• May 12 2024

கனடாவில் சூரிய கிரகணத்தை பார்வையிட்டவர்களுக்கு கண்களில் பாதிப்பு..!!

Tamil nila / Apr 28th 2024, 6:36 am
image

Advertisement

கனடாவில் குறித்த மாகாணமொன்றில் கடந்த 8ஆம் திகதி தென்பட்ட சூரிய கிரகணத்தைப் நேரடியாக பார்வையிட்ட நூற்றுக்கு மேற்பட்டவர்களுக்கு கண்களில் பாதிப்பு ஏற்பட்டுள்ளமை உறுதிசெய்யப்பட்டுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

கடந்த 8ஆம் திகதி தென்பட்ட இந்த அரிய சூரிய கிரகணமானது கனடா, அமெரிக்கா, மெக்சிகோ மற்றும் வட அமெரிக்கா ஆகிய நாடுகளில் தென்பட்டுள்ளது.

கனடாவின் ஒன்ராறியோ மாகாண, ஆப்டோமெட்ரிஸ்ட் என்னும் கண் மருத்துவ துறை சார் அலுவலர்கள் அமைப்பு சூரிய கிரகணம் நிகழ்ந்த திகதிக்குப் பின்னர் கண் பிரச்சினையுடன் 118 பேர் வைத்தியசாலைகளுக்கு வருகைதந்துள்ளதாக தெரிவித்துள்ளது.

குறித்த நோயாளர்கள், விழித்திரை வீக்கம் , உலர் கண்கள் சோலார் ரெட்டினோபதி , கண் பாதிப்பு ஆகிய பிரச்சினைகளால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

சோலார் ரெட்டினோபதி எனும் கண் நோய் சூரியன் அல்லது சூரிய கிரகணத்தைப் பார்ப்பதால் ஏற்படும் பாதிப்பு என அந்நாட்டு வைத்திய நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

கனடாவில் சூரிய கிரகணத்தை பார்வையிட்டவர்களுக்கு கண்களில் பாதிப்பு. கனடாவில் குறித்த மாகாணமொன்றில் கடந்த 8ஆம் திகதி தென்பட்ட சூரிய கிரகணத்தைப் நேரடியாக பார்வையிட்ட நூற்றுக்கு மேற்பட்டவர்களுக்கு கண்களில் பாதிப்பு ஏற்பட்டுள்ளமை உறுதிசெய்யப்பட்டுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.கடந்த 8ஆம் திகதி தென்பட்ட இந்த அரிய சூரிய கிரகணமானது கனடா, அமெரிக்கா, மெக்சிகோ மற்றும் வட அமெரிக்கா ஆகிய நாடுகளில் தென்பட்டுள்ளது.கனடாவின் ஒன்ராறியோ மாகாண, ஆப்டோமெட்ரிஸ்ட் என்னும் கண் மருத்துவ துறை சார் அலுவலர்கள் அமைப்பு சூரிய கிரகணம் நிகழ்ந்த திகதிக்குப் பின்னர் கண் பிரச்சினையுடன் 118 பேர் வைத்தியசாலைகளுக்கு வருகைதந்துள்ளதாக தெரிவித்துள்ளது.குறித்த நோயாளர்கள், விழித்திரை வீக்கம் , உலர் கண்கள் சோலார் ரெட்டினோபதி , கண் பாதிப்பு ஆகிய பிரச்சினைகளால் பாதிக்கப்பட்டுள்ளனர்.சோலார் ரெட்டினோபதி எனும் கண் நோய் சூரியன் அல்லது சூரிய கிரகணத்தைப் பார்ப்பதால் ஏற்படும் பாதிப்பு என அந்நாட்டு வைத்திய நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

Advertisement

Advertisement

Advertisement