இந்து சமுத்திரத்தின் ஆழ்கடல் பகுதியில் மேலும் நில அதிர்வுகள் ஏற்படக்கூடும் என பேராதனை பல்கலைக்கழகத்தின் புவியியல் துறையின் முன்னாள் சிரேஷ்ட பேராசிரியர் அதுல சேனாரத்ன தெரிவித்துள்ளார்.
இந்தியப் பெருங்கடலில் நேற்று (29) காலை இரண்டு நிலநடுக்கங்கள் ஏற்பட்டன. அதில் ஒன்று ரிக்டர் அளவுகோலில் 4.8 ஆகவும், இரண்டாவது ரிக்டர் அளவுகோலில் 5.8 ஆகவும் பதிவானது.
எவ்வாறாயினும், இந்த அதிர்ச்சிகளினால் நாடு பாதிக்கப்படாது எனவும், இது தொடர்பில் தேவையற்ற அச்சம் தேவையில்லை எனவும் சிரேஷ்ட பேராசிரியர் அதுல சேனாரத்ன தெரிவித்துள்ளார்.
இந்தியப் பெருங்கடலில் நேற்று மாலைத்தீவுக்கு அருகில் இரு நிலநடுக்கள்கள் பதிவாகியிருந்தன.
குறித்த நிலநடுக்கமானது நேற்று காலை 8 மணியளவில் பதிவாகியிருந்தது.
இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 5 ஆக பதிவாகியிருந்ததாக புவியியல் ஆய்வு மற்றும் சுரங்கப் பணியகத்தின் சிரேஷ்ட நில அதிர்வு நிபுணர் நில்மினி தல்தேனா தெரிவித்திருந்தார்.
மேலும் இதற்கு முன்னதாக, ரிக்டர் அளவுகோலில் 4.8, 5.2 மற்றும் 5.8 என 3 நிலநடுக்கங்கள் பதிவாகியிருந்ததாக அவர் மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.
எனினும், நிலநடுக்கத்தினால் இலங்கைக்கு எவ்வித பாதிப்பும் இல்லை என புவியியல் ஆய்வு மற்றும் சுரங்கப் பணியகம் தெரிவித்துள்ளது.
இந்த நிலநடுக்கங்கள் இந்தியப் பெருங்கடலில் மாலத்தீவுக்கு அருகில் பதிவாகியுள்ளன. கடலுக்கு அடியில் உள்ள மலைத்தொடரில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கையை அண்மித்த கடற்பரப்பில் மேலும் சில நில அதிர்வுகள். பேராசிரியர் விடுத்துள்ள எச்சரிக்கை இந்து சமுத்திரத்தின் ஆழ்கடல் பகுதியில் மேலும் நில அதிர்வுகள் ஏற்படக்கூடும் என பேராதனை பல்கலைக்கழகத்தின் புவியியல் துறையின் முன்னாள் சிரேஷ்ட பேராசிரியர் அதுல சேனாரத்ன தெரிவித்துள்ளார்.இந்தியப் பெருங்கடலில் நேற்று (29) காலை இரண்டு நிலநடுக்கங்கள் ஏற்பட்டன. அதில் ஒன்று ரிக்டர் அளவுகோலில் 4.8 ஆகவும், இரண்டாவது ரிக்டர் அளவுகோலில் 5.8 ஆகவும் பதிவானது.எவ்வாறாயினும், இந்த அதிர்ச்சிகளினால் நாடு பாதிக்கப்படாது எனவும், இது தொடர்பில் தேவையற்ற அச்சம் தேவையில்லை எனவும் சிரேஷ்ட பேராசிரியர் அதுல சேனாரத்ன தெரிவித்துள்ளார்.இந்தியப் பெருங்கடலில் நேற்று மாலைத்தீவுக்கு அருகில் இரு நிலநடுக்கள்கள் பதிவாகியிருந்தன.குறித்த நிலநடுக்கமானது நேற்று காலை 8 மணியளவில் பதிவாகியிருந்தது.இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 5 ஆக பதிவாகியிருந்ததாக புவியியல் ஆய்வு மற்றும் சுரங்கப் பணியகத்தின் சிரேஷ்ட நில அதிர்வு நிபுணர் நில்மினி தல்தேனா தெரிவித்திருந்தார்.மேலும் இதற்கு முன்னதாக, ரிக்டர் அளவுகோலில் 4.8, 5.2 மற்றும் 5.8 என 3 நிலநடுக்கங்கள் பதிவாகியிருந்ததாக அவர் மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.எனினும், நிலநடுக்கத்தினால் இலங்கைக்கு எவ்வித பாதிப்பும் இல்லை என புவியியல் ஆய்வு மற்றும் சுரங்கப் பணியகம் தெரிவித்துள்ளது.இந்த நிலநடுக்கங்கள் இந்தியப் பெருங்கடலில் மாலத்தீவுக்கு அருகில் பதிவாகியுள்ளன. கடலுக்கு அடியில் உள்ள மலைத்தொடரில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.