• Sep 17 2024

இலங்கை ரயில் நிலைய கூரைகளில் சூரிய மின்கலங்கள்!

Chithra / Aug 14th 2024, 9:02 am
image

Advertisement

 

இலங்கை ரயில் திணைக்களத்திற்கு சொந்தமான ரயில் நிலையங்கள் மற்றும் கட்டடங்களின் கூரைகளில் சூரிய மின்கலங்களை பொருத்தி சூரியசக்தி மூலம் மின்னுற்பத்தியை ஆரம்பிப்பதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

ரயில் திணைக்களத்திற்கு சொந்தமான 300 இற்கும் அதிகமான ரயில் நிலையங்கள் காணப்படுகின்றன.

குறித்த ரயில் நிலையங்கள் மற்றும் கட்டடங்களின் கூரைகளில் சூரிய மின்கலங்களை பொருத்தி சூரியசக்தி மூலம் மின்னுற்பத்தியை ஆரம்பிப்பது மிகவும் பொருத்தமானதென அடையாளங் காணப்பட்டுள்ளது.

இதற்கமைய, அரச தனியார் பங்குடமை முறையில் இத்திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கு போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சர் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.  


இலங்கை ரயில் நிலைய கூரைகளில் சூரிய மின்கலங்கள்  இலங்கை ரயில் திணைக்களத்திற்கு சொந்தமான ரயில் நிலையங்கள் மற்றும் கட்டடங்களின் கூரைகளில் சூரிய மின்கலங்களை பொருத்தி சூரியசக்தி மூலம் மின்னுற்பத்தியை ஆரம்பிப்பதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.ரயில் திணைக்களத்திற்கு சொந்தமான 300 இற்கும் அதிகமான ரயில் நிலையங்கள் காணப்படுகின்றன.குறித்த ரயில் நிலையங்கள் மற்றும் கட்டடங்களின் கூரைகளில் சூரிய மின்கலங்களை பொருத்தி சூரியசக்தி மூலம் மின்னுற்பத்தியை ஆரம்பிப்பது மிகவும் பொருத்தமானதென அடையாளங் காணப்பட்டுள்ளது.இதற்கமைய, அரச தனியார் பங்குடமை முறையில் இத்திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கு போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சர் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.  

Advertisement

Advertisement

Advertisement