாத்திரம் 8321 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளதாக சமூக சுகாதார விசேட வைத்திய நிபுணர் துஷானி தாபரேரா குறிப்பிட்டுள்ளார். இந்த நோயாளர்களில் பெரும்பாலானோர் கொழும்பு, கம்பஹா மற்றும் குருநாகல் ஆகிய மாவட்டங்களிலேயே அடையாளம் காணப்பட்டுள்ளனர். டெங்கு நோயாளர்களில் 50 சதவீதமானோர் மேல் மாகாணத்திலிருந்தே பதிவாகியுள்ளதாக சமூக சுகாதார விசேட வைத்திய நிபுணர் துஷானி தாபரேரா மேலும் தெரிவித்துள்ளார்.